பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/678

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 அறுவடை எந்திரங்கள்‌

648 அறுவடை எந்திரங்கள் திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வ தற்கும் எளிதாக உள்ளது. இதன் செயல்திறன், செய்யும் அறுவடை திறன் முறை அனைத்தும் துளறில் இணைக்கப்பட்ட கருவிக்கு ஒப்பானதாகும். கூட்டு அறுவடை எந்திரம். எந்திரம். இது இது அறுவடை செய்யும் பகுதி, கதிரடிக்கும் பகுதி, தூற்றும் பகுதி ஆகிய மூன்று முதன்மையான பகுதிகளையும் கொண் டுள்ளதால் ஒன்றிணைந்த கூட்டு அறுவடை எந்திரம் (combined harvester) எனப்படுகிறது (படம் 4). இவ் வெந்திரத்தின் முன் பகுதியில் அறுவடை செய்யும் உறுப்பும், நடுப்பகுதியில் மணிகளைப் பிரித்தெடுக்கும் உறுப்புடன் மணிகளைக் கோணிப்பைகளில் திரட்டும் உறுப்பும்,பின்பகுதியில் தூற்றும் உறுப்புடன் மணி களைக் கோணிப்பைகளில் திரட்டும் உறுப்பும் அமைக் கப்பட்டுள்ளன. 35 குதிரைத் திறன் கொண்ட இழு பொறியை (tractor) இவ்வெந்திரத்தை இயக்கவும். வயல்களில் இழுத்துச் செல்லவும் பயன்படுத்தலாம். இவ்வெந்திரத்தை இழுபொறியின் வலது புறத்தில் இணைக்கும்பொழுது எந்திரத்தில் நடுப்பகுதி இழு பொறியுடன் இணைந்திருக்கும். நெல், கோதுமை போன்ற பயிர்களை அறுவடை செய்ய இது மிகவும் ஏற்றதாகும். நெற்பயிரின் கதிர்களை அறுவடை செய்யும் பகுதிக்கு வளைத்துக் கொடுக்கும் உருட்டி (reel), அறுவடை செய்யும் வெட்டலகு (cutter bar), அறுவடை செய்யப்பட்ட கதிர்களை ஒன்று திரட்டி எடுத்துச் செல்லும் பகுதி (auger and elevator), சுழலும் உருளையுடன் கூடிய கதிரடிக்கும் உருள்கலமும் தொட்டியும் (thrashing drum and concave), தர வாரியாகப் பிரித்தெடுக்கும் சல்லடை (sieves), தூற்று வான் (winnower), நெல் திரட்டும் பகுதி ஆகியவை இவ்வெந்திரத்தின் முதன்மையான பகுதிகளாகும். இவ்வெந்திரத்தைக் கொண்டு வயலில் அறுவடை. செய்யும்பொழுது பயிர்களை அறுத்தல், மணிகளைக் கதிரிலிருந்து பிரித்தெடுத்தல், தூற்றுதல், பதர் நீக்கிய மணிகளைக் கோணிப்பைகளில் சேகரித்தல் ஆகிய வேலைகள் யாவும் தொடர்ந்து ஒரே சமயத்தில் படம் 4. கூட்டு அறுவடை எந்திரம்