பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/771

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஸ்க்காரிஸ்‌ 741

ஆண் புழுக்கள்.இவை 15 முதல் 25 சென்டி மீட்டர் நீளமும், 3 முதல் 6 மில்லி மீட்டர் விட்டமும் இருக் கும். ஆண் புழுக்களின் வால்பகுதி கொக்கி போல் வளைந்து இருக்கும். இதன் இனப்பெருக்கத்துளையும், ஆசனத் துளையும் பொதுப் புணர்ச்சிக் கழிவறை (cloaca) எனப்படும் பகுதியில் சேர்ந்து அமைந்து இருக்கின்றன. பெண்புழு ஆண்புழுவைவிட நீளமானது; 25 முதல் 40 சென்டி மீட்டர் நீளமும், 5 மில்லி விட்டமும் கொண்டதாகும். பின் முனை கூர்மையாக வளை வின்றி இருக்கும். ஆசன வாய் இதன் உடலின் முன் பகுதியில் ஒரு வெடிப்புப் போல் இருக்கும். இனப் பெருக்க ஓட்டை இதன் உடலின் முன் பகுதிக்கும், இடைப் பகுதிக்கும் இடையில் இருக்கும். பெண் புழு அன்றாடம் இரண்டு இலட்சம் முட்டைகளை இடும். முட்டைகள் (eggs). மனித குடலில் இடப்பட்ட முட்டைகள் மலத்தோடு வெளியேறும், முட்டைகள் உருண்டையாகவோ, நீள் உருண்டையாகவோ இருக் கும்; பழுப்பு நிறத்தில் காணப்படும். முட்டைகளைச் சுற்றிலும் ஆல்புமின் (albumin) பொருளால் ஆன உறை ஒன்று காணப்படும். இம்முட்டைகள் உப்பு நீரில் மிதக்கும் தன்மை உடையன. பெண் புழுக்கள் கருத்தரிக்காவிட்டால் கூட முட்டையிட்டுக்கொண்டு இருக்கும்.இந்த முட்டைகள் குறுகி நீளமாக இருக்கும். அஸ்க்காரிஸ் 741 இவை பழுப்பு நிறத்திலும், மெல்லிய உறையோடும் காணப்படும். இது உப்பு நீரில் மிதக்காது. வாழ்க்கைச் சுழற்சி (life cycle). இந்த ஒட்டுண் ணிகள் ஒரே உயிர் இனத்தில் வாழ்வன. இவற்றின் இனப்பெருக்கம் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பர வுவதன் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மலத்தோடு கூடிய முட்டை வெளியேறியவுடன் தொற்றும் தன்மை அற்றதாக இருக்கும். வெளி யேறி 10 முதல் 40 நாட்களில் இம்முட்டைகளின் புழு (larva) ஒன்று, சூழ்நிலையையும், வெப்பத்தை யும், ஈரத்தையும் பொறுத்து வளர்ச்சி அடையும். இந்த மாற்றம் மண்ணில் ஏற்படுகிறது. இந்நிலையில் உள்ள முட்டைகள் மனிதருக்குத் தொற்றும் தன்மை உடையவை. இம்முட்டைகள் வெடிக்கும் முன்னே இம்முட்டைப் புழுக்கள் உரு மாற்றம் அடையும். இந்நிலையில் உள்ள முட்டைகளை மனிதர்கள் நீரின் மூலமோ, உணவின் மூலமோ உட்கொள்ளும் பொழுது இவை சிறுகுடலை (duodenum) அடைந்து சீரண நீர்மங்களில் இவற்றின் உறைகள் செரிக்கப் பட்டு முட்டைப் புழு வெளியேறும். இம்முட்டைப் புழுக்கள் உடனடியாக முதிர்ந்த புழுக்களாக மாறா. பொரிக்கப்பட்ட முட்டைப் புழுக்கள் சிறுகுடலின் சுவர்களில் சிறுசிறு குழிகளைத் தோண்டிக் கொண்டு அவற்றில் ஒட்டிக்கொள்ளும். சில நேரங்களில் படம் 3. முன்பக்கம் வளைந்த அஸ்க்காரிஸ் புழுவும், பாலுறு உறுப்பும்