பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

041 ஒற்றைச் செயல்பாட்டு அமுக்கி HH 둘 ஒற்றைச்சட்டஅமுக்கி இருமைத்தன்செயல்பாட்டு அனி H இரட்டைச் குத்துஅமுக்கி கிடைநிலை அமுக்கி செயல்பாட்டு அமுக்கி I25 몸 V அல்லது Y வகை இருமை நான்கு முனை, நீராவி அமுக்கி H கோண அமுக்கி 0 பகுதி ஆரஅமுக்கி நான்கு முனைமின்னோடி ஓட்ட.அமுக்கிய

படம் 3. நேரிடப்பெயர்ச்சி அழுந்துருள் அல்லது உலக்கை அமுக்கிகளின் கட்டமைப்புகள்

முனை அமுக்கும் ஓரத்திலும் 45° குத்து அமுக்க உறுப்புகள் அமையலாம் (படம் 4). ஒற்றை வணரி அணிகள், கிடை அல்லது குத்துநிலை யில் இரட்டைச் செயல்பாட்டு முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உருளைகளுடன் ஒரே சட்டத்தில் ஒரே நேர்கோட்டில் அமைக்கப்படு கின்றன. இதில் ஒரே ஒரு வணரித்தண்டும், இணைப் புத் தண்டும் குறுக்குத் தலையும் (cross head) அமைந் திருக்கும். V அல்லது Y வகை கோண அணிகள் குத்துக்கோட்டுடன் கோணத்தில் அமைந்த இரண்டு உருளைகளைக் கொண்ட அமுக்கிகள் ஆகும். இதில் ஒரே ஒரு வணரித்தண்டு பயன்படுகிறது. பகுதி ஆர (semi radial) அமுக்கிகள் Y அல்லது V வகை அமுக்கியைப் போன்றனவே. ஆனால் இவற்றில் கிடைநிலையில் அமைந்த இரட்டைச் செயல்பாட்டு உருளைகள் ஒவ்வொரு புறமும் அமைந்திருக்கும், இருமை அமுக்கிகள் (duplex compressors) என்பன இரண்டு இணையான வட்டங்களில் உருளைகள் இணைக்கப்பட்டு ஒரு பொது வணரிஅச்சுத் தண்டில் இயங்குகின்றன. நீராவியால் ஓட்டப்படும் இருமைத் தன்செயல்பாட்டு அணிகளில் நீராவி உருளைகள் காற்று உருளைகளின் கோட்டில் அமைந் திருக்கும். நீராவியால் ஓட்டப்படும் இருமை நான்கு அமுக்கிகளில் ஒன்று அல்லது இரண்டு உருளைகள் சட்டத்தின் ஒவ்வோர் இருக்கும். அதற்கு எதிர்ப்புறமாக

நீராவி உருளைகள் அமைந்திருக்கும். நான்கு முனை மின்னோடியால் (motor) ஒட்டப்படும் அமுக்கி அணிகளில் அமுக்கிச் சட்டகங்களுக்கும் அச்சுத்தண் டுக்கும் நடுவில் மின்னோடி அமைந்திருக்கும். ஊடாட்ட அமுக்கிகள் ஒரு நிமிடத்துக்கு 100 ஆயிரம் பருமன் அடிகள் வெளியேற்றும். இதன் அழுத்தம் சதுர அங்குலத்துக்கு 35 ஆயிரம் பவுண்டுகளாகும். இதைவிட உயர்ந்த அழுத்தமும் அதிக வெளியேற்றக் கொள்ளளவும் உடைய சிறப்பு அமுக்கிகளையும் செய்யலாம். உருளைகளையும் அகக் குளிர்கலன் களையும் குளிர்விக்கக் குளிர் பொருளாகத் தண்ணீர் பயன்படுகிறது. வேறு நீர்மங்களோ குளிர்பதனப் பொருள்களோ கூட இதற்காகப் பயன்படுத்தப்பட லாம்.

அமுக்கியின் வெப்ப இயங்கியல். ஓர் அமுக்கியின் அமுக்கத் திறமை (compression efficiency) இரண்டு கோட்பாட்டியலான செந்தரங்களுடன் ஒப்பிடப்படு கின்றது. அவையாவன, சமவெப்பநிலைச் சுழற்சி (isothermal cycle); மற்றொன்று வெப்பம்ஊராச் சுழற்சி (adiabatic cycle). நடைமுறை அமுக்கியில் இந்த இருவித நிகழ்வுகளில் எதுவுமே நிகழ்வதில்லை. அமுக்கியில் தவிர்க்க முடியாத சில இழப்புகள் ஏற் படுவதே இதற்குக் காரணமாகும். அமுக்க நிகழ்லை, ஓர் அழுத்தம் -பருமன் விளக்கப்படத்தில் காட்டினால்

50 அமுக்கிகள்