708 அனாப்சிடா
708 அனாப்சிடா வனவற்றின் பண்புகளே அதிகமிருப்பதால், அதுவே ஊர்வனவற்றின் உண்மையான முன்னோடி என்ற கருத்து நிலவுகிறது. வரிசை 2. கிலோனியா. ஆமைகள் அனைத்தும் இவ்வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை டிரை யாசிக் காலம் முதல் தற்காலம் வரை எவ்விதப் பெரிய மாற்றங்களையும் பெறாமல் வாழ்வது விந்தையே. ஆமைகள், குளிர்ப்பிரதேசங்கள் தவிர, உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளன. சுமார் 200 சிறப்பினங்கள் உள்ளன. இருப்பினும், ஆசியாவில் உள்ளவை, டெஸ்ட்டுடினே (testudinae), டிரை யோனிக்காய்டியா (trionychoidea) ஆகிய பிரிவு களைச் சேர்ந்தவையே. அமெரிக்காவில்தான் பல் வகை ஆமைகள் உள்ளன. ஆமைகளில், கடல் ஆமை கள், நன்னீர் ஆமைகள், நில ஆமைகள் என மூன்று வகைகள் உள்ளன. வகைப்பாடு கிலோனியா வரிசை மூன்று துணை வரிசை களாகப் (sub orders) பிரிக்கப்பட்டுள்ளது. அவை (1) புளூரோடைரா (pleurodira), (2) கிரிப்ட்டோ டைரா (cryptcdira), (3) டிரையோனிக்காய்டியா (trionychoidea) என்பன. துணை வரிசை 1. புளூரோடைரா. இந்த ஆமை களில் தலை, கழுத்து ஆகியவை பக்கவாட்டில் வளைக்கப்பட்டு ஓட்டின் முன்புறமுள்ள தனிக் குழியில் காணப்படுகின்றன. இவை தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர் போன்ற உலகின் தென் பகுதிகளில் காணப்படுகின்றன. கேரப்பேஸ் (carapace) என்னும் மேற்பெருந் தகடு முழு எலும்பாக்கம் பெற்றுள்ளது; தட்டை யானது. இத் துணைவரிசையில் பீலோமெடூசிடே (pelomedusidae), கெலிடிடே (chelydidae), கேரெட் டோகெலிடிடே (carettochelydidae) எனும் மூன்று குடும்பங்கள் (families) உள்ளன. குடும்பம் 1. பீலோமெடூசிடே. இதில் மூன்று பொது வினங்களும் (genera) 15 சிறப்பினங்களும் உள்ளன. கால்விரல்களில் கூர்நகங்கள் (claws) கொண்டவை. போடோநீமிசில் (Podocnemis) விரலிடைச் சவ்வு (web) காணப்படும். மிகப் பெரிய ஆமையான போடோநீமிசிஸ் எக்ஸ்பேன்சா (Podocnemis expansa) 90 செ.மீ. நீள ஓடு பெற்றுள்ளது. மற்றவை 30 செ.மீ. நீளமுள்ளவை. ஒர் ஆமை 120 முட்டைகள் வரை இடும். முட்டைகள் 40 நாட்களில் பொரி கின்றன. ஓர் ஆமையின் முட்டைகளிலிருந்து.ஏறக் குறைய 2.3.கி. கி. எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆமையின் இறைச்சியும் உணவாகிறது. குடும்பம் 2. கெலிடிடே. இதில் 8 பொதுவினங் களும், 30 சிறப்பினங்களும் உள்ளன. கெலிஸ் ஃபிம் பிரியேட்டா (Chelys fimbriata) விந்தையான தோற்றம் கொண்டது. தலை, கழுத்து ஆகிய பகுதிகளிலுள்ள நீட்சிகளைப் பயன்படுத்தி மீன்களைக் கவருகிறது. கிலோடினா லாங்ஜிகோலிஸ் (Chelodina longicollis) 25 செ.மீ. நீள ஓடு பெற்றுள்ளது; ஊனுண்ணி; மிக நீண்ட கழுத்துடையது; பல வாரங்கள் கூட உண வில்லாமல் வாழக்கூடியது. ஹைட்ரோமெசோ மாக்சி மிலியானி (Hydromedusa maximiliani) நீண்ட கழுத் தைப் பெற்றுள்ளதால் 'பாம்புக் கழுத்து ஆமை, (snake necked turtle) எனப்படும். குடும்பம் 3. கேரட்டோகெலிடிடே. இதன் ஒரே சிறப்பினமான கேரெட்டோகெலிஸ் இன்ஸ்கல்ப்டா Carettochelys insculpta) நியூகினியாவில் ஃப்ளை (fly) ஆற்றில் வாழ்கிறது. இதன் ஓட்டின் நீளம் 45 செ.மீ. படம் 1. தோல் ஆமை