பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/729

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனற்பாறைகள்‌ வகைப்பாடு 699

அடையும்போது, குளோரைட்டு (chlorite) எபி டோட்டு (epidote) ஆகியவையும் உண்டாகின்றன. செரிசைட்டுடாக்கம், சியோலைட்டாக்கம்,செர்பன் டினைட்டாக்கம், குளோரைட்டாக்கம் ஆகியவை இரண்டாம்வகைக் கனிமங்களை உருவாக்கும் செயல் முறைகள் ஆகும். அண்மைக்காலத்தில் இரண்டாம் தரக் கனிமங் கள் எல்லாம் பாறைச் சிதர்வால் (weathering of rock) உண்டானவை என்றும், அனற்பாறை படிகமாத லுக்குப் பின் நீர் வெப்பக் கரைசல்களின் வேதி வினை யால் ஏற்பட்டன என்றும் கணித்துள்ளனர். நூலோதி 1. Milovsky. A.V., Mineralogy and Petrography, Mir Publishers, Moscow, 1982. 2. Holmes, A., Holmes, D.L., Holmes Principles of Physical Geology, ELBS & Nelson, London., 1985. 3. Hatch, F.H., Wells, A.K., Wells, M.K., Petro- logy of the Igneous Rocks, CBS Publishers and Distributors, Delhi, 1984, 4. Best, M.G., Igneous and Metamorphis Petro- logy, CBS Publishers and Distributors, Delhi, 1986. 5. Tyrell, G.W., The Principles of Petrology, BI Publications Pvt. Ltd., Delhi, 1985. அனற்பாறை வகைப்பாடு அனற்பாறைகளை (igneous rocks) ஆழத்தின் அடிப் படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை 1) ஆழ்நிலைப்பாறைகள் (plutoric rocks or intrusive rocks) 2) இடையாழப் பாறைகள் (hypabyssal rocks), 3) வெளிஉமிழ்வுப் பாறைகள் (extrusive rocks) என்பனவாகும். விரிவான வகைப்பாட்டை முதல் இரண்டாம் அட்டவணைகளில் காண்க (பக்கங்கள் 700, 701), ஆழ்நிலைப் பாறைகள். ஆழ்நிலைப்பாறைகள் மிக அதிகமான ஆழத்தில் படிகமாவதால் தோன்று கின்றன. அதிக ஆழத்தில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் பாறைக்குழம்பு படிகமாதல் நீண்டகாலத் திற்கு மெதுவாகநடைபெறுகிறது. எனவே இப்பாறை க அனற்பாறைகள் வகைப்பாடு 699 கள் படிக அமைப்பைப் பெற்றுள்ளன. படிகமாதல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால் படிகங்கள் மிகப் பெரியனவாகக் காணப்படுகின்றன. இப்பாறை களில் கனிமப் பொருட்கள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டிருக்கும். ஆழ்நிலைப் பாறைகளுக்கு எடுத்துக் காட்டாக, கிரானைட்டு, சார்னக்கைட்டு, பெக்ம டைட்டு, டயரைட்டு, சயனைட்டு, காப்ரோ போன்ற வற்றை கூறலாம். இவற்றில் குவார்ட்சு ஃபெல்சுபார், அபிரகம், பைராக்சின் ஆர்ன்பிளெண்டு போன்ற கனிமங்கள் கலந்துள்ளன. சார்னக்கைட்டு கற்கள் சாலைகள் அமைக்கப் பயன்படுகின்றன. இவை பல்லாவரம், ஆனைமலை, நீலகிரி, சேர்வராயன் மலை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. உ இடையாழப் பாறைகள். பாறைகள். சிலசமயங்களில் ஆழ் நிலைப் பாறைகளும் எரிமலைப் பாறைகளும் கூட திரள்படிக நுண்இழைமை (porphyritic texture) கொண்டுள்ளன. திரள்படிகப் பாறைகளில்சில கனிமப் படிகங்கள் பெரியனவாகவும் சீராகவும் வளர்ந்து உள்ளன. இவற்றைப் பொதிபடிகங்கள் என்றும் இவற்றைச் சூழ்ந்துள்ள படிகக் காரையைப் (ground mass) பொதிபொருள் அல்லது பொதி காரை இழைமை (matrix) என்றும் கூறலாம். இவ்வகையான பாறைப் படிவுகளை இடையாழப்பாறைகள் எனக் கூறப்படுகின்றன. வெளிஉமிழ்வுப் பாறைகள். பாறைக்குழம்பு புவியின் மேல்பகுதியில் வந்து குளிர்ந்து உறைவதால் தோன் றும் பாறைகள் வெளிஉமிழ்வுப் பாறைகள் ஆகும். எரிமலைப் பாறைகளை, வெடித்து மேல் எழும் வகை என்றும், ஓசையின்றி அமைதியாக மேல்எழும்பும் வகை (quiet type) என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். வெடித்து மேல்எழும் வகைப் பாறையில் பாறைக் குழம்பு, நீராவி, வளிமம், கற்கள், தூசி, சாம்பல் ஆகியவை பெருமளவில் மிகவேகமாக வெளி வருகின்றன. வீசியெறியப்பட்ட கற்கள், தூசிகள், சாம்பல் ஆகியவை எரிமலைவாயைச் சுற்றிப் படிந்து எரிமலைக் கூம்பு தோன்றுகிறது. இதற்கு மாறாக ஓசையின்றி அமைதியாக எழும்பும் வகையில் எரி மலைக்குழம்பு வெளிவந்து பல நூறுகிலோமீட்டர்கள் பரவிஅதிகதடிப்புள்ள அடுக்காகஉறைகிறது. எடுத்து காட்டாக, தக்காணப் பீடபூமியில் படிந்த தக்காண பசால்டைக் கூறலாம். பாறைக் குழம்பு புவியின் மேல்மட்டத்திற்கு வரும்போது காற்றின் அமுக்கத்தினால் திடீரென வெப்பத்தை இழக்கிறது. எனவே இது விரைவாகக் குளிர்ச்சியடைந்து உறைகிறது. அதனால் பகுதிகள் வளர்ச்சியடையாமல் உள்ளன. சிலசமயங்களில் படிகங்களற்ற கண்ணாடி போன்ற பொருளாக