அனற்பாறைகள் 695
தின்மைநிலை (massive) ஊடுருவிய (intursion) பாறைகளிலும் இரண்டாவதாகக் கூறப்பட்ட இடை நிலைப்படிகயாப்பு, வெளி உமிழ் பாறைகளில்(effusive) சில இடையாழப் பாறைகளிலும் (some bypabyssal rocks) காணப்படுகின்றன. கடைநிலையான கண்ணாடி (glassy or hyaline) நிலைப்படிகம் பெரும் பாலும் எரிமலைக் குழம்பில் காணப்படுகின்றது. முழுபடிகநிலை மெதுவான சீராக படிகமாதல் முறை யைக் குறிக்கின்றது. எனவே, இதில் காணப்படும் கனிமங்கள் பரும் பரல்களாகவும் (coarse grained), இடைநிலைப் பரும் பரல்களாகவும்(medium grained), நுண் பரல்களாகவும் (fine grained) காணப்படும். அப்பானைட்டு யாப்பு (apbanitic) என்பது நுண் பரல் யாப்பைக் குறிப்பது. இதில் தனித்தனிக் கனி மங்கள், கண்ணுக்குப் புலப்படாத நுண்படிகங்களாக இருக்கும். இவை பெரும்பாலும் எரிமலைப் பாறை களான ஆண்டிசைட்டு (andesite), டோலரைட்டு (dolerite), நோரைட்டு (norite) ஆகியவற்றில் காணப்படுகின்றன. காப்ரோ (gabbroic), அப்லைட்டு கிரானைட்டு (granatic) ஆகியவை (aplitic) தன் உரு வாக்க யாப்பைப் பெற்றிருக்கும். அனற்பாறைகள் படிக உருவ வகைப்பண்புகள் இல்லாமல் காணப் பட்டால், அவற்றை அல்படிக வடிவமற்ற மணிகள் (allotriomorphic granular) என அழைப்பர். இதற்கு எடுத்துக்காட்டாக அப்லைட்டு (applite) என்ற பாறையைக் காட்டலாம். அவ்வாறு அல்லாமல் தன் உருவாக்கப் (idiomorphic) படிக வடிவ வரைகள் மிகுந்து காணப்பட்டால் அவை பொதுத் தன்னுரு வாக்க மணிகள் யாப்பு (paridiomorphic granular texture) என அழைக்கப்படும். இதற்கு எடுத்துக் காட்டாக காப்ரோ (gabbrro) நோரைட்டு (norite) என்ற அனற்பாறைகளைக் கூறலாம். அவ்வாறன்றி ஒன்றுக்கொன்று பலவகைத் தன் னுருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தால் அவ்வகை யாப்பு கள் இடைத்தன்னுருவாக்க மணிகள் யாப்பு(hypidio- morphic) என அழைக்கப்படும். இதற்கு எடுத்துக் காட்டாக, கிரானைட்டு வகைப் பாறையைக் காட்ட லாம். இதில் இரும்பை உட்கூறுகளாகக் கொள்ளக் கனிமங்கள் தன்னுருவாக்க நிலை யாப்பு உடையவை யாகக் காணப்படுகின்றன. ஊடுருவிய பாறைகளின் யாப்பைப் பார்க்கும் போதுபெக்கமடைட்டுவகை(pegmatitic) என்ற யாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வகை கட்ட மைப்பு யாப்புக்கள் இரு கனிமங்கள் ஒருங்கமை படிக மாகும்போது தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாகப் ஃபெல்சுபாரும் குவார்ட்சும் ஒருங்கமை படிகமாகும் போது கிராபிக் கிரானைட்டு என்ற அனற்பாறை அனற்பாறைகள் 695 வகை உருவாகின்றது. காண்க, கிராபிக் கிரானைட்டு (graphic granite). சில கனிமங்கள் சிறு மணிகளாகப்(small grains) பெருமணிகள் நிறைந்த கனிமத்தில் பொதிந்து இருந் தால் இவ்வகை யாப்பை நுண்ணமர் பருந்திரள் (poikilitie texture) என அழைப்பர். இதற்கு எடுத் துக்காட்டாக டோலரைட்டு (dolerite) என்ற பாறை யைக் காட்டலாம். பாறைக் குழம்பு வெளியே உமிழப்படுவதற்கு முன்பே கனிமங்கள் படிகமாகி முதலில் படிக நிலையை அடைந்த கனிமங்கள் அனற்குழம்பில் மிதந்து கொண்டு காணப்படும். அந்நேரத்தில் திடீர் குளிர்நிலையில் பருஅமர் நுண்திரள் பிரிதல் (porphyritic seggregations) அல்லது பெரும் பரல் யாப்பு (phenochysts ) (phenochysts) உண்டாகிறது. அதாவது படிக நிலையடைத்த கனிமங்களில் பருஅமர் நுண் திரள் (porphyritic) காணப்படுகிறது. இதற்குப் P படம் 11. இடைநிலைப் படிக உருவாக்க யாப்பு பெரும்பரல் யாப்பு (phenocrysts) எனப்பெயர். இக் கட்டமைப்புகள் இயல்பாக வெளி உமிழ் பாறைக் குழம்பில் காணப்படும். மேலும் இவை பாறைக் குழம்பு படிகமாதலின் புற வேதியியற் சுழலைப் பொறுத்து மாறுபடும். பாறைக் குழம்பு திடீர் என்று குளிர்ச்சியடையும் போது கண்ணாடி போன்ற பாங்கில் கனிய நுண் கருக்கள் (microlites) பல அளவில் பொதிந்து காணப்பட்டால் அவ்வகை யாப்பைப் பருஅமர் நுண்திரள் யாப்பு (microlites texture) அல்லது