782 ஆக்சசோல்
782 ஆக்சசோல் ஆக்சசோல் ஐந்து கரியணுக்களையும், இரு நிறைவுறாப் பிணைப் புகளையும் கொண்ட வேற்றணு வளையச் சேர்மங் களில் 1,3 வது இடங்களில் ஆக்சிஜனும், ஹைட்ரஜ னும் இணைந்திருந்தால் அவை ஆக்சசோல்கள் (oxazoles ) எனப்படும். R₁-C-O R-CH-x Rj +R COONH, N N3 R₂ R₂ ஆக்சசோல் நிறமற்ற, எளிதில் ஆவியாகிற காரத்தன்மை குறைவான நீர்மம். இதன் கொதிநிலை 69-70°C. இது நீரிலும் மற்ற கரிமக் கரைப்பான்களிலும் கரையக்கூடியது. பிரிடினைப் போன்ற நெடியுடையது. ஆச்சசோல்கள் வெப்பம், அமில, காரங்களால் அவ்வளவாக பாதிக்கப்படுவ தில்லை. ஆக்சசோலில் உள்ள 4, 5 ஆம் கரியணுக் கள் எளிதில் ஆக்சிஜனேற்றம் நடக்கக் கூடிய இடங்களாகும். பிளாட்டினம் வினையூக்கியைப் பயன் படுத்தியோ அல்லது சோடியம் ஆல்கஹாலைப் பயன் படுத்தியோ ஸைட்ரஜனேற்ற வினை நிகழும்போது டெட்ராஹைட்ரோ பெறுதிகளோ (ஆக்சசோலி டின்ஸ்) அல்லது வேற்றணு வளையம் பிளவுபடுவ தால் உண்டாகும் பொருள்களோ கிடைக்கின்றன. பெறும் முறைகள். 0C-ஹாலோகீட்டோன்கள் அமில் அமைடுகளுடன் வினைபுரிந்து ஆக்சசோல் களைக் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக புரோமோ அசெட்டோனுடன் அசெட்டமைடு வினை புரிந்து 2, 4 - இருமீத்தைல் ஆக்சசோல் உருவாகிறது. H₁CCO NH, CH,-Br+COCH, ↓ 130°C H,C N CH₂ + HBr + H,O லோகீட்டோன்கள் கார்பாக்சிலிக் அசிலங் களின் அம்மோனியம் உப்புகளுடன் வினைபுரியும் போது ஆக்சசோல்கள் டைக்கின்றன. நூலோதி 1. McGraw-Hill Encyclopadeia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. 2. Finar, I.L., Organic Chemistry, Vol. 1, Fourth reprint, ELBS, London, 1982. ஆக்சம்மைட்டு ஆக்சம்மைட்டு (oxammite) என்ற கனிமம் செஞ் சாய்சதுரப் படிகத் தொகுதியில் படிகமாகிறது. இதன் வேதியியல் உட்கூறு அம்மோனியம் ஆக்ச லேட்டு (ammonium oxalate) {NH,), C,Q,2H,O. படிகங்கள் வெள்ளை நிறமாயும் பட்டக வடிவமா யும் அல்லது செவ்விணை வடிவப்பக்கப்பட்டகமாயும் அடியிணை வடிவப் பக்கத்தில் (001) குறைவான கனிமப் பிளவு கொண்டும் காணப்படுகின்றன. இது மிருதுவானது. இதன் அடர்த்தி 1.48 ஆகும். எளிதில் உருகும் தன்மை உடையது. இதன் படிக விளக்க அச்சுகளின் விகிதங்கள் முறையே a : b : c=0. 78: 1: 0.37 ஆக உள்ளது. இது நீரில் கரையும். இது ஒளியியலாக எதிர்மறைக் கனிமம் இதன் ஒளியியல் அச்சுத்தளம் செவ்விணைவடிவ பக்கமாக (100) உள்ளது. இதன் ஒளியியல் அச்சுக்கோணம் optic axial angle) 2V, 62° ஆகும். இக்கனிமத்தின் ஒளி விலகல் எண் விரைவொளி அச்சுக்கு (v) 1.585 ஆகவும் மெதுஒளி அச்சுக்கு (OC) 1.439 ஆகவும் இடையொளி அச்சுக்கு (y) 1,547 ஆகவும் உள்ளது. இதன் ஒளி விரவல் தெளிவானது. நீல ஒளி அச்சின் நீளம் (v) சிவப்பொளி அச்சின் நீளத்தை விட (y) அதிகம் (v>j). து பெரு (Peru) நாட்டிலுள்ள குணாப்பி (Guanape) தீவுகளில் குனோ (Guano) 67 GST MY ஆடத்தில் கிடைக்கிறது.