பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுக்க விகிதம் 47

வேறு எந்திரங்களை இணைத்து அவற்றை இயக்க லாம். இது சுரங்க வேலையில் எந்திரங்களை இயக் கப் பெரிதும் பயன்படுகிறது. நிலக்கரியை வெட்டி எடுக்கவும், பாறைகளில் குடையும் துரப்பணங்களை இயக்கவும், நிலத்தடியில் குடைவுப் பாதைகள் அமைக்கவும் இந்தக் காற்றோடி பயன்படுகிறது. காற்றோடியை இயக்கும் காற்றை எஃகு உருளை களில் அடைத்து, வலிவும் நெகிழ்வுமுள்ள குழல்களின் வழியே காற்றோடிக்குள் அனுப்பி இதை இயக்க லாம். ஆகையால் காற்றோடியை மிகவும் எடை குறைந்ததாக அமைக்க முடிகிறது. இதனால் எந்தி ரத்தைக் கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்ய முடிகிறது. மேலும் இந்தக் காற்றோடியின் எப்பகுதி யும் அதிகமாகச் சூடேறித் தீங்கு ஏதும் விளைவிப்ப தில்லை. தீயினால் நேரும் விபத்தும் இதில் இல்லை. இதனாலேயே இது சுரங்க வேலைக்கு இன்றியமை யாத சாதனமாக விளங்குகிறது. வெடி மருந்துக் கிடங்குகளில் வேறுவகைப் பொறிகளை ஓட்டுவது தீங்குமிக்கது. ஆகையால் அமுக்கக் காற்றோடியைக் கொண்டு இயங்கும் வண்டிகளைத்தான் இங்குப் பயன்படுத்த வேண்டும். வெடிமருந்தைக் கொண்ட டார்ப்பிடோக்களை ஓட்டிச் செல்ல இக்காற்றோடி யைப் பயன்படுத்துகிறார்கள். டிராம் வண்டிகளை யும் தானியங்கிகளையும் இதைக் கொண்டு ஓட்ட முயன்றிருக்கிறார்கள்.

துரப்பணங்களையும், அரைக்கும் எந்திரங்களை யும், நீர் இறைக்கும் எக்கிகளையும் (pumps) இயக்க, அமுக்கக்காற்று பயன்படுகிறது. சாலைகள் அமைப் பதில் காற்றினால் இயங்கும் துரப்பணங்கள் பல மனிதர்கள் செய்யும் வேலையை மிகவும் விரைவாகச் செய்கின்றன. உலோகத் தகடுகளைத் தரையாணி களால் இணைக்கவும் இம்முறை மிக அதிகமாகப் பயன்படுகிறது. வானளாவும் உயர்ந்த கட்டட வேலைகளுக்கு இது மிகவும் ஏற்றது. ஏந்திகளும் (cranes), தூக்குகளும் (jacks), உலைக்களச் சம்மட்டி களும் அழுத்தமான காற்றினால் இயங்குகின்றன. இருப்புப் பாதைகளில் பயன்படும் கைகாட்டிகளை யும், வேறு எச்சரிக்கை அமைப்புகளையும் இயக்கு வதற்கு, அழுத்தக் காற்று பயன்படுகிறது. அழுத்தக் எளிய காற்று எந்திரங்கள் எடை குறைந்தவை; அமைப்பைக் கொண்டவை; தீங்கு தரும் வளிமங் களை வெளியிடாமலும், தீயையோ, தீப்பொறி யையோ தோற்றுவிக்காமலும் இருப்பதால் இவை பரவலாகப் பயன்படுகின்றன.

அமுக்கக் காற்று முதன்முதலில் 1861-இல் ஐரோப்பாவிலுள்ள மான்செனிக் குடைவை அமைக் கும்போது பயன்படுத்தப்பட்டது. இதிலுள்ள நன்மை களை ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் (George westing house) என்னும் பொறியியல் அறிஞர் அறிந்தார்.

ஆகையால் அவர் இம்முறையைக் கொண்டு தொடர் வண்டி நிறுத்திகளை (brakes) முதன்முதலில் வடிவ மைத்தார். இதன் பின்னர் இதே நெறிமுறையைக் கொண்ட வேறு கருவிகளும் வடிவமைக்கப் பட்டன.

நூலோதி

1. Compressed Air and Gas Institute, Compressed Air and Gas Handbook, 3rd Edition, McGrawHill Book Company, New York, 1966.

2. Scheel, E.F., Gas and Air Compression Machinery, McGraw-Hill Book Company, New York, 1961.

3. Cherkassky, V.M., Pumps, Fans, Compressors, (English Translation), Mir Publishers, Moscow, 1985.

அமுக்க விகிதம்

ஒரு பொறியின் உருளையின் உள்ளே உலக்கை அல்லது அழுந்துருள் (piston) இயங்கும்போது ஏற்படும் இயக்கப்பருமன், இறுதிப் பருமன் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுப்பருமனுக்கும், இறுதிப் பருமனுக்கும் உள்ள விகிதமே அமுக்க விகிதம் (compression ratio) என வரையறுக்கப் படுகிறது. இது உருளையின் வடிவத்தைப் பொறுத்தமையும் இயல்பான அழுக்க விகிதமாகும். நடைமுறையில் உள்ள அமுக்க விகிதம் இயல்பு அமுக்க விகிதத்தை விடக் குறைவாகவே இருக்கும். இதற்குக் காரணம் உட்பெறு வழியிதழின் (inlet valve) தாழ்த்தமான திறப்பால் (delayed opening) பருமன் திறமை (volumeric efficiency) குறைவதேயாகும். தீப்பொறி கொண்டு மூட்டி எரியவிடும் பொறிகளில் அமுக்க விகிதம் இத்தகைய பொறிகளில் இயல்பாக உள்ள மிக நீண்ட நேரத் திறப்பால் ஏற்படும் அடிப்பு (kaock) அல்லது இடிப்பால் வரம்புப்படுத்தப்படுகிறது. இந்த இடிப்பு. எரிபொருளின் மூலக்கூறுக் கட்டமைப்பு, எரிகலவை யின் எரியும் முன்புள்ள வெப்பநிலை, எரிதல் நிகழும் வெளியின் வடிவம் அளவு, பற்றியெரியத் தொடங் கும் நேரம், ஆகிய பொறிக்கூறுபாடுகளைச் சார்ந் துள்ளது. எடுத்துக்காட்டாக, ஹெப்ட்டேனைவிட ஐசோ-ஆக்ட்டேன், பெஞ்சீன்,எரிசாராயம்(ஆல்க்க ஹால்) ஆகியவை அதிக அமுக்க விகிதத்தில் எரிய ஏற் றன. அமுக்கித் தீமுட்டும் பொறிகளிலுள்ள உய்ய அமுக்க விகிதம் (critical compression ratio) எரிபொரு ளுக்குத் தீ மூட்டத் தேவையான அளவினதாகும்.