686 அனபிலப்ஸ்
686 அளபிலப்ஸ் கிடைக்கும் டைட்டேனியக் (TiO,) கனிமமாகும். இதனை ஆக்டாஹைட்ரைட்டு (octahedrite) என்றும் அழைப்பார்கள். ஒளி ஊடுருவும் தன்மையிலிருந்து ஊடுருவாத் தன்மை வரை மாறும் இயல்புடையது. டைட்டேனிய ஆக்சைடு அனட்டேஸ், புரூகைட்டு, ரூட்டைல் எனப் பல படிக உருவைப் பெறும் .குவியும் அல்லது விரியும் போக்குடைய எண்கோணத்தகப் படிகங்களாகவோ, செம்பாள (tabular) வடிவப் படி கங்களாகவோபடிகம் ஆகிறது.அனட்டேசு ரூட்டைல் கனிமத்திலிருந்து மாறுபட்ட படிகவுருவை உடையது. அதன் படிகவியல்புகள் சமச்செஞ்சீரச்சுடன் (iso- metric) கூடிய நாற்கோணக (tetragonal) படிகவுருவ மைப்பைக் கொண்டது. நிலைஅச்சின் நீளம் c:1,7771 அதன் அணுக்கட்டமைப்பு சற்றே குலைந்த நிலைச் சாய்சதுர வடிவமுடையது. இதன் அடர்த்தி 3.82 முதல் 3.95 வரை மாறும். இதன் கடினத் தன்மை 5.5 முதல் 6 வரை மாறுபடும். இதன் கனிமப் பிளவு (001) அடியிணைப் பக்கத்திற்கு இணையாக வும் கூம்புபட்டகத்திற்கு (111) இணையாகவும் தெளிவாக அமையும். கனிமத்தூள் நிறமற்ற தன்மை யிலிருந்து வெளிர்மஞ்சள் வரை வேறுபடும். இது குறைவான சங்குமுறிவு (Subconchoidal) உடையது; நொறுங்கும் இயல்புடையது; வைர அல்லது உலோக வைர மிளிர்வுடையது. அனட்டேசு வேதியியலமைப் பில் டைட்டேனிய ஆக்சைடைப் (TiO,) பெருமளவு கொண்டிருந்தாலும், சிறிதளவு இரும்பையும் (Fe), வெள்ளீயத்தையும் (Sn) உடன் கொண்டிருக்கலாம். இரும்பின் அளவைப் பொறுத்து இதன் ஒளிவிலகல் மாறும். நீயோபியம் மற்றும் டான்ட்டால் அனட் டேசுகளும் காணப்படுகின்றன. பெரும்பாலான அனட்டேசுக்கனிமங்கள் ஓரச்சு கொண்டிருந்தாலும் சிறிய அளவு கோணத்துடன் கூடிய ஈரச்சுகளைக் கொண்ட அனட்டேசு கனிமங்களும் உள்ளன. சில அனட்டேசுப் படிகங்களைச் சுற்றிக் கனிம வேதியிய லமைப்புத் தொடர் மாறிய மண்டிலச் சூழ்வளை கள் உள்ளன. அனட்டேசின் எதிர் அடையாள ஓரச்சு இயல்பால் ரூட்டைல் மற்றும் புரூக்கைட்டுக் கனிமங்களிடமிருந்து வேறுபடுத்தி அறியலாம். ஒப்பிடுகையில் அனட் ஏனைய கனிமங்களுடன் டேசு பைப் கனடாபால்சத்தில் தெளிவான வரையறை விளிம்புடன் காணப்படும். ஒளியியல் பண்பாக இது எதிர்மறைக் கனிமமாகும். இதிலுள்ள இரும் பொறுத்து ஒளிவிலகல் எண் இயல்புக் கதிருக்கு (ordinary ray) 2.534 முதல் 2.564 வரையி லும், இயல்பு மீறிய கதிருக்கு (extra ordinary ray) 2.488 முதல் 2.497 வரையிலும் மாறுபடும். ஒளிவில் கல் எண் இடைவெளி மிகவும் அதிகம். டைட்டேனி யக் கூட்டுப்பொருளின் பலவிதப் படிகவுருக்களில், தாழ்ந்த வெப்ப நிலையில் அனட்டேசுப் படிகவுரு உண்டாகிறது. இது பெரும்பாலும் அனற் பாறை களிலும், உருமாறிய பாறைகளிலும் அரிதாகவும் பெக்மடைட்டுகளில் காணப்படும். கிரானைட்டுப் கனிமக்கொடிகளாகவும் துரிசுக்கனிமங்களாகவும் கிடைக்கின்றது. அணிவரிப் (gneiss) பாறைகளும், அடுக்குப்படல (schist) பாறைகளும் நீர்ம வெப்ப இயக்கத்தால் அரிக்கப்பட்ட கரைசல்களிலிருந்தும் இக்கனிமங்கள் படிகம் ஆகின்றன. மற்றும் ஸ்பீன். இல்மனைட்டுக் கனிமங்கள் வேதியியல் மாற்றம் அடைவதாலும் இக்கனிமங்கள் உண்டாகின்றன. வேற்றிடத்திலிருந்து கொண்டு வந்த ஆறு அல்லது கடற்கரை மணற் படிவுகளிலும் இக்கனிமம் காணப் படுகின்றது. எனினும் வணிகத் தேவைக்கேற்பச் செறிவுற்றுக் காணப்படுவதில்லை. சில தொழிற் சாலைகளில்ரூட்டைலைவிட அனட்டேசுக் கனிமங்கள் தேவைப்படுகின்றன. அனட்டேசை 915°C வெப்ப நிலையில் சூடுபடுத்தி ரூட்டைலாக மாற்றலாம். இவ் வாறு அனட்டேசை ரூட்டைலாக மாற்றும் நிகழ்ச்சி, அனட்டேசுக் கனிமத்தூளின் நுண்பரல் தன்மையை யும், செலுத்தப்படும் வெப்ப, அழுத்த, கால அளவை யும் பொறுத்து நடைபெறுகிறது. இம்மாற்றம் 600°Cக்குக் கீழாக மிகமெதுவாக நடைபெறுகிறது. நூலோதி 1. -இரா. இராம. Deer, W. A., Hawie, R. A., and Zussman, J., An Introduction to the Rock Forming Minerals, Longmans, London, 1966. 2. Berry, L. G., and Mason, B., Mineralogy, W.H., Freeman & Company, Sanfrancisco, 1959. அனபிலப்ஸ் அனபிலப்ஸ் எனப்படும் ஒரு வகை மீன் சிப்ரினி டோன்டஸ் என்ற வரிசையிலுள்ள அனபிலப்பிடே குடும்பத்தைச் சார்ந்தது. இதில் மூன்று இனங்கள் உள்ளன. இம்மீன் யுகடானிலிருந்து பிரேசில் வரை யிலுள்ள கரையோரத்தில், நன்னீர் மற்றும் உவர்ப்பு நீர்களில் வாழ்கிறது. அனபிலப்ஸ் சிறப்பான தகவ மைப்பு ஒன்றினைப் பெற்றுள்ளது. இதன் கண்கள் மேற்பகுதி, கீழ்ப்பகுதி என ஒரு சவ்வினால் சமமா கப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தனியாக விழி வெண்படலம் உண்டு. இதன் காரணமாக இம்மீன் "நான்கு கண்களை யுடைய மீன்' என்று அழைக்கப்படுகிறது. இம்மீன் நீரின் மேல்தளத்தில் நீந்தும் பொழுது, கண்ணைப் பிரிக்கும் சவ்வு நீர்மட்டத்தில் அமைவதால் கண் ணின் மேற்பகுதியால் நீருக்கு வெளியிலும் கீழ்ப்