642 அறுத்துவம்
642 அறுத்துவம் 120 . படம். 1 இயற்போக்கு அறுகோணம் அமைவதுடன் தின் உச்சிகள் ஒரு வட்டத்தில் அதன் ஒவ்வொரு பக்கமும் சுற்றுவட்ட ஆரத்திற்குச் சமமாகவும், பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணம் 120°-க்குச் சமமாகவும், அதன் பரப்பு 2.598r ஆகவும் இருக்கும். இங்கு - என்பது சுற்றுவட்ட ஆரமாகும். அறுத்துவம் அறுத்துவம் அல்லது அறுவை மருத்துவம் (surgery) பழங்காலத்திலிருந்தே கையாண்டு வந்த ஒரு மருத்துவமுறை, மிருகங்கள், வனவிலங்குகள், விபத்துக்கள், போர்க்காயங்கள் முதலியவற்றை அறுத்துவம் மூலம் தான் குணப்படுத்த முடிந்தது. அறுத்துவர் (surgeon) என்பவர் அறுவை முறை களில் தேர்ச்சியும் ஞானமும் பெற்ற மருத்துவரே யல்லாமல், வெறும் கத்தியால் அறுப்பதற்கும், அல்லது புற்று முதலிய நோய்களைச் சுட்டெரிக்கும் அளவிற்கு மட்டும் தெரிந்து கொண்டவர் அல்லர். உடலில் அன்னார்,தச்சு, கொல்லு, சித்து, சக்கிலி முதலிய வேலைகள் செய்தாலும், அறுத்துவர் உடல் தச்சர் போன்றவர் அல்லர். அவர்கள் அறுவை முறைகளை யும், ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு எந்த நேரத்தில், பல வகைகளுள் எந்த முறையில் அறுத்துவம் நிகழ்த்த வேண்டும், வேறென்னென்ன மருத்துவ முறைகளை யும் கூடவே கையாள வேண்டும் என்ற அனுபவமும், படம். 2 ஒழுங்கு அறுகோணம் ஆற்றலும், அறிவும் பெற்றவர். இன்னும் முக்கிய மாக, எப்போது ஏதாவது ஒரு வித அல்லது எவ்வித அறுவைச் சிகிச்சையும் செய்யக்கூடாது என்று பகுத் தறியும் திறனும் பெற்றவர். அறுத்துவத்திற்குப் பல கருவிகளும் சாதனங்க ளும் தோன்றியிருந்தாலும், அறுவை முறை ஒரு கைப்பழக்கமான சாத்திரமாகும். சிலருக்கு வேகமாக வும், மென்மையாகவும், சாதுரியமாகவும் கருவிகளை யும் திசுக்களையும் நன்கு கையாளும் முறைகள் அமைந்து விடுகின்றன. இவர்கள் இன்னும் அதிக முயற்சியாலும் உழைப்பாலும் மேலும் சிறந்த திறமை யைப் பெறலாம். வேறு சிலருக்குக் "கைவிரல்க ளெல்லாம் கட்டை விரல்கள்" என்றவாறு இத் திறமை இல்லாமல் சிரமப்பட்டு முயன்று கிட்டாமலும் இருக்கலாம். இவர்கள் அறுத்துவப்பணிக்கு ஏற்ற வர்களல்லர்! குளோரோபாரம் (chloroform), நைட்ரஸ் ஆக் ஸைடு (nitrous oxide) போன்ற மயக்க மருந்துகள், ஈத்தர்த்திரவம் முதலியன சென்ற நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அறுத்துவத்திற்குப் பயன்பட்டன. அறுத்துவம் வளர்ந்ததற்கு மயக்கக் கலை முதிர்ச்சி ஒரு முக்கிய காரணம். நுண்ணுயிரி கள் நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருள்களிலும், காற்றிலும் சுட உள்ளன. இவற்றை நீக்கினால் அல்லது அழித்தால் அறுத்துவக் காயங்கள் சீழ்ப் பிடிக்காமல் ஆறலாம் என்ற கண்டுபிடிப்பும்