பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுக்கக் காற்று

களாக இல்லாமல் கலப்புத் தொகுதிகளாக இருப்பின் நான்கிணைய அம்மோனியம் உப்புக் காணப்படு கிறது.

கண்டறி சோதளைகள். அமீன்களை வேறுபடுத்திக் காணப் பல வினைகள் உள்ளன. அவையாவன, ஷாட்டன் - பாமன்வினை(Schotte Baumann reaction), ஹின்ஸ்பர்க்கு சோதனை (Hinsberg test), கார்பைல மின் வினை (carbylamino reaction), நைட்ரஸ் அமில வினை (nitrous acid reaction).

ஷாட்டன் பாமன் வினை. இவ்வினையில் அமீன் காரக் கரைசலிலிருக்கும் பென்சாயில் குளோரைடுடன் வினைபடுத்தப்படுகிறது. ஓரிணைய, ஈரிணைய அமீன்கள் பதிலீடு செய்யப்பட்ட பென்சமைடுகளைத் தருகின்றன. மூவிணைய அமீன் இவ்வினையைக் கொடுப்பதில்லை.

RNH, + C.H,COC! + OH C,H, CONHR + Cli + H,O R,NH + C,H,CCCI + OH CH,CONR, + ci + H,O

பதிலீடு செய்யப்பட்ட அமீன்கள் பொதுவாக நீரில் கரைவதில்லை. இவை சாதாரணமாகத் திண்மங்கள்; வெவ்வேறான உருகுநிலைகளைக் கொண்டவை.

கார்பைலமின் வினை. கார்பைலமின்கள் (ஐசோ சயனைடுகள்) விரும்பத்தகாத, குமட்டலை உண் டாக்கும் நெடியுடையவை. இவை ஓரிணைய அமீன்கள் காரக் கரைசலிலிருக்கும் குளோரோஃபார்முடன் வினைபுரியும் போது கிடைக்கின்றன.

RNH, + CHC1, + 30HR-N-C:+3CĪ +3H_O

நைட்ரஸ் அமில வினை. ஓரிணைய அலிஃபாட்டிக் நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து நைட்ரஜனை யும் ஓரிணைய அரோமாட்டிக் அமீன்கள் டை அசோனியம்உப்புக்களையும் கொடுக்கின்றன. அலிஃ பாட்டிக், அரோமாட்டிக் சரிணைய அமீன்கள் பொதுவாக மஞ்சள் நிறமுடைய(நைட்ரோசோஅமீன் களைத் தருகின்றன. நைட்ரோசோஅமீன்கள் புற்று நோயை உண்டாக்குபவை). மூவிணைய அலிஃ பாட்டிக் அமீன்கள் நைட்ரஸ் அமிலத்துடன் வினைப் படுவதில்லை.

பயன்கள். உயிர் வேதியியலில் அமீன்களின் பங்கு இன்றியமையாததாகும். இயற்கைப் பொருள்களில் நிறைந்து காணப்படும். அமினோ அமிலங்களும் அல்க்கலாய்டுகளும் வைட்டமின்களும் இதற்குச் சான்றுகளாகும். அட்ரினலீன் என்கிற எப்பிநெஃப்

ரின் (epinephrine), வைட்டமின் பி-1 எனப்படும் தயாமின் (thiamine), நோவோக்கையன் (novocaine போன்ற சிக்கலான அமீன்கள் உடற்செயற்பாட்டில் பெரிதும் பங்கேற்கின்றன. அமீன்களை அடிப்படை யாகக் கொண்டு பல மருந்துப் பொருள்கள் தற்போது தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, தொகுப்பு முறையில் தயாரிக்கப்படும் நைலான் இழை அமீன்களின் பெறுதிகளே ஆகும்.

-கோ.கோ.

நூலோதி

1. Finar I,L., Organic Chemistry, Vol I, Sixth Edition, ELBS London, 1973.

2. Allinger, Norman L., Cava, Michael P., DeJough Don C., Johnson, Carl R., Lebel, Norman A., and Steveas, Calvin L., Organic Chemistry. Fourth Edition, Worth Publishers, Inc., New York, 1974.

அமுக்கக் காற்று

வளிமண்டலத்தைவிட அதிகமான அழுத்தத்தில் அமுக்கி அடைக்கப்பட்ட காற்று பலவகைகளில் பயன்படுகிறது. அமுக்கக் காற்றைக் (compressed air) கொண்டு ஆற்றலைப் பெறும் முறை மிசு எளியது; பல வேலைகளுக்கு ஏற்றது. அமுக்கக் காற்றை இரு முறைகளில் பயன்படுத்தலாம். அது நேரடியாக விரியும்போது வேலை செய்யுமாறு அமைக் கலாம். காற்றுத் தூவி (air brush), காற்று உயர்த்தி (air lift) முதலிஃபவை இத்தகைய சாதனங்களாகும். (காண்க, காற்றுத்தூவி) அமுக்கக் காற்றை குழலின் வழியே மெல்லிய தாரையாக (jet) வெளி யேற்றி,எந்திரங்கள், தானியங்கிகள் முதலியவற்றைத் தூய்மை செய்யப் பயன்படுத்துகிறார்கள். தொடர் வண்டிகளிலும், டிராம் வண்டிகளிலும் பயன்படும் காற்று நிறுத்தியிலும் (air brake) (காண்க, நிறுத்தி கள்) அமுக்கக் காற்று இவ்வாறு பயன்படுகிறது.

இரண்டாம் முறையில் அமுக்கக் காற்று தனது ஆற்றலைத் தந்து, கருவியையோ, எந்திரத்தையோ இயக்குகிறது. இது நூற்றுக்கணக்கான வகைகளில் பயன்படுகிறது. இவற்றுள் முக்கியமானது அமுக்கக் காற்றோடி (air motor). இதில் அமுக்கக் காற்று காற்றோடியின் சிறகுகளினிடையே விசையுடன் பாய்ந்து அவற்றைச் சுழற்றுகிறது. இவ்வாறு சுழலும் உறுப்புடன் பல்சக்கரங்களாலோ, பட்டைகளாலோ

46