அறுகோணப் படிகத் தொகுதி 637
(zig-zag) விளிம்புகளைக் கொண்டுள்ளன. இவ் வமைப்பு ஈரறுகோண கூம்புப் பட்டக அமைப்பி னின்று ஒன்றைவிட்டு ஒன்றான இணைப் (pair) பக்கங்களைக் கொண்ட படிக அமைப்புப்பெற்ற தாகும். இதனுடைய கீழ்பகுதியில் இருக்கக்கூடிய பக்கங்கள் அதன் மேற்புறப் பகுதியில் இருக்கக்கூடிய அமைப்பின் நிலைக்குத்து வரைகளில் வருவதில்லை. இது அடுத்தடுத்த இணைப் பங்கங்களைக் கொண்டு உருவாகி இருப்பதால் இவற்றிலும் நேர்மறை (2131) எதிர்மறை (1231) என்ற இரு வகையான ஒவ்வாக் கூம்புப் பட்டகங்கள் உருவாகிக் காணப்படுகின்றன. படம் 14 (அ) வில் ஒவ்வாக் கூம்புப் பட்டகம் (2131) ஓர் அடிப்படைச் சாய்சதுரத்தின் (1011) பக்கவாட்டு விளிம்புகளைச் சரித்து(bevel) அமைந்துள்ளது. படம் 14 (ஆ) இல் எதிர்மறை ஒவ்வாக் கூம்புப் பட்டகம் (1341) ஓர் எதிர்மறைச் சாய்சதுரத்தின் (0221) பக்க வாட்டு விளிம்புகளைச் சரித்து அமைந்து காணப் படுகிறது. அதனின்று ஓர் அடிப்படைச் சாய் சதுரத் திற்கும் ஓர் ஒவ்வாக் கூம்புப் பட்டகத்திற்கும் உள்ள தொடர்பைப் படம் 14 (அ), (ஆ) இல் ஒரு சாய் சதுரத்தின் படிக நிலையச்சின் நீள விகிதத்தைப் போன்று மூன்று மடங்கு நீளவிகிதத்தை ஒவ்வாக் கூம்புப் பட்டகம் கொண்டுள்ளது என அறிகிறோம். அதேபோல் அடுத்த படத்தில் (14ஆ) கூறப்பட்டுள்ள எதிர்மறை ஒவ்வாக் கூம்புப் பட்டகம் இரு மடங்கு அதிகமான நிலையச்சு நீள விகிதத்தைப் காணப்படுகிறது. பெற்றுக் அறுகோணப் படிகத் தொகுதி 637 இவ்வகுப்பில் அறுகோணத் தொகுதியின் இயல்பு வகுப்பில் காணப்படக்கூடிய அடியிணை வடிலப் பக்கம் (0001), முதல்வகை (1010). இரண்டாம் வகைப் (1120) பட்டகங்கள், இரண்டாம்வகைக் கூம் புப் பட்டகம் (1121) பக்கங்களும் இச்சாய்சதுர இயல்பு வகுப்பில் காணப்படும். இரண்டாம்தரக் கூம்புப் பட்டகம் இதில் காணப்படும்போது அவற்றை அறுகோண இயல்பு வகுப்பில் காணப் படும் கூம்புப் பட்டக அமைப்புக்குரிய சமச்சீர்மைத் தளத்திலிருந்து வேறுபடுத்திக் காண்பது இயலாத தாகும். இதனுடைய சாய்சதுரப் படிக அமைப்புகள் கலந்து காணப்படாதபோது இவ்வகுப்பிற்கே உரித் தான முக்கோண மூலக்கூற்றுச் சமச்சீர்மைத் தளத் தைக் (trigonal molecular symmetry) காட்டக்கூடிய அரிப்பு உருவ அமைப்புகளைக் (etching figures) கொண்டு வேறுபடுத்திக் காணலாம். இவ்வகுப்பில் ஃஎமடைட்டு, கால்சைட்டு (calcite),குருந்தம் (corun- dum) ஆகிய கனிமங்கள் உருவாகின்றன. அரையுருவச் சாய்சதுரப் பட்டக வகுப்பு (rhombho- hedral hemimorphic class) (21) அல்லது டூர்மலின் வகை. இது வழக்கிலிலுள்ள 32 படிக வகுப்புகளில் 21ஆவது வகுப்பாகும். இவ்வகுப்பில் டூர்மலின் (tourmaline), பைரார்ஜிரைட்டு (pyrargyrite), புரௌ ஸ்ட்டைட்டு (proustite) போன்ற கனிமங்கள் படிக மாகின்றன. இவ்வகுப்பில் சாய்சதுரப்பட்டக இயல்பு வகுப்பில் காணப்பட்ட நிலையச்சிற்கு இணையான 44 P படம். 14. கால்சைட்டு (அ,ஆ) ஸ்பாங்கோலைட்டு (இ, ஈ) கனிமத்தோற்றங்கள் 1011.06 பக்கங்கள் Y 2131, 12 பக்கங்கள் 0221, 06 பக்கங்கள் X 1341, 12 பக்கங்கள் a 1120,06 பக்கங்கள் p 1122, 12 பக்கங்கள் 0 - 1124, 12 பக்கங்கள் C 0001, 02 பக்கங்கள் நேர்மறைச் சாய்சதுரம் நேர்மறை ஒவ்வாக் கூம்புப் பட்டகம் - எதிர்மறைச் சாய்சதுரப் பட்டகம் எதிர்மறை ஒவ்வாக் கூம்புப் பட்டகம் அறுகோண இரண்டாம் வகைப் பட்டகம் அறுகோண இரண்டாம்வகைக் கூம்புப் பட்டசும் அடியிணை வடிவப்பக்கம்