732 அனைத்துலக இயற்கை, இயற்கைவளப் பாதுகாப்பு ஒன்றியம்
732 அனைத்துலக இயற்கை, இயற்கைவளப் பாதுகாப்பு ஒன்றியம் அனைத்து நாடுகளின் வேளாண்மை ஆராய்ச் சிக்கான பணி நிலையம் (International service for national agricultural research - ISNAR). மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் நெல் மேம்பாட்டுக் கழகம் (West Africa rice development association-WARDA) லைபீரியா நாட்டில் மொன்ரோவியாவில் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மண்டலக் கூட்டுறவு முயற்சியில் நெல் தகவமைப்புச்(adaptive) சோதனை களைச் செய்து வருகிறது. அனைத்து நாடுகளின் மரபுத் தாவரங்களுக்கான வாரியம் (International board for plant genetic resour ces - IBPGR). உலக வேளாண்மை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிலையங்களில் இது ஓர் சிறப்பான பங்கு வகிக்கிறது. இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இந்த வாரியம் 1974 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. அனைத்துலக அளவில் மரபுத்தாவரப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதும், அவற்றைச் சேமித்து, வளர்த்து, ஆய்வு செய்வதும் அவை பற்றிய குறிப்பு களைத் தயார் செய்தலும் இந்த வாரியத்தின் குறிக் கோளாகும். இவ்வாரியத்தில் கோதுமை, பீன்ஸ், மரவள்ளி, சர்க்கரைவள்ளி, தக்காளி போன்றவை முதல் தரப் பயிர்களாகவும், நெல், சோளம், சேழ் வரகு, நிலக்கடலை, சோயாமொச்சை, தட்டைப்பயறு உருளைக்கிழங்கு, தென்னை, கடுகு, பருத்தி,வாழை கரும்பு போன்றவை இரண்டாந்தரப் பயிர்களாகவும் கருதப்படுகின்றன. இந்த வாரியத்தின் கிளை நிலை யங்கள் கிழக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அமைந் துள்ளன. மேலே விவரிக்கப்பட்ட உலக ஆராய்ச்சி நிலை யங்களில் கண்டு பிடிக்கப்பட்ட பொது உண்மை களை இந்திய நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களும், மாநில ஆராய்ச்சி நிறுவனங்களும், வேளாண்மைப் பல்கலைக் கழகங்களும் ஆராய்ந்து அந்தந்த இடங் களுத்குத் தக்கவாறு மாற்றி அமைத்து, இணை ஆராய்ச்சிகள் நடத்தி மக்களுக்கு உதவி வருகின் றன. இவையன்றிக் கால்நடைகளுக்கான இரு அனைத்து நாடுகளின் ஆராய்ச்சிக் கழகங்கள் இயங்கி வருன்றன. அவை 1. அனைத்து நாடுகளின் கால்நடை நோய்களின் ஆராய்ச்சிக் கூடம் (Interna- tional laboratory for research on animal diseases- ILRDA). இது கென்யா நாட்டில் நைரோபி நகரில் அமைந்துள்ளது. இந்த ஆய்வு மையம் 1974 ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. கால் நடைகளைத் தாக்கும் கொடிய நோய்களாகிய "டிரிபனோசோ மியாசிஸ்", "தைலீரியாஸிஸ்" ஆகியவை பற்றித்தீவிர ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 2. அனைத்து நாடுகளின் ஆப்பிரிக்கக் கால்நடை மையம் (Interna- tional live stock centre for Africa-ILCA). இது 1974 ஆம் ஆண்டு எதியோபிய நாட்டில், அடிஸ்ஆபாபா நகரில் தொடங்கப்பட்டது. கால்நடைகளில் சிறந்த உற்பத்தி முறைகளைக் கண்டறிவது இம்மையத்தின் குறிக்கோள். இந்த மையம் ஆப்பிரிக்கா கண்டத்தில் கால்நடைகளின் மேம்பாட்டுக்காகப் பணியாற்று கிறது. நூலோதி ஆர்.அ. 1. Harlan J. R., Our Vanishing Genetic Resources. Science 188: 1975. 2. International Board for Conservation of Plant Genetic Resources Ann. Rep., 1982. 3. International Crop Research Institute for semi Arid Tract, Hyderabad, Ann. Rep., 1981. 4. Ibid. 1982. 5. 6. Ibid. 1983. International Rice Research Institute, Philippi- nes, Anu, Rep., 1981. 7. International Crop Research Institute for impro- vement of Maize and Wheat, Mexico, Ann. Adm. Rep., 1982. அனைத்துலக இயற்கை, இயற்கைவளப் பாதுகாப்பு ஒன்றியம் அரசு நிறுவனங்கள், அறிவியல் கழகங்கள், பாது காப்புகள் அமைப்புகள் ஆகியவற்றின் பராமரிப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்கும் உலக அமைப்பாக அனைத்துலக இயற்கை, இயற்கைவளப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN-International union for conserva- tion of natural and natural resources) செயல்படுகிறது. இந்த அமைப்பு, 1948 ஆம் ஆண்டு பிரான்சு நாட் டில் ஃபான்டெயன்பிள் (Fontainbleau) என்னு மிடத்தில் உலக இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (International union for the protection of nature) என்ற பெயரில் தொடங்கப்பட்டு, 1956 ஆம் ஆண்டு பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்திலுள்ள மோர்ஜஸ் (Morges) என்னு மிடத்தில் உள்ளது. இந்த ஒன்றியத்தில் நூற்றுக்கு மேற்பட்ட