அஸ்ட்டட்டின் 775
கூடிய ஒவ்வோர் இயக்கியின் மறு நுனியிலும் பிசுபிசுப் பான தட்டு ஒன்றிருக்கின்றது. மலர்களின் ஆணகம் முதிர்ச்சி அடைந்த நிலையில் இத்தட்டு சற்று வெளிப்பட்டிருக்கும். தேனைத் தேடிவரும் பூச்சி களின் தலையில் மகரந்தத்தைப் பெற்றுள்ள இயக்கி ஒட்டிக்கொள்கிறது. இவை மற்றொரு மலருக்குச் செல்லும்பொழுது அம்மகரந்தம் அதன் சூலகத் தண்டுடன் சேர்கின்றது. ஆனால் சைனன்காய்டில் இயக்கிகள் பெரிபுளோக்காய்டியிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன. இதன் இயக்கி ஒவ்வொன் றும் தலைகீழ் 'Y' வடிவத்தில் காணப்படுகின்றது. இதிலுள்ள கார்ப்பஸ்குலம் ( corpusculum) என்ற அடிப்பாகம் எளிதில் ஒட்டிக்கொள்ளக் தன்மை உடையது. இதிலிருந்து பிரிகின்ற ஈரிலை நுனி (retinaculum) என்ற இரு இழைகளின் நுனி ஒவ்வொன்றிலும் பொலினியம் அமைந்திருக்கும். தேன் நாடிச் செல்லும் பூச்சிகளின் கால்கள் மகரந்தப் பைகளுக்கிடையே உள்ள இடைவெளியில் மாட்டிக் கொள்கின்ற றன. இவை கால்களை விடுவித்துக் கொள்ள முயலும்பொழுது கால்களுடன் அவை ஒட்டிக்கொள்கின்றன. இந்த நிலையில் இவை வேறு மவருக்குச் செல்லும்போது சூலகத்தண்டுடன் சேர்வதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு குறிப்பிடத்தக்க முறையில் ஏற்படுகின்ற மகரந்தச் சேர்க்கை இக்குடும்பத்தில் வியக்கத்தக்க நிகழ்ச்சியாக காணப்படுகிறது. அயல் ச பொருளாதாரச் சிறப்பு. தோட்டக்கலை செடிக ளாக அஸ்கிளிபியாஸ் டுபரோசா (asclepias ruberosa), அ. குரசாவிக்கா (4. curassavica) ஹோயா கார்னோசா (hova carnosa), ஸ்டாப்பீலியா (stapelia), சீரோப்பீஜியா (ceropegia spp.) ஆகியவற்றின் சிற்றினங்கள் வளர்க் கப்படுகின்றன. கிரிப்டோஸ்டிஜீயா கிராண்டிஃபுளோரா cryptostegia grandiflora) ரப்பருக்காகவும், அழகுச் செடியாகவும் வளர்க்கப்படுகின்றது. எருக்கு (calo tropis giganea), களைச் செடியாக எங்குப்பார்த்தா லும் பரவியிருக்கின்றது. இதன் விதையின் குஞ்ச கேசங்கள்.தலையணைகள், மெத்தைகள், செய்வதற் குப் பஞ்சுக்குப் பதிலாகப் பயன்படுகின்றன. இதன் தண்டு, வேர்ப்பட்டை, மலர்கள், இலைகள் ஆகியவை மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் பட்டை யிலிருந்து வலுவுள்ள ஒரு வகை நார் தயாரிக்கப் படுகின்றது. இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாராயக் கரைசல் (tincture) காய்ச்சலைக் குறைப் பதற்கும், மலச்சிக்கல், சளி, இருமல், இளைப்பு நோய் (asthma), செரிப்பின்மை (dyspepsia) முதலியவற்றைக் குணப்படுத்துவதற்கும், வேர்ப் பட்டையின் பொடி சீதபேதியைக் (dysentery) கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுகின்றன. டைலோஃ போரா இன்டிக்கா வின் (tylophora Indica) இலைகள் இளைப்பு நோயைக் குணப்படுத்தப் பயன்படு அ.க-2-94 அஸ்ட்டட்டின் 745 ஒரு கின் றன. நன்னாரியின் (hemidesmus indicus) வேரைப் பயன்படுத்தி நறுமணமுள்ள பானம் தயாரிக்கப்படுகின்றது. வேத காலத்தில் யாகங்கள் புரியும்போது சோம ரசம் சார்க்கோஸ்டம்மா பிரீவிஸ் டிக்மா வின் (Sarcostemma brevistigma) கொடியின் பாலிலிருந்து (latex) தயாரிக்கப்பட்ட தாக கருத்து நிலவி வருகின்றது. இதன் வேர் வெறி நாய்க் கடிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. அஸ் கிளிப்பியாஸ் குரசாவிக்கா வின் இலைச்சாறு குடற்புழு கொல்லியாகவும் (antihelminthic), வியர்வையை அதிகரிப்பதற்கும் (sudorific) உதவும். இதன் வேர் களின் சாறு வாந்தியைத் தூண்டவும், வயிற்றுப் போக்கை தீக்கவும் மருந்தாகக் கொடுக்கப்படு கின்றது. காரலூமா ஃபிம்பிரியாட்டா (caralluma fimbriata) கா. இண்டிக்கா (C. indica) ஆகியவற்றின் தண்டு சமைத்து உண்ணப்படுகின்றது. சீரோப்பீஜியா புசில்லா வின் (ceropegia pusilla) நிலஅடிக்கிழங்குகள் வயிற்றுப்போக்கையும், சீதபேதியையும் கட்டுப்படுத் துவதற்கு மருந்தாகக் கொடுக்கப்படுகின்றன. அடிகம் அல்லது சிறு குறுஞ்சான் (gymnema sylvestre பசியைத் தூண்டுவதற்கும், பேதி மருந்தாகவும் சிறுநீர்க்கழிவினைத் துாண்டுவதற்கும்(diuretic)பயன் படுகின்றது. நீரிழிவு வியாதிக்கு இதன் இலைகள் பயன்படுகின்றன. நூலோதி 1. Gamble J.S., Fl. Pres. Madras. Vol. I, Adlard & Son, Ltd., Lond., 1921. 2 Lawrence, G.H.M., Taxonomy of Vascular Plants. The Macmillan Co., New York, 1951. 3. Rendle, A.B., The Classification of Flowering Plants Vol. II. Dicotyledons, Cambridge Univ. Press, Lond., 1975 (Repr.) 4. The Wealth of India, Vol. I II 1950; VI CSIR, Publ., New Delhi, 1956. 5. Willis, J.C., A Dictionary of Flowering Plants & Ferns. (7th Ed. Revd. Airy Shaw H.K) Cambridge Univ. Press, Lond., 1966. அஸ்ட்டட்டின் அணு எண் 85 உடைய அஸ்ட்டட்டின் (astatine) திண்மநிலையிலுள்ள கதிர்வீசும் செயற்கை அலோக