பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/797

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஸைகாஸ்‌ சிரை 767

கீழ்முனை. கீழ்முனை வலது பக்கத்தில் வயிற்றி லிருந்து மேலேறும் வயிற்றுச் சிரையும் (Right ascen- ding lumbar veins). வலதுகீழ் விலாச்சிரையும் (Right subcostal veins) இணைவதால் ஏற்படுகின்றது. கீழ்ப் பெருஞ்சிரையிலிருந்து வரும் ஒரு கிளையும் இதனுடன் இணைகிறது. அஸைகாஸ் சிரை உற்பத்தி யிடத்திலிருந்து மார்புக்குள் நுழைகிறது. அப்படிச் செல்லும் போது, அது வயிற்றையும், மார்பையும் பிரிக்கும் உதரவிதானத்தைக் (Diaphragm) கடந்து செல்கிறது. உதரவிதானத் துளைகளில் ஒன்றான பெருந்தமனித் துளை (aoritc opening of diaphragm) வழியாக அது மேலே செல்லலாம். அல்லது உதர விதானத்தின் வலதுதண்டைத்( Right crus)துளைத்துச் செல்லலாம். அல்லது வலது தண்டின் வெளிவிளிம் புக்குப் பின்னால் செல்லலாம். மார்புக்குள் அது மார்பு முள்ளெலும்புகளின் முன்புறமாக மேலேறுகிறது. எட்டாவது அல்லது ஒன்பதாவது முள்ளெலும்பு மட்டத்தில் அதனுடன் சிரை அஸைகாஸ் இணைகிறது.இந்த இணைப்புக்குப் பிறகு அது பெரிய சிரையாகத் தோற்றமளிக்கிறது. அரை நான்காவது அல்லது ஐந்தாவது முள்ளெலும்பு மட்டத்தில் அது வளைந்து முன்னோக்கிச் செல்கிறது. அப்படிச் செல்லும்போது அது வலது நுரையீரலின் மேல் துண்டத்திற்குச் (Upper lobe of the right lung) செல்லும் வலது மேல் துண்டப் பிரிமூச்சுக்குழாயின் (Right upper lobe bronchus) மேலாகவும் செல்கிறது. இப்படி வளைந்து செல்லும் அஸைகாஸ் சிரையின் பாகத்திற்கு அஸைகாஸ் வளைவு (arch of azygos) என்று பெயர். அது முன்புறமாக வளையுமிடம் கதிர் வீச்சுப் படத்தில் மொட்டுப் போல் தெரிவதால் இதை அஸைகாஸ் மொட்டு (azygos knob) என்பர். பின் அது மேல் பெருஞ்சிரையுடன் அதனுடைய பின்பக் சுத்தில் இணைந்துவிடுகிறது. இதனுடன் நெருங்கியிருக்கும் முக்கியமான மற்ற உறுப்புகள் நுரையீரல் (lungs), நுரையீரல் உறை (pleura), மார்பு நிணநீர்க் குழாய் (thoracic duct), பெருந்தமனி (aorta), மூச்சுக் குழாய் (trachea), வலது வேகஸ் நரம்பு (right vagus), உணவுக் குழாய் (oesophagus) என்பன. அஸைகாஸ் சிரையுடன் பல இணைச்சிரைகள் வந்து இணைகின்றன. அவற்றுள் முக்கியமானவை மார்பின் பின் பகுதியிலிருக்கும் பின் இடை விலாச் சிரைகள் (posterior inter costal veins) ஆகும். முத லாவது பின் இடை விலாச் சிரை மட்டும் அஸை காஸ் சிரையுடன் தொடர்பு கொள்வதில்லை. மற் றவை தொடர்பு கொள்கின்றன. உணவுக் குழாயி லிருந்து வரும் சிரைகளும் அஸைகாஸ் சிரையுடன் அஸைகாஸ் சிரை 767 இணைகின்றன. மேலும் மார்பின் நடுச் சுவரிலிருக் கும் (meidastinum) மார்பு நடுச்சுவர் சிரைகளும் mediastinal veins), இதய வெளி உறை(pericardium) யிலிருந்து வரும் இதய வெளி உறைச் சிரைகளும் (pericardial veins), வலது நுரையீரலிலிருந்து வரும் வலது பிரிமூச்சுக் குழாய்ச் சிரைகளும் (right bron - chial veins) இச்சிரையுடன் இணைகின்றன. அத்து டன் முக்கியமாக அரை அஸைகா சிரையும், மூன் றாவது அஸைகாஸ் சிரையும் இணைகின்றன. இதனுடைய ணைச்சிரைகள் மூலமாக சிரை அதிக தொலைவில் இருக்கும், சில முக்கிய மான சிரைகளுடன் தொடர்பு கொள்கிறது. முள் ளெலும்பைச் சுற்றியிருக்கும் உள் வெளி முள்ளெ லும்பு சிரைப் பின்னலுடன் (internal and external vertebral plexus of veins) இது இடை விலாச் சிரை கள் மூலமாகத் தொடர்பு கொள்கிறது. மேலும், வயிற்றிலிருந்து கொழுப்புச் சத்துக்கள் எடுத்துச் செல்லும் மார்பு நிணநீர்க் குழாய் அஸை காஸ் சிரையுடன் அதிக தொடர்பு கொண்டுள்ளது; இத்தொடர்பு மருத்துவச் சிறப்பு வாய்ந்தது. மார்பு நிணநீர்க் குழாயில் எங்காவது அடைப்பு ஏற் பட்டால் கொழுப்புச் சத்துக்கள் அஸைகாஸ் சிரை வழியாகச் செல்லலாம். அசைகாஸின் இரத்த ஓட் சாதாரணமாகக் கீழேயிருந்து இதயத்தை நோக்கி மேலேறும்; இருப்பினும் கீழ்நோக்கி ஓடும் இரத்த ஓட்டமும் இருக்கிறது. டம் அதன் கீழ்முனை கீழ்ப் பெருஞ்சிரையுடன் இணைவதால் இரத்த ஓட்டம் கீழ் நோக்கிச் சென்று, கீழ்ப் பெருஞ்சிரையை அடையவும் செய்கிறது. எதிரான இரு திசைகளில் அஸைகாஸ் சிரையில் இரத்த ஓட்டம் இருப்பது ஒரு சிறப்பாகும். மனி தனின் உடல் நிலையைப் பொறுத்து இரத்த ஒட்டத் தின் திசை மாறுபடும். மேல்பெருஞ்சிரை நோய்வாய்ப்பட்டு அடை படலாம். மார்பு நடுச்சுவர் அழற்சி ஏற்பட்டு (inflammation) வீங்கி மேல்பெருஞ்சிரையை அழுத் தலாம். அல்லது சுருங்கி மேல்பெருஞ்சிரையை இழுக் கலாம். மார்புக்குள் புற்று நோய்க் கட்டிகள் உண் டாகி இச்சிரையை அழுத்தலாம். இந்நேரங்களில் முக்கிய உறுப்புகளான தலை, மார்பு, கைகள் ஆகிய வற்றிலிருந்து வரும் இரத்தம் இதயத்திற்குப்போவது தடைப்பட்டால் ஆபத்து விளையும். அப்படி ஏற் படாமல் அஸைகாஸ் சிரைகள் வழியாக அது கீழ்ப் பெருஞ்சிரையை அடைந்து அதன் மூலம் இதயத் திற்குச் செல்கிறது. அதேபோல் கீழ்ப்பெருஞ்சிரை அடைபடலாம்; மேலே கூறியதுபோல நோய்கள் காரணமாக இ