அன்ட்டிங்ட்டன் தாண்டவம் 671
கொண்டிருந்தனர். பிறகு இத்தீவு நியூபவுந்த்லாந் துடன் இணைக்கப்பட்டு 1774 இல் கனடாவிற்குத் திருப்பித் தரப்பட்டது; 1895 ஆம் ஆண்டிலிருந்து தனியார்க்குச் சொந்தமானதொன்றாக விளங்கி வரு கிறது. இத்தீவின் முக்கியத்தொழில் மரங்களிலிருந்து கூழ் எடுத்தல் ஆகும். அன்ட்டிங்ட்டன் தாண்டவம் கிரேக்க மொழியில் கோரியா (chorea) என்றால் நடனம் என்று பொருள். மனித உடலின் இயக்கங் களில் அனிச்சைச் செயல்கள் பல நடந்து கொண்டி ருக்கின்றன. அவை மிகை கண் சிமிட்டல், வேக மூச்சு, மிகை இதயத்துடிப்பு, ஏனைய வழக்கத்துக்கு மாறான அனிச்சை இயக்கங்கள், இயக்கக் கோளா றுகள் (movement disorders) எனப் பல. ன் அவற்றில் ஒரு வகைதான் அன்ட்டிங்ட்ட தாண்டவம் (Huntington chorea) எனப்படும் நோய். இத் தாண்டவ இயக்கக் கோளாறுகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1686 ஆம் ஆண்டு சைடன்ஹாம் என்பவர் இது போன்ற தாண்டலத்தை முடக்கு வாதக் காய்ச்சல் (rheumatic fever) வந்தவர்களிடம் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்த அசைவுகள் புனித விட்டஸ் என்னும் இடத்திலுள்ள கோயிலில் மக்கள் ஆடிக் களிக்கும் நடனத்தை ஒத்திருப்பதால், இதற்குப் புனித விட்டஸ் தாண்டவம் (St. Vitus dance) என்று பெயரிட்டார். நாளடைவில் இதன் காரணத்தைக் கண்டுபிடித்தவரின் பெயராலேயே இது சைடன்ஹாம் தாண்டவம் என்று அழைக்கப் பட்டது. சைடன்ஹாம் தாண்டவம் முடக்குவாதக் காய்ச்சலால் வருவதாகும். ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அன்ட்டிங்ட்டன் என்னும் மருத்துவர் வழிவழியாக வரும் இத் தாண்டல நோயினைக் கண்டுபிடித்தார். மேலோட்டமாகப் பார்க்கும்போது இரண்டு வகைத் தாண்டவங்களும் ஒன்று போல் தோன்றினாலும், இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அன்ட்டிங்ட்டன் 1872 ஆம் ஆண்டு, தன் பாட் டனாருடனும் தந்தையாருடனும் சேர்ந்து இந்நோயி னைப் பற்றிய முதல் கட்டுரையை வெளியிட்டார். நியூயார்க் நகரிலுள்ள லாங் ஐலண்டு என்னுமிடத் தில் வசித்த போது, தங்கள் வீட்டுக்கருகிலுள்ள சில குடும்பங்களின் சில உறுப்பினர்கள் இந்நோயி னால் தாக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, அதன் கார ணமறியும் பொருட்டு அவர்களைச் சோதனை செய் தார். அதனின்றும் அவர் இத் தாண்டவ நோய் அன்ட்டிங்ட்டன் தாண்டவம் 671 ஒவ்வொரு தலைமுறையையும் மென்டலின் மேலா திக்க (Mendelian dominance) விதிப்படி தாக்குகிறது என்று கண்டறிந்தார். தாண்டவ உடல் அசைவுகள்தான் இந்நோயின் முதல் வெளிப்பாடு என்றாலும், இந்நோய் கண்ட வர்களுக்கு அறிவு ஆற்றல் இழப்பு (dementia), உள வியல் கோளாறுகள் (psychiatric disturbances) முதலி யவையும் தோன்றும். கை, கால், முக அசைவுகள் வேகமாக ஆடும் நடனத்தைப் போன்றிருக்கும். இத் தாண்டவம் நோயாளியின் சுயக்கட்டுப்பாட்டிற்குட் படாமல் தன்னிச்சையாக ஆடும் தன்மை பெற்றது. நோய்க் குறியியல் (Pathology). பொதுவாக மூளை யின் அனைத்துப் பாகங்களும், குறிப்பாகப் பெரு மூளையின முன் மடல்கள் (frontal lobe), சுருங்கிக் காணப்படும். காடேட்டுநியூக்ளியஸ்(caudate nucleus) தனது வழக்கமான குவிந்த தோற்றத்தை இழந்து தட்டையாக அல்லதுகுழிந்து காணப்படும்.புட்டாமன் (putamen), குளோபஸ் பேலிடஸ் (globus pallidus) என்னும் பகுதிகளும் சுருங்கிக் காணப்படும். இந் நோயாளிகளின் மூளைத் திசுக்களை நுண்ணோக்கி யின் மூலம் காணும் பொழுது மேற்கூறிய இடங் களில் நரம்பு உயிரணுக்கள் அழிந்து காணப்படும். இந்த அழிவின் விளைவாகக் கிளையஸ் தழும்புகள் (gliosis) ஏற்படும். நரம்பு உயிர் வேதியியல். அன்ட்டிங்ட்டன் தாண்ட வத்தில் காடெட் நியூக்ளியஸ், புட்டாமனில் குளூட் டாமிக் ஆசிட்-டீ-கார்பாக்ஸிலேஸ் (glutamic acid decarboxylase), காமா-அமினோ பியூட்ரிக் அமிலம் (gamma amino butyric acid) என்னும் முக்கிய நொதிகள் குறைந்து காணப்படும். அசெட்டைல் கோலின் (acetyl choline) என்னும் முக்கியப் பொருளை உற்பத்தி செய்ய உதவும் கோவின் அசெட் டைலேஸ் (choline acetylase) என்னும் நொதியும் குறைந்த அளவில் காணப்படும். நோய்க்குறிகள். இந்நோய் முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுக்குள் தோன்றும்; ஒவ்வொரு தலை முறையினரையும் விடாமல் தாக்கும் மெண்டலியன் மேலாதிக்கத் தன்மையுடையது. அனிச்சையான இயக்கங்கள் முகத்தில் தோன்றிப் பலவித முகச்சேட்டைகளை விளைவிக்கும். மூச்சு இயக்கம் தாறுமாறாக இருக்கும். பேச்சு குழறும். கை,கால்கள் பல கோணங்களில் வளைந்தும் திரும்பியும் கோணலாக இயங்குவது பார்ப்பதற்கு