பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/758

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 அனைத்துண்ணிகள்‌

728 அனைத்துண்ணிகள் நுண்ணுயிர்கள், மற்ற விலங்குகளின் பாகங்களையும் வை உண்ணும். அனைத்துண்ணிகளுக்குப் பலவகையான முத வகை லுயிரிகள் (protozoa), மண்புழுக்கள், சில நண்டுகள், இறக்கையற்ற சில வகைப் பூச்சிகள் கரப்பான் பூச்சிகள், கிளிஞ்சல்கள், நன்னீர்மட்டிகள், சிலவகைக்கெழுத்தி மீன்கள், தீக்கோழி, வாத்துக்கள், தென் அமெரிக்க நெருப்புக்கோழி (rhea), காக்கை, கோழி, சிலவகைக்குறுங்காடைகள், தாமரைக்கோழி (pheasant tailed jacana), கான மயில், வரகுக்கோழி, மலைமூக்கன் (wood cock), மயிர் உள்ளான் (painted snipe), மலை மொங்கான் (horn bill), கருப்பு உள்ளான் (black winged stilt), அமெரிக்க பைக்கீரி ( American opossum), பிராமிலிஸ் (pera- meles), டைடெல்பிஸ் (didelphys), சிலவகைப்புனுகுப் பூனைகள், தேனுண்ணும் சில வகைக் கரடிகள், வீட்டு எலிகள், சிவப்பு நரிகள், ரக்கூன்கள் (racoons) பன்றிகள், தேவாங்குகள் (loris), சிலவகைக் குரங்கு கள், மனித இனம் ஆகியவைகளை எடுத்துக்காட்டுக ளாகக் கூறலாம். பலவகையான முதலுயிர்களும் (protozoa) நன்னீர்மட்டி, கிளிஞ்சல் போன்றவையும், நுண்ணிய தாவரங்களையும், விலங்குகளையும் இரையாக எடுத் துக் கொள்ளக்கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். மண்புழுக்கள் போன்ற பலவகைப் புழுக்களும், கொலம் போலா, தைசானூரா வகுப்புகளைச் சார்ந்த இறக்கையற்ற பூச்சிகளும் அழுகி மக்கிப்போய் மண் ணோடு கலந்து இருக்கக்கூடிய தாவர விலங்குகளை உண்கின்றன. கரப்பான் பூச்சி போன்ற சில வகைப் பூச்சிகள், காகிதம். தோல், தானியம், சர்க்கரை முதலிய பல பொருள்களையும் உண்ணக்கூடியவைக ளாகும். சிலவகைக் கெழுத்தி மீன்கள் நீர்ப்பாசிகளையும் மெல்லுடலிகளையும் (mollusca) உணவாகக் கொள் ளும் தீக்கோழி சிறு பயிர்களையும், எறும்புகளையும் உண்ணும். தென் அமெரிக்க நெருப்புக்கோழி புல்பூண்டுகள், வேர்கள், விதைகள், பூச்சிகள், ஊர்வன (reptiles) ஆகியவைகளை உணவாக எடுத்துக் கொள் ளும். சிலவகை வாத்துகளுக்கும், நாரைகளுக்கும், தானியமணிகள், தளிர்கள், மலர்கள், பூச்சிகள், மெல் லுடலிகள், அகடூரிகள் போன்றவை உணவாக அமை கின்றன. கோழிகள் தானியமணிகளுடன் புழு, பூச்சி, பூரான் போன்றவைகளையும் உண்ணுகின்றன. காக்கை பயிருணவுடன், எலி, பல்லி, ஓணான், மீன், ரொட்டி, இறைச்சி, வெட்டுக்கிளி, கறையான், முட்டை போன்றவைகளையும் உண்ணும். குறுங் காடைகளுக்கு விதைகளும் இளந்தளிர்களும் பூச்சி களும் உணவாகப் பயன்படுகின்றன. டைடெல்பிஸ் பூச்சிகள், பழங்கள், முட்டைகள் ஆகியவற்றை உட் கொள்ளுகின்றன. தேன், பழங்கள், பூச்சிகளின் முட்டைப் புழுக்கள், கறையான்கள் ஆகியவை தேனுண்ணும் கரடி வகைகளின் உணவாகும். சிறிய பாலூட்டிகளும், பறவைகளும், கனிகளும் ஒருவகைப் புனுகுப் பூனைக்குப் பிடித்தமான உணவாகும். தேவாங்குகள் பழங்களையும், பூச்சிகளையும் உண வாக எடுத்துக் கொள்ளும். சிலவகைக் குரங்கு களுக்குக் கனிகளும், இலைகளும், வேர்களும் உண வாக இருப்பதோடன்றிப் பூச்சிகளும் இரையாகப் பயன்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக மனித இனம் அனைத்துண்ணிக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. மனிதர்கள் சிலர் தாங் கள் காய்கறிகளை உண்ணுகின்றவர்கள் (vegetarian) என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், தங்களுக் குத் தெரியாமலேயே அனைத்துண்ணிகளாகத்தான் விளங்குகிறார்கள். ஓணான் பூச்சியுண்ணியாக இருந்தாலும் சில சமயங்களில் பயிர்களின் இளந்தளிர்களையும் பிஞ்சு களையும் உண்கின்றது. எனவே அவையும் அனைத் துண்ணிகளே. நாய்களும், பூனைகளும் ஊனுண்ணி களாகவிருந்தாலும், வீடுகளில் பழக்கப்பட்டு வளர்ந்து வருவதால் அவை அனைத்துண்ணிகளாக மாறி விட்டன. அனைத்துண்ணிகள் தாம் பார்ப்பவைகளை யெல்லாம் தேவைப்பட்டால் பிடித்து உணவாகக் கொள்ளும்.பயிருண்ணியினை ஊனுண்ணி பிடித்து உண்ணுகின்ற காட்சியினைக் கண்டு, அந்நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து ஊனுண்ணியால் மீத மாக விடப்பட்ட எஞ்சிய உணவினைப் பல அனைத் துண்ணிகள் உண்ணும் (எ. கா. காகம்). மற்றும் சில, நீரிலோ மண்ணிலோ கலந்துள்ள நுண்ணிய தாவர, விலங்குகளின் விலங்குகளின் மட்கிய பொருள்களினால் உயிர் வாழும். அனைத்துண்ணிகள் உணவினைப் பெறுவதற் கும், இரையினைப் பிடிப்பதற்கும் சில தகவமைப்பு களைக் கொண்டிருக்கின்றன. அமீபா போன்ற ஒரு செல் உயிர்கள் பொய்க்கால்களின் துணையினால் இரையை விழுங்குகின்றன. பரமீசியம், ஸ்டெண்டார் போன்ற ஒரு செல் உயிர்கள் நுண்ணிய உணவுப் பொருள்களைக் குறு இழைகளின் (cilia) துணை யினால் நீரோட்டத்தை ஏற்படுத்தித் தொண்டை போன்ற ஓர் அமைப்பினுள் நீரோட்டத்துடன் நுண்ணுயிரிகளைச் செலுத்தி உணவினை உட் கொள்ளுகின்றன. மண்புழுக்கள் உணவினை உட் கொள்ளும் பொழுது வாய்க்குழியை வெளித்தள்ளி, தசையினாலான தொண்டையின் இயக்கத்தால் உணவை உறிஞ்சுகின்றன.