பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/773

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஸ்க்கிளிபியாடேசி 743

யாகச் சிகிச்சை அளித்தல், குழந்தைகளுக்கும், முதிய வர்களுக்கும் சுற்றுப்புற சுகாதாரம் பற்றிப் பயிற்சி அளித்தல் ஆகியனவாம். சிகிச்சை. பிப்பரசின் சிட்ரேட்டு (piperazine citrate) அல்லது மெபண்டசால் (mabendezol) வாய் வழியாக அளிக்கப்படவேண்டும். மேலும் பைரன் தல் பேமலட் (pyrental pamoate) கொடுக்கலாம். நூலோதி <- 6T. ஆ. 1. Chatterjee; K. D., Parasitology, Protozoology & Helmenthology. 12th Edition. Chatterjee Medi- cal Publishers, Calcutta - 26, 1981 2. Beeson, Mcdermott, Text Book of Medicine, 14th Edition, W. B. Saunders Company, Phi - ladelphia, London & Tokyo. 1975 அஸ்க்கிளிபியாடேசி இது இணைந்த அல்லி வட்ட (gamopetalous) பிரிவில், பால் களைக் குடும்பம் (milkweed family) என்ற பொதுப் பெயரையும், தாவரவியலில் அஸ்கிளிபியா டேசி (asclepiadaceae) என்ற பெயரையும் கொண்ட இருவிதையிலைக் குடும்பமாகும். இதன் பேரினங் களின் (genera) எண்ணிக்கை 75-320 வெவ்வேறாக மதிப்பிடப்பட்டிருப்பினும், சிற்றினங்களைப் (species) பொறுத்த மட்டில் ஏறக்குறைய 1800 ஆகக் கூறப் படுகின்றது. இக்குடும்பம் இரு வெப்ப மண்டலங் களிலும் (tropics), குறிப்பாகத் தென் அமெரிக்காவில் நன்கு பரவியிருக்கின்றது. தென்னிந்தியாவில் 29 பேரினங்களும் 91 சிற்றினங்களும் இருக்கின்றன. பொதுப்பண்புகள். இதில் பலபருவக் குறுஞ்செடி களும் (perennial herbs), புதர்ச் செடிகளும் (shrubs) அடங்கியிருக்கின்றன; மரங்கள் மிகக்குறைவு. சில சிற் றினங்கள் சதைப்பற்றுள்ளவையாகவும், இலைகளற் றும், கள்ளிச்செடிகள் (cacti)போன்றும் காணப்படும். இதில் வெண்மை நிற மரப்பால் (latex) உண்டு. இதன் இலைகள் தனித்தவை; எதிரமைவு (opposite) அல்லது வட்ட அமைவு (whorled) கொண்டவை; இலையடிச் சிதல்கள் (stipules) மிகச் சிறியவை. மஞ்சரிகள் குவிவடிவ மலர்க்கொத்து (cyme), சிறு காம்புகளால் இணைக்கப்பட்ட கொத்துமலர் (raceme), குடைமஞ்சரி (umbel) என மூன்று வகை களாகும். மலர்கள் இருபாலானவை, ஆரச்சமச் சீருடையவை (actinomorphic); சூற்பையைத் தவிர அஸ்க்கிளிபியாடேசி 743 மற்ற மலர் வட்டங்கள் ஐந்தங்கங்களுடையவை (pentamerous); புல்லி இதழ்கள் இணைந்தோ, இணை யாமலோ தொடு இதழ் (valvate) அல்லது ஒழுங் சுற்ற திருகு முறையில் (imbricate) அமைந்திருக்கும். அல்லிப் பிளவுகள் (lobes) பெரும்பாலும் திருகு முறையில் (twisted or contorted) அமைந்திருக்கும். அல்லி வட்டக் குழலின் வாயில் வளரிவட்டம் (corona) ஒன்று காணப்படும். மகரந்தத்தாள்கள் 5; இவை பெருவாரியான சிற்றினங்களில் சூலகத் துடன் (gynoecium) இணைந்து கைனோஸ்டீஜியம் (gynostegium) என்று கூறப்படுகின்ற ஒரு கூட்டுறுப் பாகக் காணப்படும்; சைனன் காய்டீ (cynanchoideae) என்ற உட்குடும்பத்தில் (subfamily) ஒவ்வொரு மக ரந்தப் பையிலுள்ள மகரந்தம் ஒன்று திரண்டு பொலினியம் (pollinium) என்று கூறப்படுகின்ற பை போன்ற வடிவத்திலிருக்கும். இதுபோன்று அடுத்துள்ள மகரந்தப்பையின் மகரந்தமும் பொலி னியமாக மாறி இரண்டும் சேர்ந்து இணையாகக் காணப்படும். ஒவ்வொரு பொலினியமும் இயக்கி (translator) என்று கூறப்படுகின்ற இழையினால் ஒரு சுரப்பியுடன் (gland) இணைக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட மகரந்த அமைப்பு அயல்மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துவதற்கு மிகவும் உதவுகின்றது. ஆனால் பெரிபுளோக்காய்டி (periplocoideae) என்ற மற்றோர் உட்குடும்பத்தில் மகரந்தம் ஏனைய குடும் பங்களிலிருப்பதுபோல் தூள்களாகவோ, நான்கு நான்காக இணைந்த திரள்களாகவோ (tetrads) காணப்படும். சூற்பை இரண்டு; இவை இணையா மல், மேல்மட்டத்திலிருக்கும். ஒவ்வொரு சூற்பை அறையும், விளிம்பு ஒட்டிய சூலமைவில் (rmarginal placentation) பல தலைகீழ்ச்சூல்களைப் (anatropous ovules) பெற்றிருக்கும். சூலகத் தண்டுகள் 2; சூலகமுடி இரு சூற்பைகளுக்கும் பொதுவானது. இது விரிந்து, 5 பிளவுகளுடனோ, ஐங்கோண வடிவத்திவோ, தட்டை யாகவோ, குவிந்தோ, கூர்மையாகவோ காணப் படும்.கனி இணையான ஒருபக்க வெடிகனி (follicie) இதில் ஒன்று வளர்ச்சி குன்றிப்போவதும் உண்டு. விதைகளின் உச்சியில் அடர்த்தியாக பட்டுப் போன்ற தூவிகள் குஞ்சம் (coma) போன்றிருப்பதனால் (சில சிற்றினங்களைத் தவிர) இவை வெகுதூரம் காற்றி னால் எடுத்துச்செல்லப்படுகின்றன. கரு பெரியது; முளைசூழ்சதை (endosperm) மெல்லியது, சிறியது. மகரந்தச் சேர்க்கை. பெரிபுளோக்காய்டி, சைனன் காய்டி என்ற இரு உட்குடும்பங்களிலும் அவற்றின் மகரந்தப் பைகளில் ஏற்பட்டிருந்த மாற்றத்திற்குத் தக்கவாறு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ் கின்றது. பெரிபுளோக்காய்டியில் இயக்கி, கரண்டி போன்ற வடிவத்தில் அல்லது புனல் போன்ற வடி வத்தில் அமைந்திருக்கின்றது. இத்தகைய அமைப்பில், வெளிப்படுகின்ற மகரந்தம் சேகரிக்கப்படுகின்றது.