பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/777

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஸ்ட்டிராய்டியா 747

தோற்றுவிக்கும் பவளமன்று. இக்காலனியின் பாலிப் புகள் தனித்து நன்கு புலப்படும்படி உள்ளன. இக் காலனியின் ஓடுகள் கற்களின் மீது ஒட்டியிருக்கும். இது தேங்கியுள்ள ஆழமற்ற பகுதிகளில் காணப்படு கிறது. ஆரஞ்சு நிறமுடைய இதன் பாலிப்புகள் பகலில் சூரிய ஒளியால் அகன்ற வண்ணம் அமை கின்றன. அஸ்ட்ராஞ்சியா வாய்த்தட்டைச் சுற்றிலும் உள்ளீடற்ற மெல்லிய உணர்வு நீட்சிகள் உள்ளன. இதன் நடுவில் வாய் உள்ளது. வாயைச் சுற்றிக் கொட்டும் செல்கள் உள் ளன. 12 பெரிய உணர்வு நீட்சிகள் இரு வட்டங்களில் அமைகின்றன. நன்கு முதிர்ந்த பாலிப்புகள்,நான்கு வட்டங்களில் அமைந்த உணர்வு நீட்சிகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொறு பாலிப்பும் ஒரு சுண்ணச் சட்டகம் அல்லது கோரலைட்டைச் (corallite) சுரக் கிறது. காலனியின் சட்டகமாக கோரல்லத்தைத் (coral. lum) தூய்மையான பதப்படுத்தப்பட்ட அஸ்ட்டி ராஞ்சியாவில் காணலாம். உ அஸ்ட்ராஞ்சியா எண்ணற்ற முருகைப் பாறை களை உருவாக்கும் தன்மை கொண்டது. இது கடல் பாசி, ஓட்டுடலிகள், புழுக்கள், மெல்லுடலிகள் மேலும் சிறிய மீன்களையும்,பூச்சிகளையும் உண வாகக் கொள்கிறது. அமெரிக்கக் கடற்பகுதிகளில் அஸ்ட்ராஞ்சிடே குடும்பத்தைச் சார்ந்த பவளங்கள் காணப்படு கின்றன. அஸ்ட்ராஞ்சியா டேனியா (astrangia daniae) அட்லாண்டிக் கடலில் காணப்படும் ஒரு வகை இனமாகும். அஸ்ட்டிராய்டியா அஸ்ட்டிராய்டியா (asteroidea) என்னும் விலங்கினக் கூட்டம் முதுகெலும்பற்றவை (invertebrata) என்னும் அஸ்ட்டிராய்டியா 747 துணை விலங்கு வகையைச் (subkingdom) சேர்ந்த முள்தோலிகள் (echino dermata) என்னும் தொகுதியி லடங்கும் ஒரு முக்கிய வகுப்பு ஆகும். கிரேக்க மொழி யில் "விண்மீன் அல்லது நட்சத்திரம் போன்ற உடலுடையவை" என்னும் பொருள்களைக் குறிக்க இவற்றிற்கு அஸ்டிராய்டியா என்னும் பெயர் இடப் பட்டது. க்ரே (1842) பொரியர் (1875) ஸ்லேடன் (1889) ஃபிஷர் (1911-1940), ஹைமன் (1955) ஆகி யோர் இவ்விலங்குகளைப் பற்றி விரிவாக விளக்கி யுள்ளனர். இவை அனைத்துமே கடலில் வாழ்வன. இக்கூட்டத்தில் தற்காலத்தில் வாழும் 2,000 இனங்க ளும், புதை உயிர்களாகக் (fossils) கிடைத்துள்ள அழி வுற்ற (extinct) 300 இனங்களும் அடங்கியுள்ளன. அஸ்ட்டிராய்டுகளின் பண்புகள். இவை உலகம் முழுவதும் பரவியுள்ள, மெதுவாக இயங்கக் கூடிய விலங்குண்ணிகளான (predacious ) முள்தோலிகள் ஆகும். இவை கேம்பிரியன் காலம் முதல் (அதாவது ஏறத்தாழ 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து) இன்று வரை வெற்றிகரமாக வாழ்வன. உடல் மிக வும் தட்டையாக விண்மீன் வடிவமாக ஐந்து ஆரச் சமச்சீரமைப்பை கொண்டு (pentardial symmetry) உள்ளது. அவ்வுடல் மையத்தட்டு (central disc) எனப் படும் மையத் தட்டினின்றும் 5 ஆரங்களின் வாக்கி லும், சிலவற்றில் இடை ஆரங்களின் வாக்கிலும் கூட, 5 முதல் இருபதுக்கும் மேற்பட்ட கைகள் (arms) குட்டையாகவோ, நீளமாகவோ, ஏறத்தாழ முக்கோண வடிவமாகவோ உள்ளன. உடலில் உள்ள உடற்குழியின் (coelom) பகுதிகள் கைகளின் உள்ளும் தொடர்கின்றன. மையத்தட்டின் வயிற்றுப் பக்கத்தில் வாய் உள்ளதால் அப்பக்கம் வாய்ப்பக்கம் (oral side) என்றும், அதற்கு எதிரில் உள்ள முதுகுப் பக்கம் வாய் எதிர்ப்பக்கம் (aboral side) என்றும் அழைக்கப் படும். வாய்ப்பக்கத்தில் உள்ள வாய்த்துளை பெரிஸ் டோம் என்னும் சவ்வினால் சூழப்பட்டுள்ளது. இவ்சவ்வினைச் சூழ்ந்து பாதுகாக்கும் முட்கள் (spines) உள்ளன. வாய் எதிர்ப் பக்கத்தின் நடுவில் மலப்புழை (anus) உள்ளது. அதன் அருகில் ஏதேனும் ஒரு இடை ஆரத்தில் (inter radius) சல்லடைத்தட்டு (sieveplate) அல்லது மேட்ரிபோரைட் தட்டு என் னும் வடித்தட்டுப் போன்ற பகுதி உள்ளது. உடலினுள்ளே உள்ளநீர்ச் சுழற்சி மண்டலம் (water vascular system) என்னும் மண்டலத்தின் பகுதியா கும். வாயில் இருந்து ஒவ்வொரு கையினுள்ளும் ஒரு திறந்த குறுகிய வரிப்பள்ளம் (groove) கையில் முன் வரை செல்கிறது. இது ஆம்புலேக்ரல் வரிப்பள்ளம் (ambulecral groove) எனப்படும். ஆம்புலேக் ரல் வரிப் பள்ளத்திலிருந்து வெளியில் நீண்டு 2 அல் லது 4 வரிசைகளாக அமைந்திருக்கும் தசையாலான பயன்படும் மண்டலம் ஹீமல் (haemal system) அல் குழாய்க்கால்கள் (tube feet) இயக்கத்துக்கு உதவும். இது