பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனக்கார்டியேசி 683

6 அளக்கார்டியேசி 683 புக்கனானியா லான்சான் (Buchanania lanzan Spreug) 2. தேன் சுரக்கும் சுரப்பி 3. சூலகம் 4. மிலார் 5. சூற்பையின் நீள்வெட்டுத் தோற்றம் 6. சூல் 7, இலையின் அடிப்பரப்புத் தோற்றம் 8. பூ மொட்டு 9, tale). இதன் தடிப்பான இருவித்திலைகளும் (coty- ledons; முந்திரி பருப்பு), கொட்டையின் கீழுள்ள 'ஆப்பிள்' என்று கூறப்படுகின்ற சதைப்பற்றுள்ள பாகமும் உண்பதற்கேற்றவை. முன்னதிலிருந்து பலவகையான திண்பண்டங்களும், பின்னதிலிருந்து சாறும், சாராயமும், காடியும் (vinegar) தயாரிக்கப் படுகின்றன. இதில் உண்மையான கனி என்பது மிகவும் கடினமான, சாம்பல் நிறமுள்ள பெரிய அவரை விதை போன்ற கொட்டைப் பகுதியே. சதைப்பற்றுள்ள பாகம் மாற்றுரு அடைந்த பூத் தளத்தைக் (thalamus) குறிக்கும். கொட்டையின் உறையிலிருந்து ஒருவித எண்ணெய் எடுக்கப்படு கின்றது. இது புழு நிலையில் உள்ள கொசுக் களைக் கொல்வதற்குப் பயன்படுகின்றது. பட்டை யிலிருக்கின்ற பால் போன்ற சாறு துணிகளுக்குக் குறியிடுவதற்குப் பயன்படுகின்றது. இதன் மரக் கட்டை, கட்டுமானப் பெட்டிகளும் (packing cases) படகுகளும் (boats) செய்வதற்குப் பயன்படுகின்றது. மாமரங்களில் பல வகைகள் உண்டு. பயிராக் மகரந்தத்தாள் (இரு அளவுகளில் காண்க). . கப்படுகின்ற பகுதிகளைப் பொறுத்தும், பழங்களின் வடிவம், நிறம், அளவு ஆகியவற்றைப் பொறுத்தும் மாம்பழங்கள் (Mangifera indica) வெவ்வேறு பெயர் களில் அழைக்கப்படுகின்றன. குறிப்பாக, இவற்றை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவு உண்ப தற்கு மட்டும் பயன்படுகின்ற சதையுள்ளது: மற் றொன்று நாரும் சாறும் நிறைந்தது. இரண்டாவது பிரிவுப் பழங்கள் முக்கியமாகச் சாறு எடுத்துப் பானங்கள் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றன. ஜாவாவிலும்( Java) பிலிப்பைன்சிலும் (Philippines) தளிர்களைக் காய்கறியாகச் சமைத்துச் சாப்பிடுகின் றார்கள். இவற்றில் 'சி' ஊட்டச்சத்து(ascorbic acid) நிறைந்திருக்கின்றது. மரத்திலிருந்து கிடைக்கின்ற பசை (gum) கால்வெடிப்பு, சொறி சிரங்குகள் (scabies), மேகநோய் (syphilis) ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. இதன் கட்டை படகு, கட்டுமரம், மேசை, நாற்காலி, உழவுக்கான கருவி கள் முதலியன செய்வதற்குப் பயன்படுத்தப்படு கின்றது. ஹோலிகார்ணா நிக்ராவின் (Holigarna nigra)