பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 அன்னம்‌

676 அன்னம் அமைதியாக இருப்பதனாலேயே அது இப்பெயர் பெற்றது. இது கடுங்குளிர் காலங்களில் இந்தியாவுக்கு வலசை வருவதுண்டு. காரன்னம். இது ஆஸ்திரேலியாவில் காணப்படு கிறது. சிக்னஸ் அட்ரேட்டஸ் (cygnus atratus) என்பது இதன் விலங்கியற் பெயர். சிறகின் வெண்ணிற முத விறகுகளையும் சிவந்த அலகையும் தவிர முற்றிலும் கருப்பு நிறமுடையது. இது நியூசிலாந்திலும் நுழைக் கப்பட்டுள்ளது. 1697ஆம் ஆண்டு இவ்வழகிய பறவை யைக் கண்ட டச்சுக்காரர் ஒருவர் இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளில் சிலவற்றை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். பறவை அமைக்கும் கூடு 2 அடி உயரமும் 6 அடி குறுக்களவும் கொண்டது. ஜுன் மாதத்தில் பெண் பறவை 5இலிருந்து 7 முட்டைகள் வரை இடுகிறது. குஞ்சுகள் சிறு சாம்பல் நிற இறகுகளால் போர்த்தப் பட்டுள்ளன. ஓர் ஆண்டில் இறகுகள் வெண்பனி போன்ற தூய வெண்ணிறத்தைப் பெறுகின்றன. எக்காள அன்னம் (trumpeter svan). சிக்னஸ இக்ஸ்ை பக்சினேட்டர் (cygnus cygnus buccinator) என்பது இதன் விலங்கியல் பெயர். தென் அமெரிக் காவில் வாழும் இதன் எண்ணிக்கை ஒரு முறை வெகு வாகக் குறைந்துவிட்டது. ஆனால் பின்னர் இவை எச்சரிக்கையுடன் பாதுகாக்கப்பட்டதால் இவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துத் தற்போது ஏறக் குறைய 4,000 பறவைகள் உள்ளன. இவ்வகை அன் னங்களே அன்னப் பறவைகளுள் உருவில் பெரியன; ஆனால் இவை ஊமை அன்னத்தைக் காட்டிலும் எடை குறைந்தவை. என் கருங்கழுத்தன்னம் (black-necked swan), சிக்னஸ் மெலனோகாரிஃபஸ் (cygnus melanoaryphus) னும் இவ்வகை அன்னங்களின் கழுத்தும் தலைப் பகுதியும் ஆழ்ந்த கருநிறமுடையவை. உடலின் ஏனைய பகுதி தூய வெண்ணிறமானது; சிவந்த அல குடையது. கண்களுக்கருகில் ஒரு வெண்ணிறப் பட்டை உண்டு. இது தென் அமெரிக்காவில் வாழ்கிறது. படம் 2. காரன்னம் சீழ்க்கை அன்னம் (whistling swan). சிக்னஸ் கொலம்பியானஸ் கொலம்பியானஸ் (cygnus columbi- anus columbiamus) எனப்படும் இச்சிறப்பினம் அதன் சீழ்க்கையொலி போன்ற குரவால் இப்பெயர் பெற்றது. கால்களும் அலகும் கரிய நிறம் உடையன. கண்களின் அருகில் மஞ்சள் நிறக்குறி ஒன்று உள்ளது. இது தென் அமெரிக்காவில் காணப்படுகிறது: ஆர்க்டிக் வட்டத்திலும், ஹட்சன் வளைகுடாப் பகுதியிலும் கூடு கட்டுகிறது; அக்டோபர், ஏப்ரல் மாதங்களில் கூட்டம் கூட்டமாக தெற்கு நோக்கி வலசை வரு கின்றன. வலசை போகும்போது 64இலிருந்து 80 கி.மீ. வேகத்தில் பறந்து செல்கின்றன. பெண் படம் 3. கருங்கழுத்து அன்னங்கள் சிக்னஸ் கொலம்பினாஸ் பெவிக்கி (cygnus columbi- anus bewickii) சிக்னஸ் சிக்னஸ் சிக்னஸ் (eygnus cygaas cygaus), எனனும் இரு சிறப்பினங்கள் ஐரோப் பிய, ஆசியப் பகுதிகளில் வாழ்கின்றன சிக்னஸ்கொலம் பியானஸ் பெவிக்கி சோவியத்நாட்டின் வடபகுதியிலும்