அஸ்ட்டிராய்டியா 751
களாக அமைந்துள்ளன. குடலும் குடல் பையும் உண்டு. மலப்புழை இல்லை. சிறந்த இழப்பு மீட்டும் திறனை உடையது. கை போர்சில்லனாஸ்டர் (porcellanaster). இதுகடலின் மிக ஆழமான பகுதியில் வாழ்கிறது. இதன் கைகள் குறுகியும் கூர்மையாகவும் உள்ளன. ஆனால் களின் அடிப்பகுதிகள் அகன்று உள்ளன. அவற்றின் ஓரங்களில் மெல்லிய செங்குத்தான ஓரத்தகடுகள் உள்ளன. குடல், குடல்பை, மலப்புழை ஆகியவை இல்லை. குழாய்க் கால்களில் ஒட்டுறிஞ்சிகள் இல்லை. ஒவ்வோர் இடை ஆரத்திலும் (inter radius) ஒற்றை யான பெரிய க்ரிப்ரிஃபார்ம் உறுப்பு உள்ளது. வாயின் எதிர்ப் பக்கத்தில் எபிப்ரோக்டல் கூம்பு நீட்சி காணப்படுகிறது. லூய்டியா (Iuidea). இது வெப்ப மண்டலக் கடல் களில் (Subtropical seas ) வசிக்கிறது. இதன் மையத் தட்டு சிறியது. கைகள் நீளமாகவும் மேலும், நீள் திறனுடையவையாகவும் உள்ளன. இதற்கு 5 முதல் II வரை உருளை வடிவக் கைகள் உள்ளன. கைகளின் ஓரங்களின் முட்கள் உள்ளன. இடுக்கி உறுப்புகள் மிகுதியாக உள்ளன; தோள் செவுள்கள் அல்லது பாபுலே என்னும் புடைப்புகள் கிளைகளாகப் பிரிந் துள்ளன. குடல் பைகள், மலப்புழை, இல்லை. இன உறுப்புகள் எண்ணற்ற கொத்துக்களாக (tufts) கைகளின் மேற்பகுதியில் உள்ளன. வாய் எதிர்ப் பக்கத்தில் பல நிறத் திட்டுக்கள் (coloured patches) உள்ளன. ஓரியாஸ்டர் (oreaster). அல்லது பென்டாசெராஸ (pentaceros ). இதற்குக் கடல் ஐங்கோணம் (Sea pen- tagon) எனப் பெயர். இது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா நாட்டுக் கடல்களில் ஆழம் குறைந்த பகுதிகளில் வாழ்கிறது. மையத்தட்டும், கைகளும் நன்கு இணைந்துள்ளன. தோல் கடினமானதாக, பல பருத்த சுண்ணத்தகடுகளால் சூழப்பட்டுள்ளது: மையத்தட்டு அகன்றது. இதன் 5 கைகளும் குட்டை, யாகவும், அகன்ற அடிப்பகுதியைக் கொண்டும் உள்ளன. வாய் எதிர்ப் பக்கச் சட்டகம் வலை போன்றமைந்துள்ளது (reticulates). அந்த வலைக் உள்ளன. கண்களில் (meshes) தோல் செவுள்கள் இதன் இடுக்கி உறுப்புகள் சிறியவை. உடலின் ஓரங் களில் மேல் ஓரத் தகடுகள் (supra marginal plates) என்னும் சிறு சுண்ணத்தகடுகள் உள்ளன; குழாய்க் கால்கள் இரட்டை வரிசைகளாக உள்ளன. சூரிய (solaster). ஸோலாஸ்டர் இதனைச் நட்சத்திரம் (Sun star) என்கிறோம். இது பெரும் பர்லும் வடக்குக் கடல்களில் வாழ்கிறது; கருஞ்சிவப்பு நிறம் (purple) உடையது; 9 முதல் 14 கைகளைக் கொண்டது. இதன் ஓரத்தகடுகள் இரட்டை வரிசைக அஸ்ட்டிராய்டியா 751 ளாக உள்ளன. வாய் எதிர்ப்பக்க ச்சட்டகம் வலை போல் அமைந்துள்ளது. அதில் நெருங்கிச் சேர்ந்துள்ள சிறு கற்றைகளாலான முட்கள் உள்ளன. இடுக்கி உறுப்புகள் இல்லை. இது மற்ற வகை நட்சத்திர மீன்களை விரும்பி உண்ணுகிறது. க்ராஸ்ஸாஸ்டர் (crossaster). இதுவும் சூரிய நட் சத்திரம் எனப்படுகிறது. இதற்கு 8 முதல் 14 கைகள் உள்ளன. கைகள் குட்டையாகவும் பருமனாகவும் உள்ளன. மையத்தட்டு அகலமானது. அது 6 அங்கு லம் விட்டமுடையதாக அடர்த்தியான கருஞ்சிவப்பு நிறங்கொண்டுள்ளது. இதில் சட்டகம் வலை போன் றுள்ளது. ஆனால் இதன் வலைக் கண்கள் அகன் றவை. உடலின் மேல் பெரிய முட்கள் கொத்துக்க ளாக அமைந்துள்ளன. ஹீலியாஸ்டர் (heliaster). இது பனாமா கடலின் ஆழம் குறைவான பகுதியில் வாழ்கிறது. இதன் மையத்தட்டு அகன்றுள்ளது. அதிலிருந்து ஏறத்தாழ 25 குட்டையான கூரிய கைகள் தோன்றியுள்ளன. சட்டகம் வலை போன்றமைந்த இடுக்கி உறுப்பு களால் ஆனது. ஒற்றை மேட்ரிபோரைட் தட்டு உள் உள்ளன. ளது. குழாய்க் கால்கள் 4 வரிசைகளாக செவுள் இடைச் சுவர்கள் (interbranchial septa) இரட்டையானவை. லிங்க்கியா (linckia). இது வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கிறது. இதன் மைய்த் தட்டு சிறிய தாகவும், கைகள் நீளமாகவும், குறுகியும், உருளை வடிவமாகவும் (cylindrical) உள்ளன. ஓரத் தகடுகள் சிறியவையாகவும், தெளிவற்றும் காணப்படுகின்றன. வாய் எதிர்ப் பக்கச் சட்டகம் எண்ணற்ற சிறிய நெருக்கமான, சமதளத்தில் கற்கள் பதித்தது போன் றமைந்த (tasselate) தகடுகளைக் கொண்டுள்ளது. தோல் செவுள்கள் வாய் எதிர்ப்பக்கத்தில் மட்டுமே உள்ளன. அவை ஒழுங்கற்ற அமைப்பில் உள்ளன இடுக்கி உறுப்புகளும் அரிதாகவே காணப்படுகின் றன. இது சிறந்த இழப்பு மீட்டும்திறனைக் கொண் டுள்ளது. ஒடினியா (odinia). இது பார்ப்பதற்கு ஏறத்தாழ போன்றுள்ளது. ரபியூராய்டுகளைப் ஆழ்கடலில் வாழும். இதன் மையத் தட்டு சிறிய வட்டமான அமைப்புடையது. இதற்கு மிக மெலிந்த, சிறு முன் ரோமங்களைக் கொண்ட (bristly) உடையும் தன் மையுள்ள (fragile) 20 கைகள் உள்ளன. ஓரத் தகடு கள், செவுள் இடைச் சுவர்கள் ஆகியவை இல்லை. வாய் எதிர்ப்பக்கச் சட்டகம் வலிமையற்றது. அது கைகளின் அடிப்பகுதியில் மட்டும் உள்ளது. சிறிய கூர்மையற்ற முட்கள் தோலில் உள்ள சிறுபைகளில் உள்ளன. குழாய்க் கால்கள் இரட்டை வரிசைகளாக உள்ளன. தோல் செவுள்கள் வாய் எதிர்ப் பக்கத்தில்