அறுவடைக் குறியீடு 651
அறுவடைக் குறியீடு 651 இருந்தால், அறுவடைக் குறியீடு: 4/6=0.66 ஆக அமையும். இக்குறியீட்டு விகிதம் (ratio) மிகுந்தால் ஆதாய மிக்க விளைச்சலும் மிகும். எனவே இப்பயிரை மட் டுமே பல்வேறு பயிர் சோதனைகளுக்கு மிகுதியான அறுவடையைத் தரும் பல நற்பண்புகளைக் கொண்ட முன் மாதிரிப் பயிராக (idio type) எடுத்துக்கொள் வது வழக்கம். தானிய சான்று 3. ஒரு பயிரின் எடை ஒரு கிராமாகவும், தட்டை எடை 2 கிராமாகவும் இருந் தால் அறுவடைக் குறியீடு: 1/3 = 0.33 ஆக அமையும். இச்சான்றில் அறுவடைக் குறியீடு குறைவாகக் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அப் பயிரில் தழை வளர்ச்சி (vegetative growth) மிகுந்து, நிழலினால் பாதிக்கப்பட்டு, ஒளிச்சேர்க்கை (photo- synthesis) குறைவதாகும். பொதுவாகத் தழை வளர்ச்சி குறைவாக இருக்கும் பயிரை ஆய்வுகளில் சேர்ப்பது வழக்கம். பொதுவாகத் தீவனப் பயிர் களில் (forage crops) உவர்ந்த மொத்தப் பொருள் அல்லது உயிர்க் கூட்டுப் பொருள் (biomass), உற் பத்தி பொருளாதார அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், பேணி வளர்க்கப்படும் (domes- ticated) பயிர்களில் இந்நிலையை எதிர்ப்பார்க்க முடியாது. இப்பயிர்களில் ஒரு சிலபகுதிகளே உழவர் களுக்கு முக்கியமாக உள்ளன. தட்டை, வைக்கோல், தாள் போன்ற மற்ற பகுதிகள் சிறப்புக் குறைந்தவை உள்ளன. உயிர்க்கூட்டுப் பொருள் உள்ள எப்பகுதிகள் பொருளாதாரத்தில் பயன்படும் பகுதிகளாக (economic products) மாறுகின்றன என் பதையே பொருள் அறுவடை குறிக்கும். யாக ஒரு பயிரில் தழை வளர்ச்சி போன்ற உற்பத்திப் பகுதிகளுக்கும், பொருள் விளைச்சல் தரும் சேமிப்புப் பகுதிகளுக்கும் ஒரு சமன்பாடு (balance) அவசியம். உலர்ந்த மொத்தப் பொருள் மிகுந்தால்தான் பொருள் அறுவடை மிகும். தானியப் பயிர்களின் மிகுதியான பெருக்கம் ஏற்படும்பொழுது அவற்றிற் கிடையே சூரிய ஒளிக்கும் நீருக்கும் போட்டி ஏற்பட் டுக் குறைவான தானியங்கள் அல்லது அதிக அளவு பதர்களைக் கொடுக்கக் கூடும். நிலைநிறுத்தும் ஆதாயமிக்க ஆதாயமிக்க விளைச்சலினுடைய பண்புகள். தானியப் பயிர்களில் விளைச்சலை உறுதிப்படுத்துவதற்கும், அவற்றை வேளாண்மை செய்வதற்கும், பயிர்ச் சோதனைகளில் பயன்படுத்துவதற்கும் ஒரு வாய்பாடு (formula) உள்ளது. பின்காணும் இவ் வாய்பாட்டை ஆய்வாளர் கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் Y = axbx cx d Y = ஒரு குறிப்பிட்ட பரப்பளலில் விளையும் தானிய விளைச்சல் a b d ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் வளர்க்கப் ட்டும் பயிர்களின் விளைச்சல் = ஒரு பயிரில் காணப்படும் வளமிக்க சிம்பு கள் (tillers) ஒரு கதிரில் காணப்படும் தானிய மணி களின் எண்ணிக்கை தனிப்பட்ட தானிய மணியின் எடை ஆதாய அறுவடையைப் பெறுவதற்கு வயல் களில் பயிர்களின் எண்ணிக்கை சீராக இருப்பது அவசியம். மக்காச் சோளச் சாகுபடியில் பயிர் களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறும்பொழுது விளைச்சல் குறைந்து விடும். ஆனால், பருத்திச் சாகுபடியில் பருத்திப் பயிர்களின் எண் ணிக்கை மிகுதியாக இருந்தாலும் அவை ஒன்றோ டொன்று இணைந்து வளரும் இயல்புடையன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆதாய அறு வடையைச் சீராகப் பெறுவதற்குப் போதிய சூரிய ஒளியும், நீர் வசதியும் சீரிய வேளாண்மை வழி முறைகளும் இன்றியமையாதவை. நூலோதி -2 அ. 1. Arnon, I., Biologieal and Economic Yields in Physiological Aspects of Dryland Farming. (ed. Gupta, U.S). 1975. 2. Donald, C. M., Competition among Crop and Pasture Plants. Adv. Agron. Vol. 15, 1963. 3. Evans, L. T., Crop Physiology, Sons, Ltd., 1975. Blackie & 4. Harper, J. L., Approaches to the study of plant in competition Mechanisms in Biological Competition. (ed. Milthorpe. FI, 15th Symp. Sec. Exp. Biol.), 1961. 5. Holliday, R., Plant Population and Crop Yield, Field Crop Abstr. Vol. 13,1960. 6. Nichiporovic, A. A.,Photosynthesis and the Theory