பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னில் மூவிணைய அமீன் p- டொலுயீன் சல்ஃபோ குளோரைடுடன் வினைப்படுவதில்லை. ஓரி ணைய அமீனின் சல்ஃபோனமைடு பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கரைசலில் கரைகிறது; ஆனால் ஈரி ணைய அமீனின் சல்ஃபோனமைடு பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சுரைசலில் கரைவதில்லை. இவ் வாறு கிடைக்கும் காரக் கரைசலைக் காய்ச்சி வடிக் கும் பொழுது மூவிணைய அமீன் முதல் காய்ச்சி வடிக்கும் பொருளாகக் கிடைக்கிறது. வாலையில் எஞ்சியிருக்கும் நீர்மத்தில் ஓரிணைய அமீனின் பெறுதி உள்ளது. இதனுடன் அமிலத்தைச் சேர்க் கும்போது அல்க்கைல் சல்ஃபோனமைடு கிடைக்கி றது. எஞ்சியிருக்கும் திண்மம் இரு அல்க்கைல் சல்ஃ போனமைடு. இச் சல்போனமைடுகளிலிருந்து ஓரி ணைய, ஈரிணைய அமீன்களைப் பெற 70% சல்ஃப் யூரிக் அமிலத்தையோ, 25% ஹைட்ரோக் குளோரிக் அமிலத்தையோ பயன்படுத்தி ஆவி மீள கொதிக்க (refluxing) வைக்க வேண்டும்.

கேப்ரியேல் தாலிமைடு தொகுப்பு. பொட்டாசியம் தாலிமைடுடன் அல்க்கைல் ஹாலைடு வினைபுரியும் போது உண்டாகும் அல்க்கைல் தாலிமைடை உயர் அழுத்தத்தில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் கொண்டு நீராற் பகுக்கும்போது ஓரிணைய அமீன் உண்டாகிறது. இத்தொகுப்பிற்கு கேப்ரியேல் தாலி மைடு தொகுப்பு (Gabriel's phthalimide synthesis) என்று பெயர்.

CO. NH KOH H2O CO. RI CO₂H CO₂H +RNH2

ஹாஃப்மன் முறை. புரோமினையும், காரத்தை யும் பயன்படுத்தி ஓர் அமில அமைடிலிருந்து ஓரி ணைய அமீனைப் பெறும் முறையே ஹாஃப்மன் முறையாகும் (Hofmann's method). இவ்வாறு கிடைக் கும் அமீனில் அமில அமைடைக் காட்டிலும் ஒரு கரி அணு குறைவாக இருக்கும்.

RCONH, + Br, + 4 KOH RNH, + 2 KBr + K,CO, + 2 H,O

ஓரிணைய அமீனிலிருந்து ஈரிணைய அமீனைத் தயா

ரிக்கலாம். ஓரிணைய அமீனை வேண்டிய அளவு அல்க்கைல் ஹாலைடுடன் சேர்த்து வெப்பப்படுத்தும் போது ஈரிணைய அமீன் உண்டாகிறது. இதே போல் மூவிணைய அமீனையும் ஓரிணைய அமீனி லிருந்து தயாரிக்கலாம்.

RNH, + RX → RNH + HX RNH, +2R'X → RR',N + HX

வையாக இயற்புப் பண்புகள். குறைந்த கரி அணுக்களை யுடைய அமீன்கள் வாயுக்கள்; இவை நீரில் கரை கின்றன. இவற்றைத் தொடர்ந்து வரும் அமீன்கள் நீர் மங்களாகவும் திண்மங்களாகவும் உள்ளன. இவ்வமீன் களின் நீரில் கரையும் தன்மை மூலக்கூறு எடை கூடக் கூடக் குறைகிறது. எளிதில் ஆவியாகிற எல்லா அமீன்களும் எரியக்கூடியலை; மீன்நாற்றம் கொண்ட உள்ளன. நான்கிணைய அம்மோனியம் உப்புகள் வெண்மையான படிகத் திண்மங்கள்; இவை நீர் கசியும் தன்மை கொண்டவை. இவற்றின் கரை சல்கள் வன்காரக் கரைசல்கள்; இவை கரைசல் நிலையில் CO,ஐ உறிஞ்சி அம்மோனியாவை வெளிப் படுத்துகின்றன. அம்மோனியாவைப் போன்று அமீன் களும் காரத்தன்மை உடையன. அமீன்கள் கனிம அமிலங்களுடன் வினைப்பட்டு அவற்றின் உப்பு களைத் தருகின்றன. அலிஃபாட்டிக் அமீன்கள் அம் மோனியாவைக் காட்டிலும் காரத்தன்மை மிக்கவை. இதற்குக்காரணம் அல்க்கைல் தொகுதி நைட்ரஜனை நோக்கி எலெக்ட்ரான்களைத் தள்ளுவதே. எனவே நைட்ரஜன் மீதுள்ள இணை எலெக்ட்ரான்கள் ஒரு ஹைட்ரஜன் அயனிக்கு கிடைக் உடனடியாகக் கின்றன.

H R-'N: H + n + H -N-H H +

அமீன்களின் pKa மதிப்புக்களை நோக்கும் போது அவற்றின் காரத்தன்மை கீழ்க்கண்டவாறு அமைந் துள்ளது.

NH, <(CH,),N<CH,NH, <(CH,),NH

வேதிப்பண்புகள். அமீன் உப்புகளை அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தும்போது ஒரு மூலக்கூறு அல்க் கைல் ஹாலைடு நீக்கப்படுகிறது.

+ R₂NH CI HCI -→ RCI + R,NH HCI RCI + RNH, -→ RCI + NH,CI

44 அமீன்கள்