பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/782

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 அஸ்ட்டிராய்டியா

752 அஸ்ட்டிராய்டியா தெளிவான புடைப்புகளாக உள்ளன. இன உறுப்பு கள் கைகளின் பக்கங்களில் திறந்துள்ளன. ப்ரிஸிங்கா (brisinga) என்பது ஒடினியாவைப் போன்றே உள்ள மற்றொரு நட்சத்திர மீன் ஆகும். இதுவும் ஆழ் கட வில் வாழ்கிறது. அஸ்ட்டிராய்டுகளின் பொருளாதார முக்கியத்துவம். அஸ்ட்டிராய்டுகளைப் பொதுவாக அழகிய கலைப் பொருள்களாகப் பயன்படுத்துவதுண்டு. நட்சத்திர மீன்களை நன்கு உலர்த்தி, தூய்மைப்படுத்தி. அவற் றின் தோல், முட்கள் ஆகியவற்றின் மேல் வார்னிஷ், அல்லது சாயங்களைப் பூசி அவற்றை அலங்காரப் பொருள்களாகக் கண்ணாடி அலமாரிகளில் வைக் கின்றனர். மேலும் அவற்றின் முட்டைகள் கருவியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன. அவற்றின் இளம் உயிரிகள் (larvae) முதுகு நாண்களின் (chordates) பரிணாம வரலாற்றை அறிவதற்கு மூலப்பொருள் களாக அமைகின்றன. மனிதர்கள் சிப்பிகளை வளர்க்கும் உப்பு நீர்க் குட்டைகளில் செல்லும் நட்சத்திர மீன்கள் சிப்பிகளைப் பெருமளவுக்குச் சாப்பிட்டு அழித்து மனிதருக்குப் பெருத்த பொருட் சேதம் உண்டாக்குகின்றன. அவற்றின் இழப்பு மீட் டவ் (regeneration) மிகச் சிறப்புடையதாக இருப்ப தால் அந்த ஆய்வுகளுக்கு அவை மிகச் சிறந்த ஆய் வுப் பொருள்களாகும். அஸ்ட்டிராய்டுகளின் சூழ்நிலை இயல். பெரும் பாலான அஸ்ட்டிராய்டுகள் ஆழம்குறைந்த கடற்பகுதி களில் வாழ்கின்றன. ஒருசில மட்டும் பாறைகளாலான அடித்தளத்தில் வாழ்கின்றன. சில நட்சத்திர மீன் கள் ஆழ்கடலில் வாழ்வன. அஸ்ட்ரோபெக்டன், லூய்டியா, ஓரியாஸ்டர், லிங்க்கியா, எக்கினாஸ்ட்டர், ஆஸ்ட்டிரைனா, அகாந்தாஸ்டர் ஆகியவை ஆழம் குறைவான பகுதிகளில் வசிப்பவை. பால்மைப்ஸ் என்பது பாறைகளாலான அடித்தளத்தில் வசிக்கிறது. ப்ரிஸின்கா அடித்தளத்தில் வாழ்கிறது. தமது குழாய்க் கால்களால் அவை பல்வேறு ஆழங்களிலும் நீந்த இயலும். . அஸ்ட்டிராய்டுகளின் உணவு முறைகள். அஸ்ட்டி ராய்டுகள் மெல்லுடலிகள், கடின ஓட்டுக் கணுக் காலிகள் (crustaceans), குழல் வாழ் புழுக்கள் (tube living worms), மற்றும் சில முதுகெலும்பற்ற உயிர் கள் சிறுமீன்கள் ஆகியவற்றை உண்ணுகின்றன. ஆழ்கடலடித்தளத்தில் வாழ்வன சேற்றை விழுங்கு கின்றன. அவை தமது கைகள், இடுக்கி உறுப்புகள் (pedicellariae), குழாய்க்கால்கள் (tube feet) ஆகிய வற்றால் இரையைப் (prey) பிடிக்கின்றன. நட்சத்திர மீன் தனது கையைச் சிப்பிகளின் இரு ஓடுகளுக்கிடை யில் விசையுடன் அழுத்தி ஓட்டைத் திறந்தவுடன், தனது சீரணமண்டலத்தை வெளியில் நீட்டி உணவை உண்டு புறச் சீரணம் (external digestion) செய்த ண பின், சீரண உறுப்பை உள்ளுக்கு இழுத்துக் கொள் ளும். நட்சத்திர மீன்கள் நன்கு உணவு உட்கொள் பவையாக இருப்பினும், அவற்றால் நீண்ட காலத் துக்கு உணவின்றியே வாழ இயலும். ஒரு மாதம் மட்டுமே வயதுடைய ஒரு நட்சத்திர மீன் 6 நாள் களுக்குள் 50 சிறு இரட்டை ஓடிகளை (bivalve) உண்டு விடும். அஸ்ட்டிராய்டுகளின் இனப்பெருக்கம். அஸ்ட்டி ராய்டுகளில் பாலினங்கள் வேறுபட்டவை. அவற் றின் இன உறுப்புகள், ஹீமல் மண்டலம் என்றும் மண்டலத்தைச் சேர்ந்த 5 இணை இன உறுப்புத் தண் களின் முனைகளில் அமைந்துள்ள 5 இணை இன உறுப்புகள் ஆகும். இன உறுப்புகள் எளிய அமைப் புடையவை, அவற்றுக்குள்ளே உடற்குழி தொடர் கிறது. இவ்விலங்குகளில் கலவி உறுப்புகளோ, துணைச் சுரப்பிகளோ, விந்து பெறும் பைகளோ, விந்து சேமிக்கும் பைகளோ இல்லை. கோடை காலத்தின் ஆரம்பத்தில் இனச் செல்கள் உறுப்புக்களி லிருந்து உடலைச் சுற்றித் தோன்றும் வெடிப்பினால் வெளியேற்றப்பட்டுக் கடல் நீரில் புறக்கருவுறுதல் நடைபெறுகிறது. முழுமையுற்ற பிளவிப் பெருக்க மும் (holoblastic cleavage), கோள வடிவமான குறு இழைகளைக் கொண்ட கருக்கோளமும் (blastula) உட்பிதுக்கம் (invagination) மூலம் தோன்றும் இரு படை கருக்கோணமும் (gastrula), பின்னர் வளர்ச் சியில் தோன்றும் இருபக்க இருபக்க சமச்சீரமைப்புடைய (bilaterally symmetrical) 12 கைகளையுடைய ஒளி ஊடுருவும் உடலுடைய நீர் மேற்புறம் வாழும் (pelagic) இளம் உயிரியான பைபின்னேரியாவும் (bipinnaria) குறிப்பிடத்தக்கவை. இந்த வேற்றின உயிரி சில காலம் நீந்திய பின் மேலும் 3 இணைக் கைகளான ப்ராக்கியோலார் கைகளை (brachiolar arms) வளர்த்துக் கொண்டு அந்தக் கைகளால் ஏதேனும் ஓர் அடித்தளத்தில் ஒட்டிக் கொண்ட பிறகு, அதன் உடலின் ஒரு பகுதியிலிருந்து முதிய நட்சத்திர மீன் வளருகிறது. ப்ராக்கியோலார் கைகளைப் பெற்றுள்ள நிலையில் அது ப்ராக்கியோ லேரியா (brachiolaria) எனப்படும். சில அஸ்ட்டிராய்டுகளின் பாலிலா இனப்பெருக் கம் (asexual reproduction) நடைபெறுகிறது. மையத் தட்டு எனப்படும் உடற்பகுதி குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட காயம் உடனே மூடிக் கொள்வதால் அச் சேய் உயிர்களில் புதிய கைகள் வளர்ந்து முழு நட்சத்திர மீனாகி விடுகின்றன. அஸ்ட்டிராய்டுகளின் மீட்பாக்கம். அஸ்ட்டிராய்டு களில் மீட்பாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது. உடலின் எந்தப் பகுதி உடை ந்தாலும்,அல்லது உடலே பல துண்டுகளாகச் சிதைந்தாலும், ஒவ்வொரு துண்டும் வளர்ந்து முழு உயிராகிவிடும்.