பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/807

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கவளம்‌ (உற்பத்தித்திறன்‌ 777)

படுகின்றது. இதனால், இயற்கையாக இருக்கக்கூடிய ஆக்கவளம் குறைகின்றதெனலாம். அதை கார்பன் - டை - ஆக்ஸைடு, கடல் நீரில், கார்பன் டை ஆக்ஸைடு லிட்டருக்கு 90 மில்லி கிராம் என்ற அளவில் உள்ளது. அண்மைக்கடலிலும் யொட்டிய ஆழம் குறைந்த உப்பாறுகளிலும் இதன் அளவு குறைவுபடலாமே தவிர, ஆழமான அல்லது தூரமான கடலில் அதிக அளவில் இருந்து எப் போதும் தேவைக்கேற்ப கிடைத்துக்கொண்டே இருக் கின்றது. எனவே, கார்பன் டை ஆக்னஸடு இல்லாத தனால் ஆக்கவளம் குறைவு என்ற நிலைக்கே இட மில்லை. உற்பத்தித் திறனைக் கண்டறியும் முறைகள் ஆக்கவளம் பெருக, கடல்நீரில் கரைந்துள்ள கார் பன் டை ஆக்ஸைடு, ஊட்டச்சத்துக்கள், நுண் தாவர மிதவையுயிர்களிலுள்ள பசுங்கணிகங்கள் ஆகியவை காரணங்கள் ஆகும். ஒளிச்சேர்க்கையின் போது உண் டாகும் முப்பொருள்களோடு(மாவுப்பொருள், புரதம், கொழுப்பு) நீரில் வெளியேற்றப்படும் ஆக்சிஜனின் கொண்டு. கடலின் அளவுகளை ஆக்கவளத்தை அறிய முடியும். ஆக்கவளத்தை அறிய உதவும் சில முக்கிய முறைகள் உண்டு. அலகுகளாகக் . பூட்டி முறை அறிதல். ஒளியின்றி ஒளிச் சேர்க்கை இல்லை. தாவர நுண் மிதவைகளின் ஆக்க வளத்தை (உற்பத்தித் திறனை) ஒளிபுகும் ஒளி புகா புட்டிகளால் (light and dark bottle technique) சோதனைகள் நடத்தி அறியலாம். இம்முறை, 1927ஆம் ஆண்டு கார்டர், கிரான் (Gaarder and Gran) ஆகிய விஞஞானிகளால் பயன்படுத்தப்பட் டது. இன்று, பரவலாகப் பயன்பட்டு வருகின்றது. பசுங்கணிகத்தால் அறிதல். நுண் தாவர மிதவை உயிர்களில் பசுங்கணிகங்கள் (chlorophylls) 22 or ளன. இவற்றுள், ஒளிச்சேர்க்கையில் முக்கிய பங் கேற்பது 'ஏ' (a) எனும் பசுங்கணியமே; குறிப்பிட்ட அளவு நீரில் (எடுத்துக்காட்டாக ஒரு லிட்டரில்) எவ் வளவு பசுங்கணிகம் உள்ளது என்று கண்டுபிடித்து ஆக்கவளத்தை அறிந்து கொள்ளலாம். ஏனெனில் பசுங்கணிகத்துக்கும் ஆக்கவளத்துக்கும் நேரடித் தொடர்புண்டு. இம்முறைகள் தவிரக் கார்பன் 14 (C") நுண் தாவர மிதவையுயிர்களின் எண்ணிக்கையைக் கணக் கிடல், அவற்றின் அளவைக் கண்டறிதல், தாவர நுண்ணுயிர் மிதவைகளின் மாவுச் சத்தைக் கண்டறி தல், நீரில் கரைந்திருந்து, பயன்படுத்தப்பட்ட ஊட்டச்சத்துக்களின் அளவைக் கண்டறிதல் போன்ற முறைகளாலும் ஆக்கவளத்தை அறியலாம். பொது வாக, கார்பன் 14 (C14) என்னும் முறை சிறப்பு அ.க-2-98 ஆக்கவளம் (உற்பத்தித்திறன்) 777 உடையது. ஆயினும், அதிலும் பல குறைபாடுகள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. வளம் ஆக்கவளத்தில் தாவர நுண்ணுயிர் மிதவைகள். கடல்களில் கணக்கற்ற வகையான நுண் தாவர மிதவையுயிர்கள் இருப்பினும், ஒவ்வொரு கடலிலும் சில மிதவையுயிர்களே முக்கியமானவை, அலையே, உண்டாக்குபவையுமாகும். தமிழ் நாட்டுக் கடற்கரைகளிலுள்ள இத்தகைய முக்கிய மிதவைகள் காசினோடிஸ்கஸ் (coscinodiscus), பிடல்பியா (bid- dulphia), ஹெமிடிஸ்கஸ் (hemidiscus), டைட்டிலம் (ditylum), ஸ்கெலிட்டோனீமா (skeletonema), ஆஸ்ட்டீ ரியோனெல்லா (asterionella), கைரோசிக்மா (gyro- sigma), புளுரோசிக்மா (pleurosigma), கீற்றோசிராஸ் (chaetoceros), ரைசோசொலினியா (rhuzisikebua) போன்றவையாகும். கடலின் ஆக்கவளத்தில் இவை பெருமளவு பங்கை வகிக்கின்றன. அறிவியலின் ஒரு கால கட்டம் வரை நுண் பின்னல் துணியால் (bolting silk) வடிகட்டப்படும். அளவுள்ள பெரும் நுண் தாவர மிதவையுயிர்களே (net plankton) ஆக்கவளத்துக்குக் காரணமானவை எனப்பட்டது. ஆனால் தற்போது அதி நுண் தாவர மிதவையுயிர்களே (nannophytoplankton) பெருமளவு மொத்த உற்பத்திக்குப் (விழுக்காடு உற்பத்தி வரை) பொறுப்பானவை என ஆய்வுகள் மூலம் அறியப் பட்டுள்ளது. கொச்சியிலுள்ள உப்பாறு, தமிழகத் தின் வெள்ளாறு, வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ஆக்கவள ஆய்வுகள் மூலம், 96 விழுக்காடு வரையான உற்பத்திக்குக் காரண மானவை இவையே என உறுதியாகியுள்ளது. இந்திய நீர்ப்பரப்புகளில் ஆக்கவளம். நமது நாட்டில் தூரக்கடல், அண்மைக்கடல், கண்ட த்திட்டுப் பகுதி, கழிமுகங்கள், சதுப்புநில நீர்ப்பரப்பு, பவளத் திட்டுப் பகுதி ஆகியவற்றில் உற்பத்தித் திறன் பற்றிய ஆய்வுகள் பல நடத்தப்பட்டுள்ளன. இவற் றால், தூரக்கடலைவிட அண்மைக் கடலிலும், அண்மைக் கடலைவிடக் கழிமுகங்களிலும், கழிமுகங் களைவிடச் சதுப்புநிலக் காடுகளிலும் உற்பத்தித் திறன் அதிகமென்று கண்டறியப்பட்டுள்ளது. பொது வாக, நம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உற்பத்தி எவ்வாறுள்ளதென்பதை அட்டவணையில் காண்க (பக்கம் 778). ஆழம் குறைந்த அண்மைக்கடல், கழிமுகம், கழி நீர் {backwater) சதுப்புநிலக் காடுகளிடையே உள்ள உப்பு நீர் ஆகியவற்றை ஒரே காலத்தில் ஆராய்ந்த போதும் சதுப்பு நிலக்காடுகளின் உற்பத்தித் திறனே ஓங்கியிருந்தது உறுதியாயிற்று. இங்கு கண்டறியப் பட்ட அதிக உற்பத்தித் திறன், கனமீட்டர் நீருக்கு, மணிக்கு 837 மில்லி கிராம் கார்பன் ஆகும்.