பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/767

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைத்துவர்ப்பு உயிரிகள்‌ 737

எனவே அதன் ஊடுபரவல் அழுத்தம் (osmotic pres- sure) எரியோகீரின் ஊடுபரவல் அழுத்தத்தைக் காட் டிலும் குறைவு. ஆற்றலைச் சேமிப்பதற்குரிய ஒரு கருவியாகி இந்த உடல் திரவ ஊடுபரவல் அழுத்தக் குறைப்பு அமைகின்றது. அது ஊடு பரவுதல் முறை யில் நடைபெறும் அயனிகளின் இழப்பினைக் குறைக் கும். இந்த நண்டு 24 மணி நேரத்தில் தனது எடை யில் 4% சமமான சிறு நீரை வெளியேற்றும். இதனால் கணிசமான அளவு உப்பு இழப்பு சிறுநீர் வாயிலாக ஏற்படுகின்றது. இந்த உயிரியின் உணர் கொம்பு சுரப்பிகள் கார்சினஸினுடைய சுரப்பிகளை விட நன்கு வளர்ந்துள்ளன; அவை நீளமாக, சுருண்ட சுரக்கும் குழாய்களாகக் காணப்படுகின்றன. இக்குழாய்களில் நீரைச் சுரக்கும் பகுதி தனியாக உள்ளது. அதில் சிறுநீர் நீர்த்தப்படுகிறது. சிறுநீரிலி ருந்து இக்குழாய்கள் குளோரைடு அயனிகளை உறிஞ்சுகின்றன. வாழும் நீரில் உப்படர்த்தி மிகவும் குறைவாக இருப்பினும், செவுள்களில் உள்ள குளோ ரைடு செல்கள், சிறுநீர் மூலமாக இழந்த உப்பினை ஈடுகட்ட, ஊடகத்திலிருந்து குளோரைடு, சோடி யம், பொட்டாசியம் ஆகியவைகளை விரைவாக எடுத்துக் கொள்ளும். எனவே உணர்கொம்பு சுரப் பிகள் ஊடுபரவல் சீராக்கத்திற்குப் பெரிதும் உதவி யாய் இருக்கின்றன. ஆர்டீமியா சலைனா (artemia salina) என்ற உவர் நீர் உயிரி உப்பு ஏரிகளிலும், உவர் நீர்க்குளங் களிலும் சிறப்பாக வாழும். 10% கடல் நீரிலும், கடல் நீரினைப் போன்று 10 மடங்கு உப்புச் செறி வினைக் கொண்ட நீரிலும் கூடத் திறம்பட வாழக் கூடிய தகவமைப்பைப் பெற்றது. தான் இயல்பாக வாழும் மிகுந்த உப்புச் செறிவுள்ள உவர் நீரில் வாழும்போது, அது நீரை உடலிலிருந்து இழக்கின் றது. ஆனால் அந்த இழப்பினை ஈடு கட்ட நிரந்தர மாக உப்பு நீரினைக் குடிக்கின்றது. இந்த உயிரியின் உணவுப்பாதை ஒரு சிறந்த ஊடுபரவல் சீராக்க உறுப்பாகச் செயல்படுவதன் மூலம் நீரையும் உப்பை யும் தனித்தனியாகப் பிரிக்கின்றது. குருதியின் உப்புச் செறிவினை நிலைப்படுத்த நீர் பயன்படுகின்றது. உப்புகள் இரத்தத்திலிருந்து, முதல் 10 இணை விரைவாக செவுள்களுக்கு மாற்றப்படுகின்றன. செவுள்களில் உப்புகளை வெளியேற்றும் சிறப்புப் பகுதிகள் உள்ளன. அவற்றின் மூலமாக, அடர்த்தி வாட்டத்தினை (concentration gradient) எதிர்த்து அவை வெளியேற்றப்படுகின்றன. உப்புச் செறிவு குறைந்த ஊடகத்தில் அந்த இறால் வாழும் பொழுது குளோரைடு செல்கள் ஊடகத்திலிருந்து உப்பினை விரைவாக உறிஞ்சுகின்றன. வாள்மீன் (saw fish), கார்கரியஸ் (carcharias போன்ற குருத்தெலும்பு மீன்கள் (cartilagenous அ.க-2-47) அனைத்துவர்ப்பு உயிரிகள் 737 fishes) சில வேலைகளில் ஆறு மற்றும் நன்னீர் நிலை களுக்குச் சென்று வாழும் தன்மையுடையன. அவை தங்களுடைய கடல்நீர் முன்னோர்களைப் போன்று, தங்கள் இரத்தத்திலும், திசுக்களிலும் யூரியாவைத் தக்கவைத்துக் கொள்கின்றன. அவை கடல் வாழ் சுறாக்களைக் காட்டிலும் குறைந்த அளவு யூரி யாவையும்,உப்புகளையும் தங்கள் குருதியில் தக்க வைத்திருந்தாலும், அவற்றின் குருதி, அவை வாழ் கின்ற ஊடகத்தினைக் காட்டிலும் அடர்த்திச் செறிவு மிக்கதாகும். எனவே சவ்வூடு பரவுதல் (osmosis) முறையில் நீர் மிகுதியாக உடலினுள் செல்கின்றது. இவ்வாறு மிகுதியாகச் செல்லும் நீர் தந்துகி வலைப் பின்னல் மலிந்துள்ள சிறு நீரகங் கள் மூலமாக வெளியேற்றப்படுகின்றது. வலசைபோகும் (migratory) மீன்களான வாளை மீன், மலங்கு (eel) நன்னீரிலிருந்து கட டலுக்கும், வஞ்சிரமீன் (salmon) போன்றவை கடலிலிருந்து நன்னீருக்கும் இனப்பெருக்கத்திற்காகச் செல்லும் இயல்புடையன. இவ்வகை மீன்கள் தங்கள் குருதி யின் உப்புச் செறிவினை இருவேறு ஊடகங்களுக்கும் ஏற்பத் தகைப்படுத்திக் கொள்ளவேண்டும். நன்னீ ரில் வாழும்போது வாளை மீனின் குருதியின் உப் புச் செறிவு மிகுந்திருக்கும். அம்மீன்கள் நன்னீர் வாழ் எலும்புமீன்களைப் போன்று நீர்-அயனிச் சீராக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. இந்த மீன்கள் கடலில் நீந்திந்திரியும் போது, அவற்றின் குருதி உப் புச் செறிவு, கடல் நீரின் உப்புச்செறிவினைக் காட் டிலும் குறைவாக இருக்கும், ஆகவே குருதியிலுள்ள நீர், வெளிச்சவ்வூடு பரவல் (exosmosis) முறையில் கடலுக்குள் வெளியேறும். இதனால் ஊடுபரவல் வறட்சி (osmotic desiccation) ஏற்படும். எனவே ஊடுபரவல் வறட்சியைத் தவிர்ப்பதற்காக அம்மீன் கள் கடல் நீரினைக் குடிக்கும். அதே சமயம் தேவை யற்ற உப்புகளைச் செவுள்களில் உள்ள குளோரைடு செல்கள் மூலம் வெளியேற்றும். நீர் - அயனிச் சீராக்கத்தை நிலைநாட்டப் பல நாளிமில்லாச் சுரப்பிகள் துணை புரிகின்றன. நூலோதி கு.வ. 1. Barnes, H., Oceanography and Marine Biology George Allen & Unwin Ltd., London, 1964. 2. Barnes, R.D. Invertebrate Zoology, W.B. Saunders & Co., London, 1974, 3. Newell, R.C. Biology of Intertidal Animals, Logos, London, 1970.