பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/778

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 அஸ்ட்டிராய்டியா

748 அஸ்ட்டிராய்டியா உடலைச் சூழ்ந்து கொண்டு சுண்ணத்தகடுகள் (ossicles) எனப்படும் சுண்ணாம்பிலான புறச் சட்டகத் தகடுகள் (exoskeletal plates) உள்ளன. அவற்றின் மேல் முட்கள் உள்ளன. உடலின் மேல், முட்களுக்கிடையில் காணப்படும் இடுக்கி உறுப்புகள் (pedicellaria) என்பவை, உடலின் மேல் விழும் வேற் றுப் பொருள்களை (foreign particles) நீக்க உதவு கின்றன.மூச்சு விடுதலும் கழிவு நீக்கமும் தோலில் உள்ள புடைப்புகளான (dermal papulae) தோல் செவுள்களால் (dermal branchiae) நடைபெறுகின் றன. உடலின் உள்ளே கடல் நீரைச் சுழற்சியடையச் செய்ய நீர்ச் சுழற்சி மண்டலம் உள்ளது. இது இயக் கத்துக்குப் பயன்படுகிறது. உடலின் பல பகுதிகளுக் கும் தேவையான பொருள்களைக் கடத்துவதற்குப் பயன்படும் மண்டலம் ஹீமல் (haemal system) அல்லது பெரிஹீமல் (perihaemal system) மண்ட லம் எனப்படும். உடற்குழி பல பகுதிகளையுடையது. நீர்ச் சுழற்சி மண்டலம், ஹீமல் மண்டலம், இன உறுப்புகள் (gonads) ஆகிய அனைத்திலுமே உடற் குழியின் பகுதி உள்ளது. நரம்பு மண்டலம் சிறிது சிக்கலான அமைப்புடையது. ஒவ்வொரு கையின் முனையிலும், ஒரு சிகப்பு நிறக் கண் புள்ளி (eye spot) உள்ளது. வேறு உணர்வுறுப்புகள் இல்லை. பாலினங்கள் (sexes) வேறுபட்டவை. புறக் கருவுறுதல் (external fertilization) கடல் நீரில் நடை பெறுகிறது. மறைமுக வளர்ச்சி (indirect develop- ment) நடக்கிறது. அதாவது இதன் வளர்ச்சியில் வேற்றின உயிர்களான (larvae) பைபின்னேரியா, பிராக்ேகியானேரியா ஆகியவை தோன்றுகின்றன. இவற்றின் இழப்பு மீட்டும்திறன் (regeneration ) சிறப்பானது. இவற்றின் உடலைப் பல சிறு துண்டு களாக வெட்டினாலும், வெட்டப்பட்ட ஒவ்வொரு சிறு துண்டும் ஒரு முழு விலங்காக வளர்ந்து விடும். இது இவற்றிற்கே உரித்தான மிகச் சிறந்த பண்பா கும். வகைப்பாடு. அஸ்ட்டிராய்டுகளில் உள்ள 6 வரிசை களில் மூன்று அழிவுற்ற (extinct) கூட்டங்களும், மற்ற மூன்று தற்போது வாழ்வனவும் ஆகும். வரிசை 1. பாலி ஆஸ்ட்டரியா. இவை முற்றிலும் அழிவுற்றவை. இவை ஆர்டோவிசியன் காலம் முதல் (அதாவது 450 மில்லியன் ஆண்டுகளின் முன்பிருந்து) டிவோனியன் காலம் வரை (280 மில்லியன் ஆண்டு களின் முன்பு வரை) வாழ்ந்தவை. இவற்றின் ஆம்புலேக்ரல் வரிப்பள்ளம் அகன்று திறந்து இருந் தது. முதுகுப் பக்கத்தில் பாக்சில்லே (paxillae) என்னும் நேரான விறைப்பான முட்களும், 2 அல் லது 3 வளையங்களான கிடைநிலை முட்களும் (horizontal spines) இருந்தன. எ.கா., ப்ளாட னாஸ்டர். வரிசை 2. ஹெமிஸோனிடா. (hemizonida) இவை யும் முற்றிலும் அழிவுற்ற கூட்டமாகும். இவை ஆர்டோவிசியன் காலம் முதல் நடுக்கரிமக் காலம் வரை (middle carboniferous) ஏறத்தாழ 240 மில்லி யன் ஆண்டுகள் முன்பு வரை வாழ்ந்தவை. இவற் றின் புதை படிவங்கள் (fossil) ஆழமான ஆம்புலேக் ரல் பள்ளத்தையும் அதனைச் சூழ்ந்திருந்த ஆம்பு லேக்ரல் சுண்ணத்தகடுகள் (ambulacral ossicles ) அப் பள்ளத்தில் புதைந்திருந்ததையும் காட்டுகின்றன. வாய் எதிர்ப்பக்கத்தில் பேக்சில்லாக்களும், இருந்தன. எ.கா., பாலாஸ்டெரினா, ஹீலியான் தாஸ்டர், டீனி யாக்டிஸ். வரிசை 3. ஸோமாஸ்ட்டிராய்டியா (somasteroidea). இவையும் அழிவுற்றவை. இவைதான் முதலில் தோன்றிய நட்சத்திர மீன்களாக இருக்கலாம் எனக் கருதினர். இவற்றின் புதை படிவங்கள் கடலின் எல்லா ஆழங்களிலும் காணப்படுவதால், இவை கட லின் பலவேறு சூழ்நிலைகளிலும் வாழ்ந்திருக்கலாம் என நம்புகிறோம். இவை ஆர்டோவிசியன் தொடக் கத்திலேயே சிறப்பாக வாழ்ந்திருக்கலாம் என்று அறி யப்பட்டுள்ளது. எ.கா., வில்விப்ரனாஸ்டர், இதன் சட்டகத்தில் சில முதிரா நிலைப் பண்புகள் (primi- tive features) உள்ளன. ஓரப் வரிசை 4. பொரோஸோனியா. (phenerozonia) இவை ஆர்டோவிசியன் காலத்தில் தோன்றி இன்று வரை வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றன.இவற்றில் 72 குடும்பங்கள் (families) உள்ளன. இவ்விலங்கு களின் மையத்தட்டு பெரியது. இவற்றில் பொது வாக 5 குட்டையான அகன்ற அடிப்பகுதிகளை யுடைய கைகள் உள்ளன. கைகளில் 2 வரிசைகளாக அமைந்த தெளிவான பெரிய ஒரத்தகடுகள் (mar- ginal plates) உள்ளன. அவை கீழ் ஓரத்தகடுகள் (infra marginals) மேல் ஓரத்தகடுகள் (supra mar- ginals) என்பன. இத்தகடுகள் ஒன்றுக்கொன்று நெருங்கிச் சேர்ந்துள்ளதால் தெளிவான பகுதி (definite margin) உண்டாகியுள்ளது. வாய் எதிர்ப்பக்கத்தில் பேக்சில்லாக்களோ அவற்றைப் போன்றமைந்த தகடுகளோ உள்ளன. வாயில் அமைந்துள்ள முட்களைப் போன்ற ஆம்புலேக்ரல் தகடுகள் தாடைகளாகப் பயன்படுகின்றன. தோல் செவுள்கள் வாய் எதிர்ப் பக்கத்தில் மட்டும் உள்ளன. இடுக்கி உறுப்புகள் பெரும்பாலும் இருப்பதில்லை. அப்படியே அவை இருப்பினும் அவை அசையாதவை. குழாய்க் கால்கள் இரட்டை வரிசைகளாக உள்ளன. அவற்றில் பிதுக்கங்கள் இருப்பதும் உண்டு. அவை இல்லாமலும் இருப்பதுண்டு இவ்வரிசையிலடங்கும் 7 குடும்பங்கள் பின் தரப்பட்டுள்ளன. குடும்பம். 1. கோனிபெக்டினிடா. இவற்றின்