அறுவை நோய்களில் நுண்ணுயிர்க் கொல்லிகள் 663
3) நோயாளியின் உடம்பில், நோய்த் தடுப்புச் சக்தி குறைந்திருந்து, அதனால் அதனால் நுண்ணுயிரிகள் வளர வாய்ப்பு ஏற்படுதல். 4) காயம் ஏற்பட்ட இடத்தில் தோல்கள் கெட் டிருத்தல், இரத்தம் கட்டி இருத்தல், அதிக இரத்தப் போக்கு ஆகியிருத்தல். 5) அறுவை சிகிச்சைக்குப் பின், நோயாளியின் மார்பில் சளி கட்டுதல், ஒவ்வாத இரத்த தானம், அதனால் ஏற்படும் மஞ்சள் காமாலை, சிறு நீரகங்கள் சீராக வேலை செய்யாதிருத்தல். அறுவை 6) பக்கத்து நோயாளியிடமிருந்து, நோயாளிக்கு நுண்ணியிரிகள பரவுதல், காயத் திற்குப் போடப்படும் கட்டுத் துணிகள் அசுத்தமாக இருத்தல் ஆகியவைகளாகும். அறுவை நோய்களில் நுண்ணுயிரிகள். அறுவை நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் கிராம் நிற ஏற்பிகள் (gram +) என்றும், கிராம் நிற எதிர்ப்பிகள் (gram - ) என்றும் இரு வகைகளாக உள்ளன. கிராம்நிற எதிர்ப்பி நுண்ணுயிரிகள் நியுமோனியா (pneumonia), காதில் சீழ் வடிதல், மூளையில் அழற்சி (meningitis) போன்ற நோய் களை உண்டாக்குகின்றன. கிராம் நிற எதிர்ப்பி நுண்ணுயிரிகளில் பல உட் பிரிவுகள் (sub-divisions) உள்ளன. குடற்காய்ச்சல் (typhoid) காரணமானவை சால்மெனல்வாட்டைபை', (salmonella typhi)'சால்மெனல்லாப் பாராட்டைபை' (salmoneila para typhi) எனபபடும் நுண்ணுயிரி களாகும். இந்நுண்ணுயிரிகள் இரத்தத்தில் கலந்து, பித்தப்பையில் தங்கிக் கொண்டு பித்தப்பையில் (gail bladder) அவ்வவ்போது குடற்காய்ச்சலைக் குறை தீவிர (sub acute) முறையிலேயோ, தீவிர முறையிலேயோ (acute) உண்டாக்க வல்லவை. அறுவை நோய்களுக்கான மருந்துகள். அறுவை நோய்களில் உபயோகப்படுத்தப்படும் மருந்துகள் இரு வகைகளாகும். அவையாவன, அ) செயற்கை முறையில் தயாரிக்கப்படும் வேதியியல் மருந்துகள் (chemotherapy) ஒரு வகை. வழியில் ஆ) மற்றொன்று இயற்கையான வேதியியல் மருந்து வகையைச் சார்ந்த சல் கிடைக்கும் நுண்ணுயிர்க் கொல்லிகள். போனமைட் (Sulfonamide) போன்ற மருந்துகள். நுண்ணுயிரிகளைக் கொல்லவல்லனவல்ல. அவைகள் நுண்ணுயிரிகளை வளராமல், பரவாமல் (bacteriostatic) உபயோகப்படுகின்றன. தடுக்க அறுவை நோய்களில் நுண்ணுயிர்க் கொல்லிகள் 663 வேதியல் மருந்துகளில் பலவித முன்னேற்ற முறையில், சல்போடிமிடின், பாக்டிரிம் போன்ற தீவீர மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இம்மருந்து களில் சேர்க்கப்படும்டிரைமிதோப்பிரிம்(trimithoprim) என்பது நோயைக் கட்டுப்படுத்த அதிக சக்தியைத் தரவல்லது. இவை இரத்தத்தில் கலந்து, நோயைக் கட்டுப்படுத்தியபின், சிறுநீர் வழியாக வெளியேறி விடும். . நுண்ணுயிர்க் கொல்லிகள் (antibiotics). நுண்ணு யிரிக் கொல்லிகள் என்ற மருந்து வகையில் முதலாகக் கண்டு பிடிக்கப்பட்டது பெனிஸிலின் . நுண்ணு யிர்க் கொல்லிகள் காளான்களிலிருந்து தயாரிக்கப் படுகின்றன; சில நுண்ணுயிரிகள் (bacteria) மூலமும் உண்டாக்கப்படுகின்றன. இதனோடு அமைனோ கிளைகோஸைட்ஸ் (aminoglycosides) என்ற மற்ற வகை நுண்ணுயிர்க் கொல்லிகளும் கண்டு பிடிக் கப்பட்டுள்ளன. சல்போனமைடு மருந்து போலல்லாது, நுண்ணு யிர்க் கொல்லிகள், நோய்க் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை (bactericidal). நுண்ணுயிர்க் கொல்லிகள் சார்ந்த மருந்து வகைகளையும், எவ்வித நோய்களுக்கு அவை பயன் படும் என்பதனையும், சில சமயங்களில் இம்மருந்து களால் ஏற்படும் தீங்குகளையும் பற்றித் தெரிந்து கொள்ளுதல் நல்லது. பெனிஸிலின் மருந்து,சல்போனமைடு மருந்தைப் போலல்லாது, சீழ், இரத்தக்கட்டி போன்ற இசை கேடான சூழ்நிலைகளிலும், நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தது. கிராம் + கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்து. இதே போன்று மேகநோய் (syphilis), கேஸ் கேங்கிரீன் (gas gangrene), உடல் விறைப்பு ( tetanus), ஆக்டி னோமைகோஸிஸ் (actinomycosis) முதலான நோய் களுக்கும் ஏற்ற மருந்தாகும். பெனிஸிலின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லி களில், காலத்திற்கு ஒவ்வ, நவீன முறைப்படி, வேறு சில அதி சக்திவாய்ந்த மருந்துகள் கண்டு பிடிக்கப் பெனிஸிலின் பட்டுள்ளன. பென்சைல் (benzyl) 'வி' என்ற மருந்து அமிலச் குழ்நிலையிலும், நோய்க் கிருமிகளைக் கொல்ல வல்லது. ஆகையால், மருந்தை உணவுக் குழாய் மூலம் தரலாம். பாதி இயற்கை - பாதி செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 'மெதிஸிலின்' 2, ஆக்ஸஸிலின் 3, கிளாக்ஸஸிலின் போன்ற மருந்துகள், பெனிஸிவினை விட, அதி சக்தி வாய்ந்தவை. ஏனெனில், சில வேளை களில், பெனிஸிலின் நுண்ணுயிர்க கொல்லிகளையே