அஸ்ட்டிரோசோவா 757
அஸ்ட்டிரோசோவா 757 வாய்த் துளியைச் சுற்றியுள்ள மெல்லிய படலத் திற்குப் பெரிஸ்டோம் என்று பெயர். நட்சத்திர மீனின் உடம்பு முழுவதும் அநேக சிறு சுண்ணாம் புத் தகடுகளாலானது. இச்சுண்ணாம்புத் தகடுகள் இணைப்புத் திசுக்களால் இணைக்கப்பட்டு எளிதில் வளையக்கூடிய சட்டமாக அமைந்து ஓர் எலும்புக் போல் கூடு செயலாற்றுகின்றன. இச்சட்டகத் திலிருந்து சிறு சிறு முடிச்சுகள், முட்கள், கரடு முர டான திட்டுகள் ஆகியவை வெளியே துருத்திக் கொண்டிருக்கின்றன. முட்களுக்கு இடை இடையே காம்புடைக் கிடுக்கிகள் எனப்படும் நுண் உறுப்புகள் பல உள்ளன. இவற்றின் அடிப்பாகம் காம்பு போன்றும் மேல்பாகம் கத்தரிக்கோல் போலுமிருப்ப தால் இந்நுண் இடுக்கிகள் கடல் நட்சத்திரத்தின் உடல் மீது அவ்வப்போது வந்தடையும் தூசுப் பொருள்களை எளிதில் அகற்றி விடுகின்றன. இதன் உடலிலுள்ள சுண்ணாம்புத் தகடுகளுக்கு நடுவே காணப்படும் பை போன்ற தோல் உறுப்புகள் சுவா சக் குழாய்களாகச் செயல்படுகின்றன. பொதுவாகக் கடல் நட்சத்திரங்களுக்கு ஐந்து கைகள் இருப்பினும் சிலவற்றிற்கு ஐந்திற்கும் குறை வான அல்லது மேற்பட்ட கைகள் உள்ளன. இந்தியக் கடல்களின் வசிக்கும் அஸ்ட்டிரியஸ் (asteries), மேற் கிந்தியத் தீவுகளில் காணப்படும் எக்கினாஸ்டர் எக்கினோஃபோரஸ் (echinaster echinophorus), மெயின் எனும் கடற்கரையில் காணப்படும் டினோ டிஸ்கஸ் கிரிஸ்பாடஸ் (ctenodiscus crispodus), ஆகிய கடல் நட்சத்திரங்கள் ஐந்து கைகளையுடையன வாயும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ப்யூகட் சவுண்டு (puget sound) எனும் இடத்தில் காணப் படுகிற லெப்டாஸ்ட்டிரியஸ் ஹைக்சாக்ட்டிஸ் (leptas trias hexactis) ஆறு கைகளையுடையனவாயும் அதே இடத்தில் காணப்படுகின்ற சூரிய காந்தி போன்று தோற்றமளிக்கும் சூரிய நட்சத்திரம் (sun star) எனப் படும் க்ராஸாஸ்டர் பேப்போசஸ் (crossaster papposus) பதின்மூன்று கைகளையுடையனவாயும், வட துருவ சூரிய நட்சத்திரம் என்றழைக்கப்படும் சோலாஸ்டர் எண்டிகா (solaster endica) ஒன்பது கைகளையுடையனவாயும் இருக்கின்றன. முள் தோலிகளுக்கேயுரிய சிறப்பியல்பு யாதெனில் இவற்றில் வியத்தகு வண்ணம் செயல்படுகிற நீர்க் குழல் மண்டலம் ஆகும். இவ்வமைப்பானது பின்வரும் பாகங்களைக் கொண்டது. (1) வாய்த் துவாரத்தைச் (mouth opening) சுற்றியுள்ள ஓர் ஐங்கோணக் குழல் வளையம் (ring canal) (2) இக்குழல் வளையத்தி லிருந்து தொடங்கி ஐந்து ஆரங்களினூடே செல்லும் ஐந்து ஆர ஆம்புலாக்சுரல் குழல்கள் (radial ambu- lacral) (3) ஒவ்வோர் ஆரக் குழலிலிருந்தும் பிரியும் பக்கக் கிளைக் குழல்கள்(radial canals) (4) ஒவ்வொரு கல்சல்லடைத் தட்டு ஈல்குழல் டிட்மென்ஸ் உறுப்பு போலியன் பை குழல் வளையம் ஆம்புலேக்ரல் குழல் ஆரக்கிளைக் குழல் நீர்ப்பை குழல்கால் படம் 1. நீர்க்குழல் மண்டலம் கிளைக் குழலோடும் இணைந்துள்ள ஓர் நீர்ப்பை (podiua or ampulla) (5) உடலுக்கு வெளியே ஆம் புலாக்கரல் பள்ளத்தின் வழியே நீட்டிக் கொண்டிருக் கிற ஒவ்வொரு நீர்ப்பையுடனும் இணைந்துள்ள குழாய்க் கால்கள் (tube feet) (6) வாய் எதிர் பக்கத் தின் (aboral surface) ஓர் இடை ஆரத்தில் (inter radies) காணப்படும் பல நுண் துளைகளுடன் கூடிய ஐங்கோணச் சல்லடைத்திட்டு (madreporite) (7) சுமார் 200 துளைகளையுடைய கற்சல்லடைத் தட்டி லிருந்து தொடங்கும் 200 நுண் குழாய்களும் இணைந்து ஐந்து ஆர இடைப்பகுதிகளில் ஓர் ஆர இடைப்பகுதியில் குழல் வளையத்துடன் (ring canal) இணையும் கல் குழல் (stone canal); (8) குழல் வளையத்துடன் இணைந்துள்ள 4 இணை டிட் மென்ஸ் உறுப்புகள் (tiedmann's bodies) (9)ஒவ்வொரு இணை டிட்மென்ஸ் உறுப்புகளுக்கு நடுவே அமைந் துள்ள போலியன் பைகள் (polian vesicles), டிட் மென்ஸ் உறுப்புகளும் போலியன் பைகளும் கற் சல்லடைத்தட்டு இருக்கும் இடை ஆரப்பகுதி நீங்க லாக மற்ற இடை ஆரப்பகுதிகளில் ஓர் இடை ஆரப் பகுதிக்கு ஒரு பை வீதம் 4 போலியன் பைகளும் தனைச் சுற்றி 8 டிட்மென்ஸ் உறுப்புக்களும் உள்ளன. நீர்குழல் மண்டலத்துக்குள் கடல் நீரானது சல்ல டைத்தகடு, கல் குழல், குழல் வளையம் ஆம்ப்புவாக கரல் குழல்கள், ஆரக்குழல்கள் வழியே புகுந்து நீர்ப் பையை (ampulla) அடைகிறது. இதனால் ஏற்படும் அதிக அழுத்தத்தினால் நீர்ப் பையானது சுருங்கு கிறது. இந்நீர்ப்பை சுருங்கும் போது நீரானது குழாய்க் கால்களுக்குள் (tube feet) செலுத்தப்படவே இக்குழாய்க் கால்கள் நீட்சியடைந்து இதன் அடி பாகத்திலுள்ள ஒட்டுறுப்புகளைப் (suckers) பாறை களில் ஒட்டுப் படி செய்கின்றன. பற்பல குழாய்க்