பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/750

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 அனிலீன்‌

720 அனிலீன் என்று அவர் பெயரிட்டார். இப்பெயர் அவுரிச் சாயத்தைத் தரும் அவுரிச்செடியின் தாவரவியல் பெயரான இன்டிகோஃபெரா அனில் (indicofera anil) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். ஏறக்குறைய இதே காலக் கட்டத்தில் சினின் என்பார் நைட்ரோ பென்சினை அம்மோனியம் சல்ஃபைடு கொண்டு ஒரு காரச் சேர்மத்தைத் தயாரித்தார். அப்பொருளுக்கு பென்சிடம் என்று பெயரிட்டார். கி.பி.1834 இல் ருஞ்ச் (Runge) என்பார் நிலக்கரித் தாரிலிருந்து காரவகைப் பொருளொன்றைப் பிரித்தெடுத்தார். அப்பொருளுக்கு கியோனோல் (kyanol) அல்லது சியானோல் (cyanol) என்று பெயரிட்டார். கி.பி. 1843இல் வான் ஹாஃப்மன் (Von Hoffman) என்பார் முந்தியவர்கள் தனித்தனியே தயாரித்த எல்லாச் சேர்மங்களும் ஒன்றே என்பதைக் கண்டறிந்து அதற்கான பெயர் அனிலீன் என்பதையும் நிலை நாட்டினார். எண் இயல்புகள். தூய நிலையில் அனிலீன் ணெய்த் தன்மையுடன் நிறமற்றிருக்கும். காற்றுப்பட வைத்திருந்தால் அது ஆக்கிஜனை ஏற்றுப் பழுப்பு நிறப் பிசினாக மாறுகிறது. இது நீரிலும் மற்ற கரிம கரைப்பான்களிலும் ஆல்கஹால், ஈதர் போன்ற கரைகிறது. கரிமக் கரைப்பான்களின் மிக எளிதில் இதன் கொதிநிலை 184°C, தனித்தன்மையான இனிய மணமும் காறல் சுவையும் கொண்ட இது நச்சுத் தன்மை வாய்ந்தது. இரத்தச் சிவப்பணுக்களுடன் வினைப்பட்டு அவற்றைச் சிதைத்துச் செயலிழக்கச் செய்கிறது. இதனால் கிறுகிறுப்பு, இரத்தச்சோகை போன்ற நோய்கள் உண்டாவதுடன் உணவு செரிப் பதும் தரப்படுகிறது. அனிலீன் தயாரிப்பில் ஈடு பட்டிருப்போர் அதன் ஆவியைச் சுவாசிக்க நேர்வ தால் எலும்பு மூட்டு நோய் உண்டாகிறது. தயாரிப்பு. இரும்புத் துருவல்களையும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கலந்த நீரையும் வினைப்படுத்தி னால் வெளிப்படும் ஹைட்ரஜனைக் கொண்டு நைட்ரோ பென்சீனை ஆக்சிஜன் இறக்கத்திற்குட் படுத்தி அனிலீன் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. மேலும் குப்ரஸ் ஆக்சைடை வினையூக்கியாகக் கொண்டு குளோரோபென்சீனையும் அம்மோனியா வையும் அதித அழுத்தத்தில் 200°C வெப்பநிலையில் வினைப்படுத்தி அனிலீனைத் தயாரிக்கலாம். இவ்விரு முறைகளிலும் தயாரிக்கப்படும் அனிலீன் நீராவியால் காய்ச்சி வடித்துத் தூய்மையாகப் பெறப்படுகிறது. வேதிப்பண்புகள். அலிஃபாட்டிக் அமின்களுடன் ஒப்பிடும்போது அரோமாட்டிக் அமீனான அனிலின் கார வலிமை குன்றியதாகும். கனிம அமிலங்களுடன் வினையுற்று இது உரிய உப்புகளை விளைவிக்கிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைப்பட்டு அனிலீன் - ஹைட்ரோகுளோரைடு சேர்மத்தைச் செதிள் வடிவப் படிகங்களாகத் தருகிறது. இப் படிகங்கள் முதலில் நிறமற்றிருந்தாலும் காற்றுப்பட வைத்திருந்தால் பச்சை நிறம் பெறுகின்றன. எனவே இச்சேர்மத்தைக் காலிக்கோ துணி மீது செய்யும் அச்சு வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். அம்மோனியா சேர்மங்களுடன் அனிலீனைச் சேர்த் துச் சூடாக்கினால் அம்மோனியா வளிமம் வெளிப்படு கிறது. இதே போல் துத்தநாகம், அலுமினியம், கரைசல்களுடன் இரும்பு ஆகியவற்றின் சேர்மக் அனிலீனையும் வினைப்படுத்தினால் அவற்றின் ஹைட்ராக்சைடுகள் கிடைக்கின்றன. அனிலீனையும் சல்ஃப்யூரிக் அமிலத்தையும் வினைப்படுத்தினால் அனிலீன்-ஹைட்ரஜன் சல்ஃபேட் உப்பு கிடைக்கும்; இதை 200°C வெப்பநிலைக்குச் சூடாக்கினால் சாயங் கள் தயாரிக்கப் பயன்படும் சல்ஃபோனிலிக் அமிலம் கிடைக்கிறது. அனிலீனை அரோமாட்டிக் அமிலங்களுடன் வினைப்படுத்தினால் அமினோதொகுதியில் பதிலீடு {substitute செய்யப்பட்டு அனிலைடுகள் (anilides) கிடைக்கின்றன. அசெட்டிக் அமிலமும் அனிலீனும் வினைப்படுவதால் அசெட்டனிலைடு என்னும் பொருள் கிடைக்கிறது; இது காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாகப் (antipyretic) பயன்படுகிறது. அமிலம் கலந்த பொட்டாசியம் டைக்குரோமேட் காப்பர் சல்ஃபேட் ஆகியவற்றுடன் அனிலீன் வினைபுரிந்து. அனிலீன் கருப்பு' (aniline black) என்ற சாயப் பொருள் கிடைக்கிறது. மிகக் குளிர்ந்த நிலையில் நைட்ரஸ் அமிலத்துடன் (nitrous acid) அனிலீன் வினைபுரிந்து டையசோனிய உப்பை (diazonium salt } தருகிறது. செயற்கைச் சாயம் போன்ற பல முக்கியப் பொருள்களைத் தயாரிக்க டையசோனிய உப்பு அடிப்படைப்பொருளாக அமைகிறது. அனிலீன் (aniline ) பல்யூரேத்தேன்கள் (thermo plastics) வகை வெப்பக் குழைமங்கள் உருவாக்கப் பிசின் வகை காரங்களாலும், பயன்படுகிறது. யான இவ் ரெசின்கள் வலிமிகு காற்றுப்பட வைத்திருந்தாலும் பாதிக்கப்படுவ தில்லை. இவை மின் கடத்தாப் பொருள்களும், வெப்பம் கடத்தாப் பொருள்களும் செய்யப்படுகின் றன. அனிலீனும், அனிலீன்- ஹைட்ரோகுளோரை டும் இணைந்து உண்டாகும் டைஃபீனைல் அமீன் சேர்மம் காரங்கள் தயாரிக்கவும், மசகு தயாரிக்கவும் பயன்படுகிறது. ஏவூர்தி எரிபொருள் கால்நடை நோய் மருந்துகள், சாயங்கள். புகைப் படத் தொழிலில் பயன்படும் ஹைட்ரோகியூனோன் போன்றவை அனிலீனில் இருந்து தற்போது தயா ரிக்கப்படுகின்றன. எண்ணெய் ருத்ர, து.