பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/714

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 அனக்கோண்டா

684 அனக்கோண்டா என்ப கருமை நிறச்சாறு வார்னிஷாகப் (varaish) பயன் படுகின்றது.செங்கொட்டை அல்லது சேரன்கொட்டை அல்லது எரிமுகி (Semecarpus anncardium) தின் காய்களிலிருந்து சலவை செய்வோர் பயன் படுத்தும் மை எடுக்கப்படுகின்றது. புளிப்புடன் கூடிய அரிசி நீரில் வேர்களை வேகவைத்துச் சாப் பிட்டால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை உண் டாவதாகக் கூறப்படுகிறது. இதன் கொட்டைகளி லிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கறையான் பிடிக் காமல் பாதுகாப்பதற்கும், உயவு (lubricant) ஆகவும் பயன்படுகின்றது. இதன் கனிகள் இளைப்பு நோய் (asthma), வலிப்பு (epilepsy), சொறி சிரங்குகள், மூட்டுவாதம் (rheumatism), கட்டிகள், கொப்புளங் கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன. கனி ரசத்திற்கு, உணவுக் குழா யிலும் வாயிலும் ஏற்படும் புற்றுநோயை (cancer) ஓரளவு குறைத்து, வாழ்வுக்காலத்தை நீட்டிக்கும் தன்மை இருப்பதாகக் கூறப்படுகின்றது. நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதிக்கு (diabetes) மருந்தாகப் பயன்படுகின்ற தன்மை கனிகளுக்குண்டு.செ.ட்ராவாங் கூரிக்காவின் (S. travancorica) காய்களின் ரெசினி லிருந்து வர்ணக்குச்சிகள் (lacquers), மெருகு எண் ணெய் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன, புக்கனே னியா அங்குஸ்த்திஃபோலியா(buchanania angustifolia), பு.லான்சான் (B.lanzan) ஆகியவற்றின் விதைகள் (பருப்பு) வறுத்தோ வறுக்காமலோ பாதாம் பருப் பருப்புப் போல உண்ணப்படுகின்றன. இவை இனிப் புப் பண்டங்கள் செய்வதில் பயன்படுகின்றன. இவற் றிலிருந்து கிடைக்கின்ற நறுமணத்துடன் கூடிய எண்ணெய் ஆலிவ் எண்ணெய் ( olive oil), பாதாம் எண்ணெய் (almond oil) ஆகியவற்றிற்குப் பதிலாகப் பயன்படுகின்றது. பிஸ்தா பருப்பு அல்லது பச்சைப் பாதாம் என்று கூறப்படுகின்ற பிஸ்டேசியா வீரா வின் (Pistacia vera) விதைகள் (பருப்பு), இனிப்புப் பண்டங்கள், ஐஸ் கிரீம்{ice cream) செய்வதற்குப் பயன் படுகின்றன. இவற்றைஉப்பிட்டு வறுத்தும் சாப்பிட லாம். இவைசெரிப்பைத் தூண்டுவதற்கும், ஊட்ட நீர் மமாகவும் (tonic) பயன்படுகின்றன. இவற்றில் 19.8 விழுக்காடு புரதச்சத்தும், 53.5 விழுக்காடு கொழுப் புச் சத்துமிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றது. ரெசின், எண்ணெய், அரக்கு வார்னிஷ் ஆகியவை டாக்சிக்கோடெண்ரான் வெர்னிசிஃபரா (texicodendron vernicifera) மரத்திலிருந்து கிடைக்கின்றன. பெரும் பாலான சிற்றினங்களில் தோலைப் பதப்படுத்தக் கூடிய பதத்துவர் (tannin) என்ற பொருள் வெவ் வேறு அளவில் இலைகள், காய்கள், மரப் பட்டை களிலிருந்தும், பூச்சி புழுக்களினால் இவை பாதிக் கப்படும்பொழுது உண்டாகின்ற கரணைகளிலிருந் தும் (galls) சாதாரணமாகக் கிடைக்கின்றது. ருஸ் யவானிக்காவின் (rhus javanica) கரணைகள் சாய மிடுதலிலும், மருத்துவத்திலும், பற்களைக் கருமைப் உண் படுத்துவதற்கும் பயன்படுகின்றன. ரூ.பார்விஃபுளோ ராவின் (R. parviflora) உலர்ந்த இலைகளைப் புகை யிலைக்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றார்கள். ரு.சக்சிடேனியாவின் (R, succedanea) கனிகள் ணப்படுகின்றன. இதனுடைய மரப்பால் (latex) கொப்புளங்களை உண்டாக்கவல்லது. வார்னிஷ் தயாரிப்பதிலும் அரக்கு வேலைப் பாடுகளிலும் பெரிதும் பயன்படுகின்றது. இதன் கரணைகளைக் குழந்தைகளுக்கு உண்டாகும் சீதபேதி (dysentery), வயிற்றுப்போக்கு (diarrhoea) ஆகியவற்றைக் குணப் படுத்தக் கொடுப்பார்கள். ஜப்பான் வார்னிஷ் அல்லது ஜப்பான் அரக்கு என்ற ரூ.வெர்னிசிஃபுளுவா வின் (R.verniciflua) அரக்கு, மரச்சாமான்களுக்கு மெருகேற்றவும், வார்னிஷாகவும் கையாளப்படு கின்றது. நூலோதி 1. Gamble J. S., Fl. Pres. Madras., Vol. I, Adlard & Son, Ltd., London. 1918. 2. Lawrence, G.H.M., Taxonomy of Vascular Plants, The Macmillan Co., London, 1951. 3. Rendle, A.B., The Classification of Flowering Plants, Vol.II. Dicotyledons, (Repr.) Cambridge Univ.. Press, 1975. 4. The Wealth of India, Vol.I.. VIII 1969; Vol. IX CSIR Publ., New Delhi, 1972. 5. Willis, J.C., A Dictionary of Flowering Plants & Ferns, (7th Ed. Revd. Airy Shaw H.K.) Cambridge University Press, 1966. அனக்கோண்டா - யானை, அனக்கோண்டா (anaconda) என்னும் இப்பாம்பின் பெயர் "யானையையும் கொல்லும் திறம் பெற்றது" என்னும் பொருள்பட, ஆனை (anai) கொல்லுபவன் ( kolra ) என்னும் தமிழ் சொற்களி லிருந்து பிறந்ததாக இருக்கலாம் என்று கருதப்படு கிறது. தென் அமெரிக்கப் பகுதிகளில் காணப்படும் இது உலகிலேயே மிகப் பெரிய உருக்கொண்ட பாம்பு ஆகும். இது நம்நாட்டு மலைப்பாம்பு போன்றது. அனக்கோண்டா நீர்நிலையோர மரங்களின் கிளைக்