அறுவடை பின்சார் தொழில் நுட்பவியல் 653
அறுவடை நிலா ஓரளவு உயர்ந்த வட அகலாங்கில் (high northern latitude) உள்ள இடங்களில் செப்டம்பர்த் திங்கள் 23ஆம் நேதியை ஒட்டிய இலையுதிர் காலத் (autumn) தொடக்கத்தில் சூரியன் மறைந்த சிறிது நேரத்திற் கெல்லாம் சந்திரன் உதயமாகும். பகல் நேரம் குறை வாகவும் இரவு நேரம் அதிகமாகவும் உள்ள இக் காலம், பல இடங்களில் அறுவடைக் காலமாகும். குறைவான பகல் நேரத்தில் முடிக்க முடியாத அறு வடை வேலைகளைத் தொடர்ந்து செய்து முடிக்க, உழவர்களுக்கு நிலாவொளி கிடைப்பதால், செப்டம் பர் திங்கள் 23ஆம் தேதியை ஒட்டித் தோன்றும் முழுச் சந்திரனுக்கு அறுவடை நிலா (harvest moon) என்றும், உழவர் நிலா (farmer's moon) என்றும் பெயரிட்டுள்ளனர். சூரியனைப் பொறுத்துச் சந்திரன் புவியை ஒரு சுற்றுச் சுற்றிவர ஆகும் காலவட்டம் (period) ஒரு சூரிய வழி மாதம் (synodic month} எனப்படும். இம்மாதத்தின் கால அளவு 29.53 நாள்கள் ஆகும். புவியில், ஏதேனும் ஓர் இடத்தில் தோன்றும் அடுத்தடுத்த சூரிய உதயங்களுக்கு இடையேயுள்ள கால இடைவெளி ஒரு சூரியவழிநாள் (solar day) அல்லது ஒரு நாள் எனப்படும். சூரியன் உச்சி வட்டத்தைக் (meridian) சுடக்கும் போது ஏற்படும் அடுத்தடுத்த உச்சிக் கடத்தல் (successive transits ) களுக்கிடையே உள்ள கால இடைவெளியையும் ஒரு சூரியவழிநாள் எனலாம். இவ்வாறே, சந்திரனின் அடுத்தடுத்த இரு உச்சிக் கடத்தல்களுக்கிடையே உள்ள கால் இடைவெளியை ஒரு சந்திரவழிநாள் (lunar day) எனப்படும். மேலும் 28.53 சந்திரவழி நாள்கள் 29.53 சூரியவழி நாள்களுக்குச் சமமாவ தால் ஒரு சந்திர வழி நாள் 24 மணி, 50.5 நிமிடங் களுக்குச் சமமாகிறது. இதன் விளைவாகச் சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கில் முதல்நாள் முழுச் சந்திரன் தோன்றினால், மறுநாள், சூரியன் மறைந்த பின்னர் 50.5 நிமிடங்கள் கழித்துக் குறைச்சந்திரன் கீழ்வானில் தோன்றும். இந்தக் காலதாமதம் ஒரே சீராக இல்லாமல் மாறும் தன்மையுடையதாகையால் சந்திரோதய நேரத்தில் ஏற்படும் தாமதம் சராசரி யாக 50.5 நிமிடங்கள் எனக்கொள்ள வேண்டும். சந்திரோதய நேரத்தில் ஏற்படும் தாமதத்தைக் கணித முறையிலும் நிறுவலாம்.? அகலாங்கு (latitude) உள்ள ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திரனின் நடுவரை விலக்கம் (declination) எனவும், சந்திரோதயத்தின்போது தொடு சூரியனின் வானத்திலிருந்து தோற்றப் பாதை (eclipse) யின் சாய்வு 0 எனவும், ஒரு நாளில் சந்திரன் நகரும் தொலைவு d எனவும் கொண்டால், அறுவடை பின்சார் தொழில் நுட்பவியல் 653 மறுநாள் சந்திரோதய நேரத்தின் தாமதம் (d× Sin0/15 /cos p - sin8 கிடலாம். எனக் கணக் ஓரளவு உயர்ந்த வட அகலாங்கில் உள்ள கனடா, மற்றும் வட ஐரோப்பிய நாடுகளில் உள்ள உழவர்களுக்கு அறுவடை நிலாவின் பயன் அதிக மாக இருக்கும். மிக உயர்ந்த வட அகலாங்கில் உள்ள இடங்களில், கதிரவன் தோற்றப்பாதைக்கும் வான நடுவரைக்கும் (celestial equator) இடையே தொடுவானம் வரும்போது சந்திரோதய தாமதம் மிகவும் குறையும். வெப்பமண்டலத்தில் (torrid zone) உள்ள இடங்களுக்கு ஏறக்குறைய சமபகல் இரவுக் காலமாகையால், குறிப்பிடத் தக்க அளவு அறுவடை நிலாவின் பயன் கிடைக்காது. புவிமீது தென் அகலாங்கில் உள்ள டங்களுக்கு, முழுச் சந்திரன் இளவேனிற் சமஇரவுப் சமஇரவுப் புள்ளியிலோ அல்லது அதற்கு அருகிலோ ஏற்படும்போது பயனுண்டு. வேடுவர் நிலா hunter's moon). இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் தோன்றும் அறுவடை நிலாவுக்கு அடுத்தாற் போலத் தோன்றும் முழுச் சந்திரனின் உதய நேரம் 50.5 நிமிடங்களுக்குக் குறைவாகவே இருக்கும். இக்காலம் மேனாட்டவர் களின் வேட்டைக் காலமாகும். இதனால் முன் னிரவுப் பொழுதிலேயே வேட்டையை முடித்துக் கொண்டுத் திரும்பப் பயன்படுவதால் இம் முழுச் சந்திரன் 'வேடுவர் நிலா' என அழைக்கப்படுகிறது. நூலோதி தி.வீ. 1. கோவிந்தராசன் தி. & முத்துசாமி, கொ. வானியல் (முதல் புத்தகம்), கல்லூரி நூல் வெளியீட்டு இயக்கம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1971. பது, அறுவடை பின்சார் தொழில் நுட்பவியல் பசுமைப் புரட்சியின் (green revolution) விளைவாக, விளைச்சல் பன்மடங்கு பெருகியுள்ளது. ஆனால், விளைச்சலைச் சரியான முறையில் அறுவடை செய் பாங்காகப் பதன் செய்யாத காரணத்தால், நமது நாட்டில் ஆண்டொன்றுக்குப் பலகோடிரூபாய் மதிப் புள்ள உணவுப் பொருள்கள் வீணாவதாகக் கணக் கிடப்பட்டுள்ளது.கதிரடிக்கும்போது1.70விழுக்காடும் பொருள்களை எடுத்துச் செல்லும் போது 0.51 விழுக்