அன்றில் 673
அன்றில் 673 டெட்ராபெனாசின் எனும் மருந்தை (tetrabena- zine) 50-200 மில்லிகிராம் அளவில் கொடுத்தால் அனிச்சை இயக்கங்கள் குறையும். மேற்கூறிய மருத்துவ முறைகளால் மட்டும் முழுமையான குணத்தை உண்டு பண்ண இயலாது. மூளை மழுங்கலும், உளவியல் கோளாறுகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும். எனவே இவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் (rehabili- tation) மிகவும் அவசியம். நோயாளிகளுக்குத் திருமணம், குழந்தை பிறப்பு ஆகியவை பற்றிய அறிவுரை தர வேண்டும். அன்டிலெஸ் தீவுகள் . க.உ.வே. பஹாமா தீவைத் தவிர ஏனைய மேற்கு இந்தியத் தீவுகள் அனைத்தும் அன்டிலெஸ் (Antilles Islands) தீவுகளென அழைக்கப்படுகின்றன. இத்தீவுகள் பெரிய அன்டிலெஸ் எனவும், சிறிய அன்டிலெஸ் எனவும் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கூபா. ஹிஸ்பானியோலா, ஜமாய்க்கா, போர்ட்டோ ரீகோ கூட்டத்தில் ஆகிய தீவுகள் பெரிய அன்டிலெஸ் உள்ளன. ஏனைய தீவுகள் சிறிய அன்டிலெஸ் (கரிபீஸ்) கூட்டத்தில் அடங்கியுள்ளன. அன்டிலெஸ் உலகத்தைக் எனும் இத்தீவுக்கூட்டத்தைப் புதிய கண்டுபிடிப்பதற்கு முன்பே ஐரோப்பாவிற்கு மேற் கில், அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கற்பனையான இடங்களை அன்டிலா என்று வழக்க மாகக்கூறி வந்தனர். பழங்கால வரைபடங்களில் இதனை ஒரு கண்டமாகவோ பெரிய தீவாகவோ குறிப்பிட்டனர். சிவ சமயங்களில் ஒரு தீவுக் கூட்டம் என்றும் குறிப்பிட்டனர். மேற்கு இந்திய தீவுகளைக் கொலம்பஸ் கண்டுபிடித்த பின்னர் அன்டிலெஸ் என்று ஸ்பானிய மொழியில் இத்தீவுகள் அழைக்கப் பட்டன. இத்தீவுகள் பெரும்பாலாக மலைகளையும் எரி மலைகளையும் கொண்டுள்ளன. சூறாவளிக் காற்று இங்கு அடிக்கடி வீசுகிறது. பெரும்பாலும் மிதமான வெப்பநிலை நிலவுகிறது. முக்கியச் சுற்றுலா இடமாக கருதப்படுகின்றன. இத்தீவுகள் இங்கு வாழும் பெரும்பான்மையோர் கருப்பு ஆப்பிரிக் மக்களில் கர்களே. அன்றில் சங்கநூற் பாடல்கள் பலவற்றில் அன்றில் என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சிறப்பானது இப்பறவைகளின் இணைபீரி யாத் தன்மை பற்றியதாகும். இணைப் பறவைகளில் ஒன்று இறந்தால் அதன் துணையும் உடன் இறந்து விடும் எனக் கூறப்பட்டுள்ளது. "ஒன்றில் காலை அன்றில் போல" (நற்றிணை-124) என்று கூறியுள் ளனர். 'அன்றில்' என்று சங்க இலக்கியங்களில் கூறப் பட்ட பறவை தற்காலத்தில் வாழும் இனங்களில் ஏதுவாக இருக்கலாம் என்பது பற்றிக் கருத்து வேறு பாடுகள் நிலவுகின்றன. "நெருப்பி னன்ன செந்தலை யன்றில் இறவி னன்ன கொடுவாய்ப் பெடையொடு தடவி னோங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர் கையற நரலு நள்ளென் யாமத்துப் பெருந்தண் வாடையும் வாரார் இஃதோ தோழிநங் காதலர் வரைவே" (குறுந்தொகை-160) எனக் குறுந்தொகை 160 ஆம் பாடல் கூறுகிறது. இணை இணையாக வாழும் அன்றில் பறவை காத லுணர்ச்சியிற் சிறந்தது. இணைப்பறவைகளுள் ஒன்று உயிரிழந்தால் அதன் துணைப்பறவையும் வாழாமல் உயிர்விடும். இப்பறவைக்கு நெருப்பைப் போன்ற சிவந்த தலையும் கரிய கால்களும் உண்டு; கூரிய அலகு இறாவைப் போன்று வளைந்திருக்கும். இவை நெய்தல் நிலத்தில் பனைமரத்தில் கூடுகட்டி வாழ்ந்தன. . அன்றில் என இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பறவை தற்பொழுது கோதாவரி நதிக்கு வடபகுதி யில் வாழும் சாரசக் கொக்கு (sarus Crane, grus antigone) என்னும் கருத்து நிலவுகிறது. வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழும் தன்மையில் இப் பறவை அன்றில் பறவையை ஒத்திருக்கிறது. கழுத் தும் தலைப்பகுதியும் அன்றிலுக்குக் குறிப்பிட்டது போல் சிவந்த நிறத்துடனிருப்பினும், கால்கள், அன் றிவின் கரிய கால்களைப் போலன்றிச் சிவந்து காணப் படுகின்றன. இவை பனைமரத்தில் வளைந்த மடல் களில் கூடுகட்டுவதில்லை; மாறாக வயல்வெளிகளி லும் நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தரையில் கூடுகட்டு கின் றன. சாரசக் கொக்கு போன்ற தலைப்பகுதி சிவந்த வளைந்ததாகவும் தாகவும் அலகு தமிழ்நாட்டில் காணப்படும் ஒரே பறவை 'கருநிற அரிவாள்