பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று அமீப இயக்கம் (amoeboid movement) பெயர். போலிக்கால்கள் உடலின் எப்பகுதியிலிருந் தும் தோன்றவும் மறையவும் கூடும்.

அமீபாவானது, நன்னீரிலுள்ள பாக்டீரியா, டயாட்டம் போன்ற நுண்ணுயிரிகளை உட்கொள் பிடிக்கத் தனியான கிறது. இதற்கு உணவைப் எப்பகுதியும் அமைப்பு ஏதும் இல்லை. உடலின் வாயாகப் பயன்படுகிறது. இரை எதிர்ப்படும்போது உட்குழிவு கிண்ணம் போன்ற அதைச் சுற்றிக் இரை எடுத்துக் உண்டாக்கப்பட்டு அதனுள் கொள்ளப்படுகிறது அல்லது இரை எதிர்ப்படும்போது சில போலிக்கால்கள் உருவாகி இரையைச் சூழ்ந்து உண்டு. இம்மியளவு உள்ளிழுத்துக் கொள்வதும் நீருடன் உடலுள் சென்ற இரை உணவுக் குமிழியாக உருவாகிறது; மேலும் அதனுள் செரிமான நீர் சுரக் கப்படுகிறது. பின்னர் இக்குமிழி செரிமானக் குமிழி {digestive vacuole) எனப்படுகிறது. செரிமானக் குமிழியில் உள்ள செரிமான நீர் முதலில் அமிலத் தன்மையுடையதாக இருக்கிறது; அப்போது இரை கொல்லப்படுகிறது. பின்னர் அதுவே காரத்தன்மை யுடையதாக மாறும்போது இரை செரிக்கப்படுகிறது. இரை செரித்து உண்டான ஊட்டப்பொருள் அமீ பாவின் உடலினுள் உள்ளே கவரப்பட்டு உடலின் ஒரு பகுதியாக மாறுகிறது. செரிக்கப்படாத உணவு வேண்டுமானாலும் உடலின் எந்தப் பகுதியில் (பெலிக்கிளில் தற்காலிகமாக ஏற்படும் பிளவு வழி யாக) வெளியேற்றப்படுகிறது; பின்னர் செரிமானக் விடுகிறது. குமிழியும் மறைந்து ஒற்றைச்செல் போன்ற அமைப்புடைய உடலின் உள்ளேயே செரி மானம் நடைபெறுவதால் இதற்கு செல்அகச் செரி மானம் (intracellular digestion) என்று பெயர்.

அமீபாவின் உடலுள் நடைபெறும் வளர்சிதை மாற்றச் செயல்களுக்கு ஆக்ஸிஜன் தேலைப்படுகிறது. இதன் உடற்பரப்பு முழுவதும் இது வாழும் நீருடன் தொடர்புடையதாக இருப்பதால், உடலின் புறச் சவ்வு வழியாக நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜன் உள் ளிழுக்கப்படுகிறது; கார்பன்டை ஆக்ஸைடு வெளி யேற்றப்படுகிறது. சுவாச வாயுக்கள், ஊடுருவல் (diffusion) முறையினால் அமீபாவின் உடலினுள் செல்லவும் வெளியேறவும் முடிகிறது.

அமீபாவின் நைட்ரஜக் கழிவுப்பொருள்களும், அது வாழும் சூழலிலிருந்து சவ்வூடுபரவுதலால் உட லினுட்புகும் அதிகப்படியான நீரும், சுருங்கு குமிழி யினால் வெளியேற்றப்படுகின்றன. இக்குமிழி முதலில் அகப்பிளாசத்தில் நியுக்ளியசுக்கு அருகில் காணப்படுகிறது. பின்னர் உடற்பிளாசத்தில் காணப் படும் கழிவுப்பொருள்கள் இதனுள் சேரச்சேர, அது புறப்பிளாசப் பகுதியில் உடற்சவ்வுக்கு அருகில்

சென்று வெடிப்பதால் கழிவுப்பொருள்கள் வெளி யேற்றப்படுகின்றன. சிறிது நேரத்தில் புதிய சுருங் கும் குமிழி ஒன்று உருவாகிறது.

அமீபா வாழும் நீரின் ஒரு பகுதியை ஒளியூட்டி னால், அது நிழலுள்ள பகுதிக்கு நகர்ந்து போய் விடும். சிறிதளவு உப்பை, நீரில் போட்டால் அமீபா வின் போலிக்கால்கள் உள்ளிழுக்கப்பட்டு மறைந்து விடுகின்றன; இயக்க வேகமும் குறைகிறது. ஒளி, உப்பு மட்டுமின்றி மற்ற பல தூண்டு பொருள் களும் (stimulants) அமீபாக்களைப் பாதிக்கின்றன. தூண்டு பொருள்களின் பாதிப்பால் அமீபா மேலே கூறியவாறு கிளர்ச்சியுறுகிறது (excitation). தூண்ட லுக்கு ஏற்ப இயங்கும் இத்தகைய ஆற்றல் இவற் றின் உயிரைக் காத்து இயற்கையில் இவ்வினம் நிலைத்திருக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக அதிக ஒளி அமீபாக்களைக் கொன்றுவிடுகிறது. ஒளியிலி ருந்து விலகி ஒதுங்கும் அமீபாக்கள் தப்பிப் பிழைக் கின்றன.

அமீபா இருசமப்பிளவு முறையினால் (binary fission) இனப்பெருக்கம் செய்கிறது. முதலில் அதன் உட்கரு மறைமுகப் பகுப்பு முறையினால் (mitosis) இரு பகுதிகளாகப் பிரிகிறது; பின்னர் அதன் செல் பிளாசமும் இரு பகுதிகளாகப் பிரிகிறது; ஒவ்வொரு செல்பிளாசப் பகுதியும் ஒரு சேய் நியூக்ளியசை உள் ளடக்கியுள்ளது. இதனால் ஓர் அமீபாவிலிருந்து இரு சேய் அமீபாக்கள் உண்டாகின்றன, பலவாகப் பிள வுறு முறையாலும் (multiple fission or schizogony) அமீபா இனப்பெருக்கம் செய்கிறது. இதில் அமீபா வைச் சுற்றி ஒரு காப்பு உறை (cyst) உண்டாகி அதை மூடுகிறது. பின்பு அதன் நியூக்ளியஸ் பன் முறை பிளவுற்றுப் பல சிறு நியூக்ளியசுகளாகிறது. செல்பிளாசமும் பலமுறை பிளவுற்று ஒவ்வொரு சிறு பகுதியும் ஒரு சிறு நியூக்ளியசைச் சூழ்ந்துகொள்கி றது. இவற்றுக்குச் சிதல்கள் (spores) என்று பெயர். காப்பு உறை வெடிப்பதனால் அவை வெளியே வரு கின்றன. பின்னர் அவை சிறு சேய் அமீபாக்களாக வாழத் தொடங்குகின்றன. பலவாகப் பிளவுற்று இனப்பெருக்கம் செய்தல் பெரும்பாலும் நீர்வற்றிய காலங்களில் நடைபெறுகிறது.

நீர்நிலைகள் நீரின்றி வறண்டுவிடும் காலங்களில் அமீபா தன் போலிக்கால்களை உள்ளிழுத்துக் கொள்கிறது; உடல் உருண்டை வடிவமாகிறது. அதைச் சுற்றி உறுதியாக ஒரு காப்பு உறையைச் சுரந்து கொள்கிறது. இதற்குக் கூடுறைதல் (encystment) என்று பெயர். இவ்வுறை, செல்பிளாசத்தில் ஏற்படும் வேதிமாற்றங்களினால் உடலின் மேற்புறத் திலிருந்து உண்டாகிறது. இதனுள் அமீபாவின் உயிர்ச் செயல்கள் மிகக் குறைந்த அளவில் நடை

42 அமீபா