அஸ்ப்பார்டிக் அமிலம் 761
ஆக்சைடு அவ்வாறே நீருக்குப் பரிமாற்றம் செய்யப் படுகிறது. கழிவு நீக்கம். போலியன் பைகள், டீட்மேன் உறுப்புகள் ஆகியவற்றிலிருந்து உண்டாக்கப்படும் அம்போசைட்டுகள், கழிவுப் பொருள்களை விழுங்கி, தோல் செவுள்கள் மூலமாக நீருடன் சேர்த்து வெளி யேற்றப்படுகின்றன. ஹீமல் மண்டலம். நட்சத்திர மீனின் ஹீமல் மண்டலம் இரத்த ஓட்ட மண்டலத்தை ஒத்தது. இதில் சுழற்சியுறும் ஹீமல் திரவம் கடல் நீரையும் அதனுடன் சேர்ந்துள்ள செல்களையும் கொண்டது. இம்மண்டலத்தில் உள்வாயைச் சூழ்ந்துள்ள பெரி ஹீமல் வளையம், வெளிவாயைச் சூழ்ந்துள்ள பெரி ஹீமல் வளையம், அச்சுச் சிக்கல், அச்சுச் சுரப்பி அச்சுப்பைக் குழிவு, வாய் எதிர்ப்பக்க ஹீமல் வளை யம், இன உறுப்புத் தண்டுகள் ஆகியவை உள்ளன. இம்மண்டலம் கல்கால்வாயுடன் இணைந்து கடல் நீரை உள் வரச் செய்ய உதவும் தலையின் நீட்சி (head process) ஆகும். நரம்பு மண்டலம், 1 புறத்தோல் படல நரம்பு மண்டலம். இது நரம்பு வளையம், ஆரப்புறத் தோல் படல நரம்புச் சிக்கல் ஆகியவற்றை உடையது. 2. வாய் உள்நரம்பு மண்டலம். இதில் லேங்கே நரம் புகள் (lange's nerves) என்பன அடங்கியுளன 3. வாய் எதிர்ப்பக்க நரம்பு மண்டலம். இதில் வாய் எதிர்ப்பக்க நரம்பு வளையமும், ஒவ்வொரு கையிலும் தொடரும் வாய் எதிர்ப்பக்க ஆர நரம்பும் உள்ளன.4.உள்ளுறுப்பு நரம்பு மண்டலம். இது செரிமான மண்டலத்தில் இணைந்துள்ள நரம்புத் தொகுதியாகும். உணர்வுறுப்புகள். கைகளின் முனைகளில் உள்ள உணர் நீட்சிகளின் அடியில் எளிய அமைப்புடைய நிறமிகளைக் கொண்ட கிண்ணம் போன்ற கண் கள் உள்ளன. இக் கிண்ணங்களில் லென்ஸ், விழித் திரை, தண்டுச் செல்கள், நிறச் செல்கள், குறுங் கண்கள் ஆகியவை உள்ளன. முளை உணர் இழை களில் உள்ள உணர்வுச் செல்கள் தொடு உணர் வையும், உணவையும் வேதி உணர்வுகளையும் அறிய வல்லவை. உடற்பரப்பின் மேல் அமைந்துள்ள பல நரம்புணர்வுச் செல்கள் தொடு உணர்வுகளையும் வேதி உணர்வுகளையும் அறிய உதவுகின்றன. இனப்பெருக்கமும் வளர்ச்சியும். இவற்றின் பாலி னங்கள் வேறுபட்டவை. ஆண், பெண் இரண்டிலுமே இன உறுப்புக்கள் ஒரே மாதிரி உள்ளன. ஜோடிகளாக ஹீமல் மண்டலத்திலுள்ள இன உறுப் உள்ளன. னப் புகள் தண்டுகளின் முனைகளில் அ.க-2-96 அவை 5 அஸ்ப்பார்டிக் அமிலம் 761 பெருக்கக் காலங்களில் இவற்றிலிருந்து மிகக் குட் டையான இன உறுப்பு நாளங்கள் தோன்றி வாய் எதிர்ப்பக்கத்தை அடைகின்றன. இதனால் இனச் செல்கள் கடல் நீரில் இடப்பட்டுப் புறக்கருவுறுதல் நடைபெறுகிறது. கருமுட்டைகள் வளர்ந்து பைபின் னேரியா என்னும் வேற்றின உயிரி தோன்றுகிறது. இது இருபக்கச் சமச்சீரமைப்புடைய, நீர் மேல் வாழும் உயிரி. இதற்கு 12 கைகள் உள்ளன. சில காலம் நீந்தி வாழ்ந்த பின் இது மேலும் 3 கைகளை வளர்த்துக் கொள்கிறது. ஒட்டிக் கொள்ள உதவும் இக்கைகளுக்கு ப்ராக்கியோலார் கைகள் எனப் பெயர். இந்த நிலையில் இந்த வேற்றினவுயிரி பிராக் கியோலேரியா (brachiolaria) எனப்படுகிறது. பின்னர், 6 அல்லது 7 வாரங்களுக்குள் இதிலிருந்து இளம் நட்சத்திர மீன் வளருகிறது. மீட்பாக்கமும் தன்னுறுப்பு முறிவும், நட்சத்திர மீன் தற்செயலாகத் தனது உடற்பகுதியை இழக்க நேர்ந் தால் அப்பகுதியை மீண்டும் வளர்த்துக் கொள்ளும். இதற்கு இழப்பு மீட்டல் எனப்பெயர். சில வேளை களில் தனது கை எங்காவது சிக்கிக் கொண்டு மீட்க இயலாமல் இருந்தால், அதனைத் தானாகவே உடைத்து விடும். இதனால் ஏற்பட்ட பிளவு அல்லது துளை உடனே மூடிக் கொண்டு, இழக்கப்பட்ட பகுதியும் விரைவில் வளரும். அஸ்ப்பார்ட்டிக் அமிலம் பா.சீ. இது அஸ்ப்பாராஜிக் அமிலம் (asparagic acid), அஸ்ப்பாராஜினிக் அமிலம் (asparaginic acid), அமி னோசக்சினிக் அமிலம் (aminosuccinic acid) என்றும் வேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. அஸ்ப்பார்ட் டிக் அமிலம் (aspartic acid) இயற்கையில் கிடைக்கக் கூடிய அதிகக் தேவையில்லாத அமினோ அமிலம் (non-essential amino acid); அதிகம் தீங்கு விளைவிக் காதது. இது நிறமற்ற படிக நிலையில் காணப்படு தாகவும், கிறது; நீரில் கரையும் தன்மை கொண்ட ஆல்கஹால், ஈத்தர் (ether) கரைப்பான்களில் கரை யாததாகவும் உள்ளது; ஒளிசுழற்றும் தன்மை கொண்டது. அஸ்ப்பார்ட்டிக் அமிலத்தின் உருகு நிலை 251°C (சிதைவுற்று உருகக் கூடியது). இளம் கரும்புகளி லிருந்தும் (young sugar canes), கரும்புச் சாறிலிருந் தும் இது பெறப்படுகிறது. அஸ்ப்பாராஜினை (aspa- ragine) நீராற்பகுத்தலாலும் (hydrolysis) அம்மோ