பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/710

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 அன்னோனேசி

680 அன்னோனேசி (tissues) எண் களுக்கும் ஒருவித நறுமணமுண்டு. இதன் ணெய்க் குடுவைகள் (oil sacs ) இதன் திசுக்களி லூடே பரவியிருக்கின்றன. இலைகள் தனித்தவை, இவை உதிரக் கூடியலை யாகவோ (deciduous), நிலைத்திருப்பவை யா சுவோ இருக் கின்றன.இலையடிச்சிதல்கள் (stipules) கிடையா. மலர்கள் இருபாலானவை; ஆரச்சமச்சீரானவை (actinomorphic); சூலக மேல் மட்டமுடையவை (hypogynous). பூவிதழ் வட்டம் (perianth) பெரும் பாலும் மூன்று அடுக்குகளில் காணப்படுகின்றது. ஒவ்வொன்றிலும் 3 இதழ்களுண்டு, இவை அடியில் மட்டும் இணைந்தோ, இணையாமலோ இருக்கும். பூத்தளம் (receptacle) பூவிதழ் மட்டத்திற்கு மேல் நீண்டோ அகன்றோ இருக்கும். மகரந்தத்தாள்கள் (stamens) எண்ணற்றவை. இவையெல்லாம் அகல்சுருள் (spiral) முறையில் அமைந்திருக்கும். மகரந்தப்பைகள் வெளிப்புறம் நோக்கி அமைந்திருக்கும் (extrorse). இவை நான்கு அறைகளைக் கொண்டவை. இவற்றின் முடிவிரிவடைந்து வெவ்வேறு வடிவத்துடன் காணப் படும். சூற்பைகள் சில அல்லது பலவாகும்; அவை இணையாதவை; மேல் மட்டத்தில் அமைந்தவை: ஒவ்வொன்றும் ஒவ்வோர் அறையைக் கொண்டது; ஒவ்வொரு சூற்பையிலும் சூல்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டிருக்கும்; அவை தலைகீழ் வடிவ முடையவை (anatropous); விளிம்பொட்டிய சூலமை வுடையவை (marginal placentation); சூலகத்தண்டு மிகக் குட்டையானது அல்லது அறவே இரந்து. கனிகள் பல தீங்கனிகள் அடங்கிய திரள்கனி (aggre- gate of berries). விதைகள் பெரியவை. கரு சிறியது. முளைசூழ்சதை (endosperm) பெரியது. இது அரிக்கப் பட்டுப் பல வரிக்குறிகளுடனிருக்கும் (ruminate). பொருளாதாரச் சிறப்பு. சீத்தாப்பழமும்(A. squamo- sa; custard - apple) அ. ரெட்டிக்குலாட்டாவின் (A. reti culate: Bullock's Heart) பழமும் உண்ணப்படு கின்றன. மேலும் சீத்தா மரத்தினின்றும் கிடைக்கும் பிஞ்சு, விதை, இலை, வேர் ஆகியவை மருந்தாகவும், பூச்சி, பேன் கொல்லிகளாகவும் பயன்படுகின்றன. விதைகள் கருச்சிதைப்பி (abortifacient) ஆகப் பயன் படுகின்றன. வேர் மலமிளக்கியாகப் (purgative) பயன்படுகின்றது. அ. ரெட்டிக்குலாட்டாவின் முதிர்ச்சி யடையாத காய்களுக்குக் குடற்புழுவைக் கொல்லும் (anthelmintic) குணம் உண்டு. இலைகளும் விதை களும் பூச்சிக் கொல்லிகளாகும்.அ. மூரிக்கேட்டாவின் 10 T 6 1. பூ மொட்டு 2. அல்லி இதழ் 3. 6. சூலகங்களின் தொகுப்பு 7. மிலார் சீத்தாப்பழம் (Annona squamosa Linn.) கனி 4. ஓர் அல்லி இதழ் நீக்கப்பட்ட பூவின் தோற்றம் 5. மகரந்தத்தாளின் தொகுப்பு 8. மகரந்தத்தாளின் வெவ்வேறு தோற்றங்கள் 9. மகரந்தப்பைகள் 10. புல்லிவட்டம்