666 அறுவை நோய்களில் நுண்ணுயிர்க் கொல்லிகள்
666 அறுவை நோயாளியின் வளர்சிதை மாற்றம் பிறகு மீட்பு நிலையில் மிகுந்தும், அதன்பின் நாளடைவில் சமநிலையும் காணப்படும். ஆனால் தசை அழுகுதல் (necrobiotic) நிலையில் ஆக்சிஜனின் தேவை மிக வேகமாகக் குறைந்து காணப்படுகிறது. உடல் அதிர்வு நிலை. முதல் உலகப் போரின் பொழுது ஃபிரான்ஸ் நாட்டில் காயம்பட்டவர் களுக்குத்தான் உடல் அதிர்வு நிலையினைப்பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்பொழுது உடலில் அமிலம் அதிகமாகும் நிலையும், கீட்டோன் அதீத மாகச் சிறுநீரில் வெளியேறும் நிலையும் (ketonuria) கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல் புரதமற்ற நைட் ரஜன், பிளாஸ்மாவில் கூடுவதால் சிறுநீரில் நைட்ரஜன் வெளியேறும் நிலையும் அறியப்பட்டது. ஆனால் லாக்டிக் அமிலத்தன்மை, கொழுப்பு அமி லம், கிளிசரால் போன்றவை அதிர்வு நிலையில் உய ரும் நிலை அண்மையில்தான் அறியப்பட்டது. உயிரணுக்களில் ஆக்சிஜன் பயன்படும் அளவு, மைட்டோகான்டிரிய (mitochondrial) வளர்சிதை மாற்றம், கிளைகோஜன் சிதைவு (glycolysis) போன் றவை குறைந்து காணப்படும். இத்துடன் உடலில் கிளைகோஜன் குறைந்து கொழுப்பு வெளியேற்றமும் அதிகமாகிறது. இரத்த ஒழுக்கு, சீழ், காயம் முதலியவை தனித் தனியாக அறிவியல் முறையில் உணரப்பட்டாலும் உடல் வளர்சிதை மாற்றம் ஏறத்தாழ ஒரு சில நிலை களில் தவிர ஒரே மாதிரியாகவே நிகழ்கின்றது. அதிக இரத்த ஒழுக்கின் பொழுது லாக்ட்டிக் அமிலம் அதிகமாக உண்டாகிறது. அப்பொழுது மாவுச் சத்துக்கள் தொடர்பான வளர்சிதை எதிர்விளைவு களால் ஏடிபி (ATP) என்ற ஆற்றல் குறைவு படும். ஏற் காயம் பட்டவுடன் வளர்சிதை மாற்றத்திற்கு உடலினுள் சேமித்து வைக்கப்பட்டுள்ள மாவுப் பொருள் அரை நாளிலிருந்து ஒரு நாளுக்குப் போது மானதாக இருக்கும். அதன் பிறகு உடலிலுள்ள புரதம் (14-22 சதவீதம்), கொழுப்பு ஆகியவை மூலமே புதிய மாவுப்பொருள் உற்பத்தியாகி உட லுக்கு வேண்டிய ஆற்றலை அளிக்கிறது. அப் பொழுது இரத்தத்தில் புரதமற்ற நைட்ரஜன் அதிக மாகிறது. ஆனாலும் பெரும் காயம் பட்ட நிலை களில் கூட யூரியா உயருவதில்லை. இரத்தத்தில் கிளிசராலும், கொழுப்பு அமிலமும் மிகுந்து சிறுநீரில் அதிகம் கீட்டோன் வெளியேறும். அறுவையின் பொழுது நீரும். தாது உப்புகளும் உயிரணுக்களுள் சென்று வெளிவரும் நிலைகளில் மாறுதல் ஏற்படுகின்றது. எடுத்துக்காட்டு; சோடியம் உயிரணுவிலிருந்து வெளியேறும் நிலை குறைவதால் பொட்டாசியம், உயிரணுவின் வெளியே மிகுகிறது. இத்துடன் செல்லைச் சுற்றிய சவ்வின் வேலைத் திறனும் குறைந்து காணப்படும். மீட்சி நிலை. உடல் அதிர்வு நிலையைத் தாண்டிய பின் சிறு முக்கியமான வளர்சிதை மாற்றங்கள் மீட்சி நிலையில் ஏற்படுகின்றன. அப்பொழுது நைட்ரஜன், பொட்டாசியம் ஃபாஸ்ஃபேட், சல்ஃபேட், கிரி யாடின், மெக்னீசியம், துத்தநாகம் போன்றவை சிறுநீரில் அதிகமாக வெளியேறும். இளம் திசுக்களின் அழிவால் உடல் எடையும் குறைந்து, ஓய்வு நிலை உடல் வளர்சிதை மாற்றம் (resting basal metabolism rate) மிகுந்து காணப்படும். இம்மாற்றங்கள் புரதச் சிதைவைக் குறிக்கின்றன. பொதுவாக 12இலிருந்து 22% அளவு புரதத்தினாலும், மீதி உயிரணு இணை வின் மூலம் கொழுப்பினாலும் நடைபெறுகின்றன. காயத்தின் அளவு, அதன் தன்மை போன்றவற்றைப் பொறுத்தே இம் மாற்றங்களின் வேகம் மாறுபடு கின்றது. எடுத்துக்காட்டு: குடல் பிதுக்க (hernia) அறுவைக்குப் பிறகு உடல் எடையும் 25-30% குறைந்து, பிறகு உடல் எடையும் நைட்ரஜன் வெளி யேற்றமும் வெளித்தோற்றத்தினால் உணரப்படாத வகையில் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் பெரிய அறுவைச் சிகிச்சைக்குப்பின எடைக்குறைவு, மிகுந்து காணப்படுகிறது. உள்ளே உயிரணு காயம் ஆனால் பட்டவுடன் எடை அதிகமா கிறது. இது பெரும்பாலும் உயிரணுவின் நடைபெறும் ஊடு கலவையின் காரணமாக உயி வில் நீர் அதிகமாவதால்தான் நிகழ்கிறது. இத்துடன் நீரைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் (ADH) அதிகமாவதால் சோடியமும் நீரும் உடலில் தங்கி எடையைக் கூட்டிக் காட்டுகின்றன. ஆனால் அறு வைக்குப் பிறகு சுமார் 1 வாரம் கழித்து மீட்பு நிலையில் உடலிலிருந்து தேங்கிய நீர் வெளியேறு வதுடன் எடை அறுவைக்கு முன் இருந்ததை விடக் குறைந்து காணப்படும். நாளமில்லாச் சுரப்பி. அறுவை முடிந்தவுடன் எபிநெஃபிரினும், நார் எபிநெஃபிரினும் பிளாஸ் மாவில் பல் நாள்கள் கூடுதலாகக் காணப்படும். அப்பொழுது உடலில் கொழுப்பு அழிவு (lipolysis) ஏற்படுவதால் பிளாஸ்மாவில் கொழுப்பு அமிலம், கிளிசரால் போன்றவை கூடுவதுடன் புதிய குளுகோஸ் உற்பத்தி கூடுதலாகிக் கிளைகோஜன் அழிவும் மிகுதியாக ஏற்படும். இம மாற்றங்கள் ஏறத்தாழ உடல் அதிர்வின் பொழுது ஏற்படுவதை ஒத்தே இருக்கும். அண்ணீரகப் (அட்ரினல்) புறணி (adreni cortex) அதிகமாக வேலை செய்வதால் கார்ட்டி சாலின் அளவு அறுவைக்குப் பிறகு சுமார் ஓரிரு