பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுவதும் அளவில் அதிகரித்துக் கொண்டே செல் கிறது. ஆனால் ஹிஸ்ட்டிடின் நான்கு மாத அளவில் அதிகப்படியான வெளியேற்ற அளவை அடைந்து பின் அதே அளவில் பேறுகாலம் முழுவதும் நீடிக்கிறது.

அமினோ அமில நீரிழிவிற்கான காரணங்களை நோய்க்கூற்று இயல் அமினோ நீரிழிவு (pathological aminoaciduria) எனவும், சிறுநீரகலழி அமினோ நீர் ழிவு (renal aminoaciduria) எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம்.

நோய்க்கூற்று இயல் நீரிழிவு. இயல்பற்ற அதிகப்படி யான அமினோ அமிலங்கள் பலவகை மரபுவழி உயிர் வேதியியல் கோளாறுகளால் சிறுநீரில் வெளி யேறுகின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அமினோ அமிலங்களின் அடர்த்தி இரத்தத்தில் அதி சுமாதல் மிகை அமினோ அமில நீரிழிவு (overflow aminoaciduria) எனப்படும். அமினோ அமில வளர் சிதை மாற்றப் பாதையில் பயன்படும் சில நொதி களின் (enzymes) மரபுவழிக் கோளாறுகளால் ஃபினைல் கீட்டோன் நீரிழிவு (pheny) ketonuria), மாப்பிள் சாறு சிறுநீர் நோய் (maple syrup urine disease), ஹிஸ்ட்டிடின் நீரிழிவு (histidinuria), ஹோ மோசைட்டின் நீரிழிவு (homocytinuria) போன்ற அமினோ அமில நீரிழிவுகள் காணப்படும்.

தீவிரக் கல்லீரல் சிதைவில் அமீன் நீக்கம் (deamination) குறைந்து இரத்த அமினோ அமில் அளவு மிகுந்து, சிறுநீரில் வெளிப்படும்.

சிறுநீரக வழி அமினோ அமில நீரிழிவு. சிறுநீரக நுண்குழல்களின் மீண்டும் உறிஞ்சும் திறன் (reabsorption) பாதிக்கப்படுவதால் சிறுநீரகவழி அமினோ அமில நீரிழ்வு ஏற்படுகின்றது. எடுத்துக் காட்டு, சிஸ்ட்டைன் நீரிழிவு (cystinuria).

மரபுவழி நொதிக் கோளாறுகளால், சிறுநீரக நுண்குழல்களில் மீண்டும் உறிஞ்சும் தன்மை பாதிக் கப்பட்டு அமினோ அமில நீரிழிவு காணப்படும்.

சிறுநீரக நுண்குழல் சிதைவால் மீள் உறிஞ்சல் தன்மையிலும், கடத்தல் முறையிலும் (transport mechanism) குறையேற்பட்டு அமினோ அமில நீரிழிவு உண்டாகும்.

சிறுநீரக வழி அமினோ அமில நீரிழிலில் சிறு நீரில் அதிக அளவில் அமினோ அமிலங்கள் காணப் படினும் இரத்த அமினோ அமில அளவு இயல் பாசுவே காணப்படும்.

அமினோ அமில நீரிழிவு 37

பொது சிறுநீரக வழி அமினோ அமில நீரிழிவு காணப்படும் நோய் நிலைகள்

மரபுவழி நோய்கள் (Inherited Diseases ) சிஸ்டினோசிஸ் (cystinosis) கேலக்டோசீமியா (galactosaemia) மரபுவழி ப்ரக்டோஸ் தாங்காத் திறன் (hereditary fructose intolerance) க்ளைக்கோஜன் சேமிப்பு நோய்-வகை-1 (glycogen storage disease type-1) தைரோசினோசிஸ் (tyrosinosis) வில்சன் நோய் (wilson's disease)

முழுமையற்ற எலும்பு உருப்பெறல் (osteogenesis imperfecta)

பிறவி சிறுநீரகக் குழல் வழி அமில மிகைவு (congenital renal tubular acidosis) பிறவி இரத்த அழிவு இரத்தச் சோகை

(congenital haemolytic anaemias)

ஃபேன்கோனி நோய்க்குறித் தொகுதி

(f ancon synptome)

புஸ்பி நோய்க்குறித் தொகுதி (b usby syndrome) லுாடர்- செல்டன் நோய்க்குறித் தொகுதி (Iudersheldon syndrome)

பெய்னி நோய்க்குறித் தொகுதி (painc's syndrome)

பெற்ற நோய்கள் (Acquired diseases)

நச்சுப் பொருள் (Toxic substances)

கேட்மியம் (cadmium)

துத்தநாகம் (Zinc)

யூரேனியம் (urarium)

பாதரசம் (mercury)

நைட்ரோ பென்சீன் (nitro benzene)

லைசால் (1ysol)

சலிசைலேட்டு (salicylate)

மலீயிக் அமிலம் (maleic acid) உணவுச் சத்துப் பற்றாக்குறை. க்வாஷியார்கர் (kwashiorkor)

உயிர்ச்சத்துக்கள் குறைவு, பி15, சி, டி (vitamin B 12, C, D deficiency)

முதல் நிலை மிகை பாராதைராய்டு இயக்கம் (primary hyper parathyroidism)

தீக்காயங்கள்

புற்றுநோய்கள்

சிறுநீரக நோய்கள்