பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/810

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 ஆக்குதிசுக்கள்‌

780 ஆக்குதிசுக்கள் மிகமுக்கியமான திசுக்களாகும். ஆக்குதிசுக்கள் பொதுவாக எல்லாவகை வாஸ்குலார் தாவரங்களி லும் (vascular plants) காணப்படுகின்றன. இவற்றின் உதவியால்தான் தாவரங்களில் எப்பொழுதும் புது திசுக்கள் உண்டாகி வெவ்வேறு பாகங்கள், உறுப்பு கள் ஆகியவற்றில் வளர்ச்சி தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் ஆராயும் பொழுது, ஆக்குதிசுக்கள் வாஸ்குலார் தாவரங்க ளுக்கே உரித்தான சிறப்பியல்பாகக்காணப்படுவதோ டல்லாமல் இதனால் இவை விலங்கினங்களிலிருந்து வேறுபட்டிருப்பதையும் அறிய முடிகின்றது. மெரிஸ் டம் என்ற சொல் பிரியக்கூடிய என்ற பொருளைக் குறிக்கின்ற மெரிஸ்டாஸ் (meristos) என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் வந்ததாகும். ஆகையால் ஆக்குதிசு எப்பொழுதும் இளமைநிலையிலிருந்து கொண்டு, செல் பிரிவுகள் (cell divisions) ஏற்படு வதின் மூலம் புது ஸெல்களையும், திசுக்களையும் தோற்றுவித்துக் கொண்டிருக்கும். மாறு ஒன்று நிலை இயல்புகள். இவை உயிருள்ள ஸெல்கள். இதன் ஸெல்களில் பிரிதல்கள் (divisions) ஏற்பட்டுப் புது மகவு செல்கள் (daughter cells) உண்டாகின்றன. இவற்றில் ஒரு பகுதி மாற்றங்களுமடையாமல் (undifferentiated) தோற்றுவிகளாக (initials) இருந்து ஸெல் பிரிதல்களடைகின்றன. தோன்றல்கள் (deriva tives) என்று கூறப்படுகின்ற மற்றொரு பகுதி வெவ் வேறு வகைகளிலும் அளவிலும் மாற்றங்களடைந்து (differentiation) பல் வகைத் திசுக்களாக கின்றன. ஆகவே ஒவ்வொரு வகை ஆக்குதிசுவும் இருவகையான செயல்கள் புரிகின்றன. தன்னைத்தானே பெருக்கிக்கொள்வதும், நிறுத்திக் கொள்வதும் மற்றொன்று புதுத்தோன்றல் களை உண்டாக்குவதுமாகும். அமைப்பு பொறுத்த மட்டில், ஆக்குதிசுவிற்கும், முதிர்ச்சியடைந்த உயிருள்ள திசுவிற்கும் அடிப்படை வேறுபாடுகள் இல்லை. செல் பிரிதல்கள் ஏற்படும்பொழுது, ஆக்குதிசுவின் செல்களில் கழிவுப் பொருள்கள் (ergastic substances) பொதுவாகக் காணப்படு வதில்லை. எண்டோபிளாஸ்மிக் வலை (endoplasmic reticulum) குறைந்த அளவில் காணப்படுகின்றது. மைட்டோகாண்டிரியா (mitochondria) எளிய அமைப்புடன் இருக்கும். இவற்றின் நூக்ளியஸ் பெரிது. பெரும்பாலும் மெல்லியதாக இருக்கும். செல் இடைவெளிகள் (intercellular spaces) சாதாரண மாசுக் காணப்படுவதில்லை. எடுப்பான சான்றுக் குழிகள் (vacuoles) இருப்பதில்லை. வகைகள். தாவரங்களில் இவை அமைந்திருக்கு மிடத்தைப் பொறுத்து இவற்றை மூன்று வகைக ளாகப் பிரிக்கலாம். தாவர உறுப்புகளின் நுனியி லிருப்பதை புரோமெரிஸ்டம் அல்லது நுனி ஆக்குதிசு (promeristem or apical meristem) என்றும், உறுப்பு களில் பக்கவாட்டில் சுற்றிலுமிருப்பதைப் பக்க ஆக்குதிசு (lateral meristem) என்றும், நிரந்தரதிசுக் களிடையே (permanent tissue) இருப்பதை இடைப் பட்ட ஆக்குதிசு (intercalary meristem) என்றும் முறையே வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆக்கு திசுவின் விளைவுகளையும், அதனால் உண்டாகும் திசுக்கள், பாகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மற்றொரு வகையான பாகுபாடும் செய்யப்பட்டிருக் கின்றது. தோல் பாகத்தைத் தோற்றுவிக்கும் ஆக்கு திசு புரோட்டோடெர்ம் (protoderm) என்றும், அடிப் படைத் திசுக்களை (foundation or ground tissues) உண்டாக்கும். ஆக்குதிசு அடிப்படை ஆக்குதிசு (ground meristem) என்றும், வரிசையாகவும் அடுக் காகவும் ஏற்படுத்தும் ஆக்குதிசு வரிசை ஆக்குதிசு (rib meristem) என்றும்,அடிப்படை குழல்மய திசுக் களை (primary vascular tissues) உண்டாக்கும் ஆக்குதிசுக்கள் புரோக்கேம்பியம் (procambium) என் றும் கூறப்படுகின்றன. மேலும் இலைகள் உண்டா வதற்கு வேறுசில ஆக்குதிசுக்களும் காரணமாகின்றன. தொடக்க நிலையில் இலைக் காம்புகள் வளர்வதற்கு அடாக்ஸியல் ஆக்குதிசு (adaxial meristem) உதவுகின்றது. இதுபோன்று, விளிம்பு ஆக்குதிசுவினால் (marginal meristem ) இலைப் பரப்பு உண்டாகின்றது. வளரும் இவை களில் திசுக்கள் இணைப்போக்கில் உண்டாவதற்கு இணை ஆக்குதிசு அல்லது தட்டு ஆக்குதிசு (plate meristem) பயன்படுகின்றது. இவ்வாறாக எந்த வகை ஆக்குதிசுவாக இருந்தபோதிலும் வகையான உ அது வளர்ந்து வரும் பாகங்கள், உறுப்புகள், வெவ்வேறு உறுப்புகளின் நுனிப் பாகங்கள் ஆகியவற்றில் இருப்பதைக் காணலாம். ஆக்குதிசுக்கள் தோன்றும் காலத்தைப் பொறுத்து அவற்றைப் பொதுப் படையாகவும், விரிவான அடிப்படையிலும் வகைப் படுத்தலாம். சிலவகை ஆக்குதிசுக்கள் தாவர உறுப்புகளின் தொடக்க வளர்ச்சி நிலையிலிருந்தே செயல்பட்டு வருகின்றன. இவை அடிப்படை ஆக்கு திசுக்கள் (primary meristems) என்று கூறப்படு கின் றன. (எ.கா.புரோட்டோடெர்ம், புரோக்கேம் பியம், அடிப்படை ஆக்குதிசு, வரிசை ஆக்குதிசு), சிலலகை ஆக்குதிசுக்கள் நிரந்தர ஆக்குதிசுக்களி லிருந்தும், அடிப்படை ஆக்குதிசுக்களிலிருந்தும் மாற் றங்களடைந்து வெவ்வேறு காலக்கட்டத்தில் உண் டாகிச் செயல்படுகின்றன. இந்தவகையில் உண்டா கும் ஆக்குதிசுவிற்குப் பிந்திய ஆக்குதிசு (secondary meristem) என்று பெயர். (எ.கா. கேம்பியம் (cam- bium), கார்க் கேம்பியம் (cork cambium) அல்லது ஃபெல்லோஜன் (phellogen). உறுப்பு புரோமெரிஸ்டம் வளர்கின்ற எல்லா களிலும் நுனியில் காணப்படுகின்றது. இது கரு