பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/698

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 அறுவை மருத்துவ வரலாறு

668 அறுவை மருத்துவ வரலாறு சிகிச்சை செய்த மருத்துவரின் வலது கை வெட்டப் பட்டுவிடும். இதுபோல, பாரசீசுத்தில் மூன்று முறை தொடர்ந்து அறுவைச் சிகிச்சையில் தோல்வி கண்ட மருத்துவருக்கு, அவர் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை யளிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. கிரேக்கத்தைச் சேர்ந்த ஹிப்போகிரேடிஸ், காலன்(Galen) அரிஸ்டாட்டில் போன்றோர் மருத் துவத்தை முறையாக அறிந்து இக்கால மருத்துவத் திற்கு முன்னோடிகளாய் விளங்கினார்கள். இவர் களில், மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேடிஸ் மருத்துவம் பற்றி 70 நூல்கள் எழுதினார். மதம், மந்திரம், தந்திரம், தத்துவம் போன்றவற்றிலிருந்து மருத்துவத்தை வேறுபடுத்திய பெருமை இவரையே சாரும். இவர் காலத்தில்தான் அறுவைச் சிகிச்சைக்கு முன் மருத்துவர் கைகளைக் கழுவும் பழக்கமும், நுண்ணுயிரிகளை அழிக்கக் கொதி நீரையும் மதுவையும் கையாளும் பழக்கமும் ஏற்பட்டன. காலன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உடற்கூற்றைப் பற்றி நன்கு அறிந்திருந்தமையால் புண் தோன்றும் இடங்களின் அருகிலுள்ள பிற உறுப் புகளில் ஏற்படும் விளைவுகள் பற்றி எழுதினார். இவரே விலங்குகளில் நடத்திய பல ஆராய்ச்சிகளின் வழியாக, மனித உடலில் செய்யப்படும் அறுவை முறைகளை வரையறுத்தவர். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் அறுவை மருத்துவம் நாவிதர்களால் மிக மோசமான சூழ் நிலையில் செய்யப்பட்டது. அப்போது நோயாளி களும் உடல் ஊனமுற்றோரும் மடாலயங்களில் தங் கியிருந்தனர். மந்திரம், இறை வழிபாடு போன்ற வற்றால் துறவிகள் நோய்களைக் குணப்படுத்தினர். பல நோய்களைக் குணப்படுத்த ஐந்து முறை உடலி லிருந்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை நிலவியபடியால், இச்சிகிச்சைக்கு நாவி தர்களின் உதவி தேவைப்பட்டது. இங்கிலாந்தில் 1540 இல் நாவிதர் அறுவை மருத்துவர் இரு சாராரும் கூடிப் பொதுவான ஒரு கழகத்தை அமைத்தனர். இச்சமயத்தில் அம்புரோஸ் பாரி என்பவர் புண்களை ஆற்ற முட்டை, ரோஜா எண்ணெய், டர்பன்டைன் முதலியவை கொதிக் கும் நீரைவிடச் சிறந்தவை என்று கண்டறிந்தார். வெசாலியஸ் (1514-64) கண்டறிந்த உடற் கூற்று உண்மைகள் அறுவை மருத்துவத்தில் ஒரு பெரும் திருப்பு முனையாகும். 1740இல் நாவிதர் - அறுவை மருத்துவர் கழகம் கலைக்கப்பட்ட பின்பு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அறுவை மருத்துவ அரசர் கல்லூரி (Royal College of Surgeons) என்றழைக்கப் படும் அறுவை மருத்துவக் கழகம் தோற்றுவிக்கப் பட்டது. உடற்கூறு பற்றிய அறுவை ஒட்டி அமையாமல் நடைபெற்று வந்த அறுவை மருத்துவத்தை, நன்கு கண்டறிந்த உடற்கூறு பற்றிய உண்மைகளின் அடிப் படையில் சீர்திருத்தியவர் ஜான் ஹண்ட்டர் (1728- 93) ஆவார். இவரே உடலியங்கியல் (physiology), நோய்க் குறியியல் (pathology) பற்றிய ஆய்வுக்கும் வித்திட்டவர். இவரை ஒட்டி அறுவை முறையில் 18ஆம் நூற்றாண்டில் மாறுதல்களை நிகழ்த்திய வர்கள் அபர்நிதி, கூப்பர், லிஸ்ட்டர், சைம் போன்ற இங்கிலாந்து அறுவை மருத்துவர்களும், வான் கிராஃபி, வாங்கன் பர்க் போன்ற ஜெர் மானிய அறுவை மருத்துவர்களும் ஆவர். பழங்கள் அழுகுவதற்கும், மது புளித்துப்! போவதற்கும் நுண்ணுயிர்களே காரணம் என் றுணர்ந்த பிரெஞ்சு அறிவியலாளர் அாயி பாஸ்ட்டர் (Louis Pasteur) என்பார், நோய்கள் தோன்றவும் இவையே காரணம் என்ற கோட் பாட்டை அறிவித்தார். சீழ் உண்டாவதற்கும், புண்களில் நோய் தொற்றுவதற்கும், குளிர் காய்ச்சல் ஏற்படுவதற்கும் காரணம் நுண்ணுயிர்களே என்று முதன் முதலில் இவர்தான் கூறினார். இவ்வுண்மையை க் கிளாஸ்கோவில் வாழ்ந்த வேதியியல் பேராசிரியரிடம் அறிந்த ஜோசப் லிஸ்ட்டர் (1827-1912) என்பவர் இதன் அடிப்படை யில் கார்பாலிக் அமிலத்திற்கு நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உள்ளதை உணர்ந்து, அதைப் பயன்படுத்தி நுண் கிருமி எதிர்ப்பு முறைக்கு வித்திட் டார். அத்துடன் அழற்சி, புண் ஆறுதல், இரத்தம் உறைதல் போன்ற அறுவைச் சிகிச்சைக்குத் தேவை யான ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டார். சைம் என்ற அறுவை மருத்துவரிடம் அறுவைப் பயிற்சி பெற்ற லிஸ்ட்டர் 1861இல் கிளாஸ்கோவிலுள்ள ராயல் இன்ஃபர்மரியின் தலைமைப் பொறுப்பு ஏற்ற பின்தான் அறுவைச் சிகிச்சையில் நுண்ணுயீரி எதிர்ப்பு முறை மேலும் சீரடைந்தது. நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை நீராவியினால் நூவும் முறை யும், அறுவை அரங்க மாற்றங்களும் இவரால் செய்யப்பட்டன. இவர் காலத்தில் ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர் அறுவைச் சிகிச்சையின் போது இரத்தக் குழாய்களில்