662 அறுவை நோய்களில் நுண்ணுயிர்க் கொல்லிகள்
662 அறுவை நோய்களில் நுண்ணுயிர்க் கொல்லிகள் சிறுநீர்ப்பாதை போன்ற உடற்பகுதிகளில் வளரும் தழும்புகள் சுருங்கி அப்பாதைகளைக் குறுக்கிச் சில வேளைகளில் அடைத்து விடவும் கூடும். தோற்பரப் பில் அளவுக்கு மீறி வளரும் பெருந்தழும்புகள் வேர் வைக் கசிவு, நுண்ணுயிர்ச் சேர்க்கை முதலியவற்றால் புண்ணாகிப் பெருந்தொல்லை விளைவிக்கலாம். புற்று நோய் இப்பெருந்தழும்புகளையொட்டிப் வளரக்கூட வாய்ப்புண்டு. இத்தழும்புகளை அடிக்கடி உராய்ந்தாலோ, வெட்டி நீக்க முயன்றாலோ இத்த கைய புற்றுநோய் வளரும் வாய்ப்பு மிகுதியாகும். நூலோதி கா.லோ. 1. Darischristopher, Text Book of Surgery, Vol- ume 1 & 2 Saunders Publications, London. 2. Mauney, F.M., Elbert P.A., and Sabiston D.C., Post operative myocardial infarction - a study of predisposing factors, diagnosis & mortality in high risk group of surgical patients, Ann- Surg - 1970. 3. Harding Rains, A.J., & David Ritchic, H., Bailey & Love's Short Practice of Surgery. H.K. Lewis & Co., Ltd., London. 1977. 4.James Moroney. Surgery for Nurses, The Eng- lish Language Book Society & Churchill, Livingstone. 1984. அறுவை நோய்களில் நுண்ணுயிர்க் கொல்லிகள் "நோய்" என்ற சொல் அறுவை சிகிச்சையில் பலவிதமான பொருள்களில் உபயோகப்படுத்தப் படுகிறது, ஆயினும், "நோய்" என்றால், உடம்பில், காயங்களில் நுண்ணுயிரிகள் (bacteria) நுழைந்து, அதனால் ஏற்படும் மாறுதல்களைத்தான் குறிக்கும். வகை அறுவை சிகிச்சை நோய்களை மூன்று களாகப் பிரிக்கலாம். மருத்துவமனையில் தங்குவதால் ஏற்படுவது, ஒரு நோயாளியிடமிருந்து மறு நோயா ளிக்குப் பரவுவது, மற்றும் நோயாளியின் உடம்பின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவுவது எனப் பிரிக்கலாம். பண்டைக் காலத்தில் நடந்த போர்களில், வீரர் களுக்கு ஏற்பட்ட காயங்கள், காயங்களின் தன்மை காயம் ஆறும் கால அளவு, அப்போது ஏற்படும் நோய்கள், நோய்களுக்குக் காரணமாயிருந்த நுண் ணுயிரிகள், இவைகளைப் பற்றி முழுமையான விவரங்கள் கிடைத்துள்ளன. அறுவைசிகிச்சை வரலாற்றில், டாக்டர் லிஸ்டர் என்பவர் முக்கிய பங்கு பெறுகிறார். அவர் அல்லும் பகலும் ஆராய்ந்து, அறுவை சிகிச்சையில் ஏற்படும் அழற்சிகளைப் பற்றிப் பல விவரங்களைச் சேகரித் தார். இதனால் அறுவை சிகிச்சை முறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இச்சமயத்தில் லூயிஸ் பாஸ்டர் என்ற மருத்துவர் நுண்ணுயிரிகள் காற்றின் மூலமாகப் பரவுவதைக் கண்டு பிடித்தார், அக் கிருமிகளைக் கொல்ல, கார் பானிக் ஆக்ஸைடு (carbonic oxide), ஐயோடின் (iodine), மெர்க்குரி பெர்குளோரைடு (mercuric perchloride) போன்ற மருந்துகளை உபயோகப்படுத் தினார். இதனால், அறுவை சிகிச்சை முறையில் முன்னிருந்த ஏறத்தாழ 100 விழுக்காடு மரணத்தை மிகவும் குறைத்தார். அறுவை சிகிச்சையில் ஏற்படும் நோய்களைத் தடுக் கும் முறைகள். வருமுன் காப்பது என்ற வகையில், நோய்களைத் தடுக்கப் பல விதமான முறைகள் உள்ளன. அவைகளைக் கடைப்பிடிப்பது தலையாய கடமையாகும். அறுவை சிகிச்சை செய்பவர் (surgeon) அறுவையின் போது சிலருக்குத் துணைபுரிவோர், சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், இவர்கள் யாவரும் மிகச் சுத்தமான நிலையில் இருத்தல் அவசிய மானதாகும். அது போலவே சிகிச்சை நடக்கும் அறுவை அரங்கம், அங்கு உபயோகப்படுத்தப்படும். ஆயுதம், ஊசிகள், தையல் நூல்கள், மற்ற துணைக் கருவிகள், கட்ட உதவும் துணிகள் (bandages), ஆகி யவையாவும் சுத்தமாக,தூசியின்றி, நுண்ணுயிரின்றி இருத்தல் அவசியம். இத்தனை தடுப்பு முறைகளைக் கடைப்பிடித் தாலும், சிற்சில நேரங்களில், அறுவை சிகிச்சைக்குப் பின், அழற்சிகள், சீழ் கட்டுதல், இரத்தம் கட்டுதல், நோய்கள், புண்கள் ஆறாதிருத்தல் போன்றவைகள் ஏற்பட்டுவிடும். இதற்கான காரணங்கள் கீழ்க்கண்ட வற்றுள் ஒன்றாகவோ, கூட்டாகவோ இருக்கக் கூடும். 1) காயம் ஏற்பட்ட இடத்தில், அழுக்கும் நுண்ணுயிரிகளும்முன்னமே தங்கியிருந்து சீழ் கட்டி யிருத்தல். 2) சீழ்கட்டியதால், நுண்ணுயிரிகள் பெருகி இரத்தத்துடன் கலந்து, உயிருக்கு ஆபத்தான நிலை களை ஏற்படுத்தல்.