அனற்பாறைகள் 689
பக்கப் பாறைகளின் வேறுபடுதல் (differentiation), தன்மயமாதல் (assimilation) நிகழ்வுகளையும் அவை உருவாகும் நிவஇயல் சூழ்நிலைமைகளையும் பொறுத்து அமையும். பாறைக்குழம்பு வேறுபடுதல் (magma differentia- tion). இது பல்வேறு இயற்பியல், வேதியியல் நிகழ்வு களால் ஆன கூட்டுச் செயல்முறையில் ஒரு தாய்ப் பாறைக் குழம்பானது வேறுபட்டு, இரண்டாம்தரத் தாய்க்குழம்பு உருவாகி அதிலிருந்து பலவகையான வேதியியல், கனிம உட்கூறுடைய பாறைகள் உரு வாதலாகும். இவ்வகையான வேறுபடுதல் (differen- tiation) மிக அதிக ஆழத்தில் பலவகைக் கனிமக் கூறுடைய ஒரு தாய்ப்பாறை வளாகத்தில் தோன்று கின்றது. இருவகையான வேறுபடுதல் நிகழ்வுகள் இயற்கையில் நிகழ்கின்றன. அவை, பாறைக் குழம்பு பிரிதலால் வேறுபடுதல் முறை (magnatic differen- tiation), படிகமாதலால் வேறுபடுதல் முறை (crystalli- zation differentiation) என்பனவாகும். பாறைக்குழம்பு பிரிதலால் வேறுபடுதல் முறை (magatic differentiation). இவ்வகை வேறுபடுதல் மிக அதிக ஆழத்தில், அதிக அளவு வெப்ப நிலையில் உருவாகின்றது. பல அறிவியல் ஆய்வாளர் களின் ஆராய்ச்சியின் விளைவாக இது விரவல் நிகழ்வில் தோன்றுகிறது எனக் கண்டறியப்பட்டுள் ளது. இது ஒன்றுக்கொன்று கலவாத இருவகை நீர் மங்களாலான பாறைக்குழம்பு உறைதலும் ஒரு வகை பாறைக்குழம்பு வேறுபடுதலாகும். வெப்பநிலை படிப் படியாக குறையும் போது குளிர்ச்சியடைதலின் பய னாக இத்தகைய இருவேறு உட்கூறு உடைய பாறை கள் இருவேறு பாறைக் குழம்பு நீர்மங்களிலிருந்து தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, உலோகத் தாதுக்கள் சிலிகேட்டுக் கனிமக் கூட்டிலிருந்து (சிலி) கேட்டு பலவகைப் பிரிவுகளாக படிகமாகும் போது) பிரிந்து படிகமாதலையும் அதனால் சிலிகேட்டுத் தொகுதியிலிருந்து நிக்கல், செம்பு, குரோமிய உலோ கக் கனிமங்கள் பிரிந்து வீழ்படிதலையும் கூறலாம். படிகமாதலால் வேறுபடுதல் முறை (crystallization differentiation). படிகமாதலால் வேறுபடுதல் முறையில் தாய்ப் பாறைக் குழம்பிலிருந்து முதலில் படிகமாகிய கனிமங்களில் எஞ்சியுள்ள பாறைக் குழம்பில் மிதக்கும் கனிமங்களின் அடர்த்தி, அது மிதக்கும் குழம்பின் அடர்த்தியைவிட அதிகமாக இருந்தால், அதன் அடியில் சென்று படிந்துவிடும். இவ்வாறான வேறுபடுதல் தாய்ப் பாறைக் குழம்பின் பிசுப்புமை (viscosity) வேறுபடுதலாலும் ஏற்படுதல் உண்டு. இதன்படி அதிக ஒப்படர்த்தி உள்ள இரும்பு - மெக்னீசியக் கனிமங்களாலான ஆலிவின், முதலில் அதன்அடர்த்தியைப் பொறுத்துக் குழம்பின் அடிமட்டத்திற்கு உடனே சென்றுவிடுவது இல்லை. 21.4-2-44 அனற்பாறைகள் 689 தன் பிசுப்புமை காரணமாக சிறிதுகாலம் மிதந்த பின்பே அடித்தளத்தில் படிகின்றது. இதைச் சில பாறைகளில் ஆலிவின் பைராக்சினுடன் வேதிவினை புரிந்து கொண்டு இயற்கையில் உருவாகும்போது காணலாம். தாய்க்குழம்பைவிட அடர்த்தி குறைந்த கனிமங்கள் பாறைக் குழம்பின் மேல் பகுதியில் மிதந்து ஒன்று சேர்ந்து தனிக் கனிமப் பாறைகளாக (monomineralic rocks) உருவாதலும் உண்டு. படம் 2 சிலிக்கேட்டுக் கனிமத் தாதுக்களின் மூவகைத் தாய்ப்பாறைக் குழம்பின் படிக உருவாக்க வேறுபாடுகளைக் காண்பிக்கிறது. இதில் மூவகை அனற்பாறைக் கனிமப் படிவுகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, நிலஈர்ப்புக் காரணமாகப் படிகமாதலால் வேறுபடுதலில் பிளஜியோகிளேசு ஃபெல்சுபார்கள் பாறைக் குழம்பின் அதிக அடர்த்தி காரணமாக உட்செல்லுதலும் இதனால் ஏற்படும் நுண்படிக ஃபெல்சுபார்களின் இடமாற்றமும் அதன் இருப்புத் திசைமாற்றமும் பாறைப் பரப்பில் நன்கு தெளிவாகப் புலப்படுகின்றன. இதைப் படம் 3 காட்டுகிறது. எனவே, நுண்படிக ஃபெல்சுபார்கள், பிளஜியோகிளேசு ஃபெல்சுபார்களின் கறைவாக் கத்தில் ஒன்று சேர்ந்துகொண்டு அதன் வடிவ முனைகளைத் தழுவிக் கொண்டு காணப்படும். 2 பாம் 3. பிளஜியோகிளேசின் உள்நோக்கிய அமிழ்வும் இதனால் பாறையினுள் ஏற்படும் ஃபெல்சுபாதிக் மைக்ரோலிட்டுகளின் இயக்கமும் 2. 2, பிளஜியோகிளேசு பைராக்சின் 3. மைக்ரோலித் ஃபெல்சுபாதிக் எனவே, பாறைக் குழம்பு படிகமாகும்பொழுது அதிலுள்ள உட்கூறுகள் மாறு கட்டமைப்பை அடை கின்றன. முதலில் படிகமான படிகங்கள் பாறைக்