718 அனிச்சைச் செயல்
718 அனிச்சைச் செயல் படத்தில் கண்ட உள்நோக்கிப் போகும் பாதையின் சில பிரிவுகள் பெருமூளையின் புறணிக்கும் செல்லு கின்றன. இதன் விளைவாகத்தான் நாம் முள் குத்துவதில் உள்ள வலியை உணர்கிறோம். அதே சமயத்தில் நமது கால் தானாகவே (பெருமூளைப் புறணியின் உதவி இல்லாமலேயே) தண்டுவடத்தின் உதவியால் மேலே தூக்கப்படுகிறது. இந்த அனிச்சைச் செயலின் பயன் தற்காப்பு, முள் குத்திக் காயம் அதிகமாகி விடாமல் இத் தற்காப்பு அனிச்சைச் செயல் நம்மைப் பாதுகாக்கிறது. அனிச்சைச் செயலில் ஆதாரப்பாதையின் சில பண்பு கள். முன் பக்கத்தில் உள்ள படம், ஆதாரப்பாதை யின் பாகங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, எளிதாக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளது. முன் காட்டியுள்ள படத்தில் சக்தி மாற்றியை, தண்டுவடத்தின் பின்புறக் கொம்பில் உள்ள (pos- terior horn ) நரம்பணுக்களுடன் ஒரு நரம்பணு (3) இணைக்கிறது. பின்புறக் கொம்பிலுள்ள நரம்பணுக் களும் முன்புறக் கொம்பிலுள்ள நரம்பணுக்களும் anterior horn motor neurons) ஓர் இணைக்கும் நரம்பணுவினால் (internancial neuron) இணைக்கப் பட்டுள்ளன. எனவே படத்தில் ரப்பாதையில் கள் உள்ளன. ஒரு சில அனிச்சைச் செயல்களின் ஆதாரப்பாதையில் ஒரே ஒரு நரம்பணுச் சந்திப்பு தான் இருக்கும். இவற்றை ஒற்றை நரம்பணுச் சந் திப்பு அனிச்சை (mono synaptic reflex) எனக் கூறு வர். மற்ற சில அனிச்சைகளிலோ பல நரம்பணுச்சந் திப்புகள் இருக்கலாம். அவற்றைப் பல நரம்பணுச் சந்திப்பு அனிச்சை (polysynaptic reflex are) என்று அழைக்கின்றனர். மேலும் நாம் ஒரு காலைத் தரை யிலிருந்து எடுத்து முள்ளை எடுத்தெறியும் போது, ஒரு காலால் நிற்க வேண்டியுள்ளது. அந்தச் சமயத் தில் நமது எடை அனைத்தையும் அந்தப் பூமியில் ஊன்றும் கால்தான் தாங்க வேண்டும். அதற்கேற்ப உட்பாதையின் சில கிளைகள் தண்டுவடத்தின் மறு பக்கத்தையடைந்து அங்கிருந்து செல்லும் வெளிப் பாதையையும் அதன் வழியாக அடுத்த காலில் இருக் கும் தசைகளையும் தூண்டி இயக்குவிக்கின்றன. காட்டப்பட்டுள்ள ஆதா இரண்டு நரம்பணுச் சந்திப்பு நரம்புச் செய்தி நரம்புகளின் வழியே செல்வதற் கும், நரம்பணுச் சந்திப்புகளைத் தாண்டி வெளிப் பாதை வழியே வந்து செயலுறுப்புகளைத் தூண்டு விக்கவும் சில கணங்களாகும் (milli seconds). இதை மொத்த அனிச்சை செயல் நேரம் (total reflex time) என அழைப்பர்.ஓர் ஆதாரப் பாதையில் பல நரம் பணுச் சந்திப்புகள் இருந்தால் மொத்த அனிச்சைச் செயல் நேரமும் அதிகமாகும். மொத்த அனிச்சைச் செயல் நேரத்தைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆதாரப்பாதையில் எத்தனை நரம்பணுச் சந்திப் புகள் உள்ளன என்று கணக்கிடுகிறார்கள். அனிச்சைச் செயலின் வகைகள், சில அனிச்சைச் செயல்கள் எல்லா மக்களிடத்திலும் பொதுவாக உள்ளன. (எடுத்துக்காட்டு: முள் குத்தியவுடன் காலை எடுப்பது). இத்தகைய அனிச்சைச் செயல்கள் பிறப்பிலிருந்து இறக்கும் வரை செயலபடுகின்றன. அதனால் இவற்றை உடன் பிறந்த அனிச்சைச் செயல் கள் (inborn reflexes) எனக் கூறலாம். மற்ற சில அனிச்சைச் செயல்கள் நமது பட்டறிவினாலும் பழக் கத்தினாலும் உருவாக்கப்படுகின்றன. எனவே இந்த வகையான அனிச்சைகளை உடன்பிறவா அல்லது அனுபவ அனிச்சைகள் (conditional reflexes) எனக் கூறலாம். ஒற்றுமை வேற்றுமைகள். காலில் முள் குத்தி விட்டால் அனைவருமே காலை உடனடியாக மடக்கி முள்ளை எடுத்து எறிவர். அதாவது உடன் பிறந்த அனிச்சைகள் எல்லா மக்களுக்கும் பொதுவானவை. ஒவ்வோர் உடன்பிறந்த அனிச்சைச் செயலுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஆதாரப் பாதை உள்ளது. ஆனால் அனுபவ அனிச்சைகளோ ஒருவருடைய பட்டறிவினால் வருவன. அந்த அனுபவம் இல்லாத வரிடம் இந்த அனிச்சைகள் காணப்படமாட்டா. ஒரு தாய் தன் குழந்தைக்கு வழக்கமாகப் பகல் பத்து மணிக்குப் பாலூட்டுவாள் என வைத்துக் கொள்வோம். ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால் அவளால் அந்தக் குறிப்பிட்ட மணிக்குப் பாலூட்ட முடியவில்லை என்றாலும் சரியாகப் பத்து மணிக்கு அத் தாயின் மார்பகங்களில் பால் சுரப்பு நடைபெற ஆரம்பித்து விடுகின்றது. இது ஓர் அனுபவ அனிச் சைச் செயலாகும். குறிப்பிட்ட நேரத்தில் பாலூட் டாத் தாய்க்கு இந்த அனுபவ அனிச்சைச் செயல் நடைபெறுவதில்லை. அது போலவே ஒரு நாய்க்கு உணவளிக்கும் போதெல்லாம் நாம் ஒரு மணியை ஒலிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். சில நாட்களில் மணியடித்தால் உணவு வரும் என்று நாய் பழக்கப் பட்டு விடுகிறது. மணியடிந்தவுடன் அதற்கு உமிழ்நீர் சுரப்பு அதிகமாகிறது. எங்கிருத்தாலும் உணவளிக்கு மிடம் தேடி ஓடி வருகின்றது. இவ்வாறு பழக்கப் பட்ட நாய்க்கு மணியடித்தாலே போதும், உணவு அளிக்கத் தேவையேயில்லை. அது எங்கேயிருந்தாலும் மணிச்சத்தம் ஒலிக்கும் இடத்திற்கு ஓடி வரும். அதன் உமிழ் நீர்ச்சுரப்பு அதிகமாகும்.