அறுவை நோய்களில் நுண்ணுயிர்க் கொல்லிகள் 665
நுண்ணுயிர்க்கொல்லிகள், அவைகளின் தன்மை, எந்த நோய்க்கு எந்த மருந்து ஒவ்வும், ஒவ்வாது, தீங்குகள் பற்றி அறிந்து அதனால் வரும் கொண்டோம். இவையன்றி இம்மருந்துகளை எப்போது உபயோகப்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுதல் நலம். நல்ல அறுவை சிகிச்சையிலே குணமாகும் நோய்க்கு, நுண்ணுயிர்க் கொல்லிகள் உபயோகப் படுத்தத் தேவை இல்லை. தேவையிருப்பின், எந்த மருந்து பொருந்தும் என்பதை நுண்ணுயிர் இயல் (bacteriologist) துறையாளர் மூலம் தெரிந்து கொண்டு, குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட கால நிர்ணயத்தில் கொடுக்க வேண்டும். நோய்களைத் தடுப்பதற்காக மாத்திரம் நுண்ணு யிர்க்கொல்லிகளை உபயோகிப்பது மிகத் தவறாகும். ஆனால், இதற்கும் விதி விலக்கான சில நோய்கள் உண்டு. அவை டெட்னஸ் எனும் விறைப்பு நோய், மற் றும் கேஸ் கேங்கிரீன் (gas gangrene) என்னும் நோய். அறுவை நோயாளியின் வளர்சிதை மாற்றம் இரா. அன. உடலில் காயம் எப்படி ஏற்பட்டாலும் பொதுவாக வளர்சிதை மாற்றம் ஏற்படுகின்றது. தீப்புண் (burns), விபத்து (trauma) அறுவை சிகிச்சை (Sur- gical operation) ஆகியவற்றால் ஏற்படும் காயங்க ளால் உடலில் வழக்கமாக நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இம்மாற்றம் காயங்களைப் பொறுத்து மிகுந்தோ குறைந்தோ ஏற்படும். சிறு காயம் ஏற்பட்டால் இவ்விளைவுகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் காயம் பெரும் அளவில் ஏற்படும்பொழுது நோயாளிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக உள்ள தால் அவற்றைச் சீராக்க அவர்களை மருத்துவமனை யின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்துச் சரிபடுத்து வது அவசியமாகிறது. காயத்திற்குப் பிறகு ஏற்படும் எதிர் விளைவு களைப் பற்றிக் கடந்த இரண்டு உலகப் போர்களின் அனுபவங்களின் வாயிலாக அறிவியல் உலகம் ஓர ளவு அறிந்து கொண்டது. முல்லர் 1884 இல் டைஃப் பாய்டு சுரத்தின் போது அதிக அளவு நைட்ரஜன் உணர்ந்தார். இதைப் சிறுநீரில் வெளியேறுவதை உணர்ந்தார். அ.க-2-84 அறுவை நோயாளியின் வளர்சிதை மாற்றம் 665 போல் பெர்னாடு 1877 இல் அதிக இரத்த ஒழுக் கிற்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை அறிந்தார். பொதுவாகக் காயத்திற்குப் பிறகு உடலில் புர தம் குறைந்து ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கிறது. மேலும் சிறுநீரில் நைட்ரஜன் அதிகம். வெளியேறு கிறது. இதேபோல் எலும்பு முறிவிற்குப் பிறகு உட லில் ஃபாஸ்ஃபரஸ், சல்ஃபேட் போன்றவைகளும் சிறுநீரின் வழி அதிகம் வெளியேறுகின்றன. இம்மாறுதல்கள் குறைவாகவோ கூடுதலாகவோ நிகழ்வதற்குக் காரணங்கள் காயத்தின் தன்மை, அதன் அளவு, சுற்றுப்புற வெப்ப அளவு, ஊட்டச் சக்தி, எயது ஆகியவைதாம். தீப்பட்ட நிலையில் காயத்தின் அளவு அதிகமாக இருப்பதால் அதன் எதிர் விளைவுகளும் அதிக மாகவே ஏற்படுகின்றன. இதேபோல் தொற்று, எலும்பு முறிவு, தசை அழிவு முதலியவை ஏற்படும் பொழுதும் அதிக அளவு வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றத்தைச் சிறு எலும்பு. முறிவின்பொழுது கூட உடல் எடை குறைவதி லிருந்து எல்லோராலும் கண்கூடாக அறிய முடி கிறது. எல்லாக் காயங்களிலும் இம்மாற்றங்கள் ஒரே சமமாக இல்லாது சில மாறுபாடுகளுடனே நடை பெறுகின்றன. தட்பவெட்ப அளவு 3 செண்டிகிரேடு இருக்கும் நிலையில் காயம் ஆறும் காலம் அதிக மாகிறது. இதற்கு மாறாக 28°C 30°C இன் பொழுது வளர்சிதைமாற்றம் மிகக் குறைவாக ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைந்த நிலையிலும் வளர்சிதை மாற்றம் குறைவாகலே ஏற்படுகிறது. வயதைப் பொறுத்த மட்டில் சிறு குழந்தைக்கு அப்போது பிறந்த குழந்தையை விடக் கூடுதலாகவும், இதே போல் வாலிபரைவிட முதியவருக்கு 70 வய துக்கு மேல் குறைவாகவும், எதிர் விளைவுகள் நடை பெறுகின்றன. மற்றும் ஆண்களைவிடப் பெண்க ளுக்கு எதிர்விளைவுகள் குறைவாகவும், முதுமையில் மாதவிலக்கு நிற்பதற்கு முந்திய நிலையை விட மாத விலக்கு நின்ற பிறகு குறைவாகவும் உள்ளன. உடல் இம்மாறுதல்களைச் சரிவர அறிந்துகொள்ள, கூத்பர்சன் என்பவர் வளர்சிதை மாற்றத்தை அதிர்வு நிலை, மீட்பு நிலை என்று இரு நிலைக் ளாகப் பிரித்துள்ளார். உடல் சில சமயம் அதிர்வு நிலையிலிருந்து மீட்பு நிலைக்குச் செல்லாமல், உடல் நலம் குன்றித் தசை அழுகுதல் ஏற்படும். இயல்பாக உடல் அதிர்வு நிலையில் ஆக்சிஜன் தேவைகுறைந்தும்,