பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/654

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 அறிவுப்‌ பற்கள்‌

624 அறிவுப் பற்கள் அறிவியலின் இயல்பு வளர்ச்சியும், சமூகம் சார்ந்த வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று அறிவின் அமைப்பும் (system of knowledge) அறிதல் நிகழ்வும் (cognition) இணைந்ததைப் போல ஒருங்கிணைந்து அமை பவையே. இந்த ஒருங்கிணைப்பு அறிவியல் செயல் பாடு என்ற கருத்தில் மேலும் தெளிவாக வெளிப் படும். காண்க, அறிவியல் செயல்பாடு. அறிவுப் பற்கள் அறிவுப்பற்கள் (wisdom teeth) சுமார் 18 வயதில் முளைக்கும். இந்தப் பற்கள், ஒருவனுடைய அறிவு முதிர்ச்சியடையும் தறுவாயில் முளைப்பதால், அறிவுப் பற்கள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் அவனது அறிவுக்கும், இப்பல் முளைப்பதற்கும் ஒருவித உடன்பாடும் இல்லை. வாயின் உள்ளே நிலையான பற்களின் வரிசை யில் கடைசியாக அறிவுப் பற்கள், கடைவாய்ப் பற் களின் (அல்லது) அரைக்கும் பற்களின் வடிவத்தைக் கொண்டுள்ளன. இந்தப் பற்கள் முளைக்கும்போது, அவற்றின் வேர்கள் முழுவதுமாக வளர்ந்து கால்சிய உப்புக் calcium salt) கொண்டு உறுதியாக இருக்கும். அறிவுப் பற்களின் வடிவம் முன் அரைக்கும் பற்களைப் போன்று இருக்கும். அதாவது குமிழ்கள் கீழ்த்தாடை அரைக்கும் பற்களில் ஐந்து அல்லது நான்காகவும், ஆனால் அளவில் சிறியவையாகவும் இருக்கும். கீழ்த்தாடை அரைக்கும் பற்களுக்கு இரண்டு வேர்கள் உண்டு. அவை தனித்தனியாகவும், விரிந்தும், முன்னும் பின்னுமாக இருக்கும். இவ்வித மான வேர் அமைப்பினால் வலுவான உணவுப் பொருள்களை நன்றாக மென்று சாப்பிட முடியும். அந்த வேலைப் பளுவினைத் தாங்கும் வகையில், இயற்கையிலேயே அவை அமைந்துள்ளன. ஆனால் பற்களின் வேர்கள் உருவத்தில் இரண்டாகவிருந் தாலும், அவை ஒருங்கிணைந்து ஒரு வேர் போலத் தோற்றமளிக்கலாம். மேலும் சில சமயங்களில் இந்த வேர்கள் அல்லது ஒருங்கிணைந்த வேர் பின்னர் வளைந்தும் தோன்றும். மேல்தாடை அறிவுப் பற்கள் நான்கு அல்லது மூன்று குமிழ்களுடன் அரைக்கும் பகுதியில் இருக்கும். மேலும், இவை மீண்டும் சிறுத்து ஒற்றைக் குமிழ் வடிவில் எலிப் பற்கள் போன்றும் இருக்கலாம். மேல் தாடை அரைக்கும் பற்களுக்கு மூன்றுவேர்கள் உண்டு. இரண்டு வேர்கள் கன்னப் பக்கமும், மூன்றாவது வேர் அண்ணப் பக்கமாகவும் இருக்கும். இந்த வேர்கள் தனித்தனியே விரிந்து காணப்படும். மேலும், அவை மூக்கின் இரு பக்கமுள்ள மேல்தாடை காற் றறையின் கீழ்ச்சுவரின் அருகேயும் உள்ளன. மேல் தாடையின் அறிவுப் பற்களின் வேர்கள் மூன்றே எனினும், அவை தனித்தனியாகவும் இருக்கலாம் அல்லது ஒன்றாக இணைந்து ஒரு வேர் போலவும் தோற்றமளிக்கலாம். அறிவுப் பற்கள் சீராகவும், நேராகவும் பற்களின் வரிசையில் இருப்பின் அந்தப் பற்களினால் பயன் உண்டு. ஆனால் சிறிதளவேனும் இடமாற்றமோ, இடப் பெயர்ச்சியோ ஏற்பட்டுத் தொல்லை தரும் நிலையிலிருக்குமானால் அந்தப் பற்களை நீக்கிவிடு வதுதான் சாலச் சிறந்தது. நமது முன்னோர்கள் எனப்படும் குரங்குவகை இனங்களின் முகம் முன் துருத்தியிருப்பதாலும், பற் களைக் கொண்ட தாடை எலும்புகள் நீண்டிருப்ப தாலும், இந்த அறிவுப் பற்கள் நல்ல முறையில் பயன்படுகின்றன. ஆனால், நாளாவட்டத்தில் ஏற் பட்ட படிமலர்ச்சி மாற்றத்தால் (evolution) மனி தன் நிற்கும் வாட்டம் பெற்றான். முன் துருத்திய முகம் சிறுத்து, சிறிய தாடைகள் ஏற்பட்டன. அடுத்து மூளை பெரிதாக வளர்ந்ததால் மண் டையில் மூளை தாங்கிய எலும்புகள் பெருத்துவிட் டன. இது காரணமாகக் கடைசியாக முளைக்கும் அறிவுப் பற்களுக்குப் போதிய இடம் இருப்பதில்லை. மேலும் இன்றைய மனிதரில் பாதிப்பேருக்கு, இப் பற்கள் முழுமையாக முளைக்க முடியாமல், பகுதி யாகவோ, முழுமையாகவோ புதைந்துவிடுகின்றன. சுமார் 25 விழுக்காடு மக்களுக்கு இயற்கையாகவே இப்பற்கள் உண்டாகாமல் மறைந்துவிடுகின்றன. இவ்விதமாக மறைவு ஏற்படுமேயானால், சிறுத்து விடும் தாடை எலும்பில் பற்கள் கூட்டம் ஏற்படுவ தில்லை; மற்ற தொல்லைகளும் ஏற்படுவது இல்லை. அதுபோலவே முளைக்காத, புதைபற்கள் ஒரு சில பேருக்குத் தொல்லை தராமல் இருக்கும். தொல்லை தரும்பொழுது அதன் தன்மை பலவகை யாக இருக்கும். சாதாரணமாக, மேலே படர்ந்த திசுக்களி டையே சீழ் ஏற்பட்டு அழற்சி ஏற்படுவது மட்டு மல்லாமல், வாய் திறவா வண்ணம் இறுக்கிப் பிடித்து விடும். மேலும், இந்த அழற்சி, தாடை உள் எலும் பிடையே பரவி, புரை ஏற்படும். அடுத்துத் தொண் டை வாயின் கீழ்ப்புறம் வீங்கி, சுவாசிக்க முடியாத படி மூச்சு தட்டும். தீவிரமாக அழற்சி வேகம் ஏற் படுமேயானால் மூச்சு தட்டி இறப்பும் ஏற்படும். இந்த அழற்சி பெருகி, வாயின் வெளிப்புறம் வெளிப் பட்டுச் சீழ் கொட்டும்.