772 ஆக்கநிலை அனிச்சைச் செயல்
772 ஆக்கநிலை அனிச்சைச்செயல் கருப்பு வெண்மை நிறம் கொண்டவை. இவை நிலத் தில் இருக்கும் போது நேராக நிற்கின்றன. தண்ணீ ரில் நீந்தும்பொழுது இறக்கைகளின் பாதிப் பகுதி விரிந்த நிலையில் இருக்கும். ஆண் பெண் பறவைகள் சந்திக்கும் போது ஒன்றையொன்று தம் அலகினால் கொத்தி உரசிக் கொள்ளும். சிறு கூழாங்கற்கள், சிப்பிகள் போன்ற வற்றைப் பயன்படுத்தி தம் கூட்டை அமைக்கும். பொதுவாக 2 முட்டைகள் இடும். முதல் முட்டை இட்ட இரண்டு, மூன்று நாள்களுக்குப் பின்னர் இரண்டாவது மூட்டையிடப்படுகிறது. அடைகாக் கும் காலம் சுமார் 32 நாள்கள். குஞ்சுகள் நன்கு வளர்ந்த பின்னரே தாயைப் பிரிந்து தனித்து வாழ் கின்றன. 1940 ஆம் ஆண்டுக்கு முன்னர் இப்பறவையின் அழகான இறகுகளுக்காக மாலுமிகள் வடஅட்லாண் டிக் பகுதியிலுள்ள இவற்றின் இருப்பிடங்களுக்குச் சென்று இவற்றை வேட்டையாடினர். இச்செயலைப் பின்னர் "ஆடுபன்" சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆக்கநிலை அனிச்சைச்செயல் ஒரு தூண்டலுக்கு ஏற்பத் தன்னுணர்வின்றிச் செய் யப்படும் எதிர்ச்செயல் அனிச்சைச்செயல் (reflex action) அல்லது மறிவினை என்று அழைக்கப்படுகிறது. இந்த அனிச்சைச்செயல்கள் பழக்கு அனிச்சைச்செயல் (conditioned reflex or acquired reflex), இயல்பு அனிச் சைச்செயல் (inborn reflex or unconditioned reflex என இருவகைப்படும். விலங்குகளிலும் மனிதர்களி லும் தொடர்ச்சியாக ஏற்படும் அனுபவங்களினாலும் பழக்கங்களினாலும் உருவாக்கப்படும் அனிச்சைச் செயல்கள் பழக்கு அனிச்சைச்செயல்கள் அல்லது அனுபவ அனிச்சைச்செயல்கள் அல்லது ஆக்கநிலை அனிச்சைச்செயல்கள் என்று அழைக்கப்படுகின்றன. பழக்கு அனிச்சைச்செயல்களை உருவாக்கும் தூண் டல் பழக்குத் பழக்குத் தூண்டல் (conditioned stimuks) எனக் கூறப்படும். இயல்பு அல்லது பிறவி அனிச் சைச்செயல்கள் மனிதர் உள்ளிட்ட எல்லாவிதமான உயிரிகளிலும் பிறப்பிலிருந்தே காணப்படுகின்றன. இவற்றை உருவாக்கும் தூண்டல்கள் இயல்புத் தூண்டல்கள் (unconditioned stimuli) என அழைக் கப்படுகின்றன. சுற்றுப்புறச் சூழ்நிலையில் உள்ள சில தூண்டல் கள், குறிப்பிட்ட இயல்புத் தூண்டலுடன் இணைந்து செயல்படும்போது பழக்கு அனிச்சைச் செயல்கள் உருவாக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் இரு வகைத் தூண்டல்களும் இணைந்து செயல்பட்டா லும் பின்னர் இயல்புத் தூண்டல் இல்லாமலே அதன் செயலைப் பழக்குத் தூண்டல் மட்டும் உரு வாக்கிவிடுகின்றது. பாவ்லாவ் (Pavlov, 1849-1936) என்ற ரஷிய உடலியங்கியல் நிபுணரின் ஆராய்ச்சியில் கூறிய எடுத்துக்காட்டின் மூலம் பழக்கு அனிச்சைச்செயல் பற்றி நாம் நன்கு அறிய முடிகிறது. சாதாரணமாக ஒரு நாய்க்கு உணவு அளிக்கும்போது அதன் வாயில் உமிழ்நீர் சுரக்கும். உணவானது வாயிலுள்ள சுவை யரும்புகளைத் தூண்டும்போது உமிழ்நீர் சுரக்கிறது. D- பாவ்லோவின் ஆய்வுக்கருவி