அனார்த்தைட்டு 711
அனார்த்தைட்டு 711 படம் 3. பச்சை ஆமை தால், எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது, மீன், தவளை, மெல்லுடலிகள் முதலியவை இவற்றின் உணவு.ட்டிரையோனிக்ஸ் (Tionyx} பொதுவினத்தைச் சேர்ந்த ஆமைகள் உலகில் பல பகுதிகளில் அதிக மாகக் காணப்படுகின்றன. ட்டிரையோனிக்ஸ் ஃபெ ராக்ஸ் (Tionyx ferox) அமெரிக்காவின் மென்மை யான ஓடுடைய ஆமை' (soft shelled turtle) என் றழைக்கப்படும். சீண்டினால், பிற ஆமைகள் போன்று பதுங்காமல், எதிர்த்து வரும். மிகவும் சிரமப்பட்டு மலையையும் கடந்து மணற்பாங்கான பகுதிக்கு வந்து முட்டையிடும். இதன் இறைச்சி பச்சை ஆமையினத்தைவிடச் சுவையானது. ட்டிரை யோனிக்ஸ் ட்டிரையங்குவிஸ் (Trionyx triunguis) ஆப் பிரிக்காவிலுள்ள ஒரே இனம். இதுதான் இக்குடும் பத்திலேயே மிகப் பெரியது. 90 செ.மீ. நீள ஓடுடையது. ட்டிரையோனிக்ஸ் கேன்ஜட்டிக்கஸ் (Trionyx gangeticus) ட்டிரையோனிக்ஸ் ஹூரம் (Trionyx hurum) ஆகியவை இந்திய ஆமைகளாகும். இவை இந்தி யாவில் பரவலாகக் காணப்படுகின்றன. ஓட்டின் நீளம் 60 செ.மீ. குட்டிகள் அழகிய தோற்றமுடை யவை. தாடையில் அலகில்லாவிட்டாலும், உறுதி யான தசையிலான உதடு உண்டு. ட்டிரையோனிக்ஸ் ஃபார்மோசா(Trionyx formosa) பர்மாவில் வாழ்கிறது. சைக்ளோடெர்மா (Cycloderma), சைக்ளானார்பிஸ் (Cycla- norbis) ஆகிய பொதுவினங்கள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. எமைடா (emyda) இந்தியாவி லுள்ள மற்றுமொரு பொதுவினம். நூலோதி - ர. கு. 1. Ekambaranatha Ayyar, M., A Manual of Zoology, Part II-Chordata, S. Viswanathan Pvt., Ltd., Madras, 1964. 2. Newman, H. H., The Phylum Chordata Pub. Satish Book Enterprises, Motikatra, Agra, 1981. 3. Saxena, O. P., Modern Text Book of Reptilia Pub. S. Chand & Co. Ltd., New Delhi, 1981. அனார்த்தைட்டு அனார்த்தைட்டு (anorthite) என்பது பிளஜி- யோகிளேசு (plagioclase) ஃபெல்சுபார் கனிம