ஆக்சின்கள் 783
நூலோதி 1. Ford, W.F., Dana's Text Book of Mineralogy, 4th Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Winchell, A.N., Winchell, H., Elements of Opti- cal Mineralogy, 4th Edition, Wiley Eastern Private Limited, New Delhi, 1968. ஆக்சாலிக் அமிலம் து இருகார்பாக்சிலிக் அமில வரிசையில் முதலா வது ஆகும். ஆக்சாலிக் அமிலம் (oxalic acid) ஒரு திண்மப் பொருள். இதன் உருகுநிலை 101.5°C 189.5°C வெப்பநிலையில் இது சிதைவுற்று உருகும். இரு நீர் மூலக்கூறேறிய (dihydrate) ஆக்சாலிக் அமிலத்தைக் கவனமாக உலர வைத்து இதனைப் பெறலாம். 0 H 0=C -O H ஆக்சாலிக் அமிலத்தின் உப்புகள் (ஆக்சலேட்டுகள்) இயற்கையில் எங்கும் நிறைந்துள்ளன. எடுத்துக் காட்டாகப் பொட்டாசியம் ஹைட்ரஜன் ஆக்சலேட் (KHC,O,) ஆக்சலிஸ் குடும்பத் (oxalis family) தாவரங்களிலும், கால்சியம் ஆக்சலேட் (CaC,O,) யூகோலிப்ட்ஸ் மரப்பட்டைகளிலும் உள்ளன. 2 சோடியம் ஆக்சலேட்டானது. மரத்துகள்களை சோடியம் ஹைட்ராக்சைடுடன் சேர்த்து உருக்கும் போது கிடைக்கிறது. சோடியம் ஃபார்மேட்டும் இதேபோல் 300°C வெப்பநிலையில் ஹைட்ரஜன் சூழலில் வெற்றிட உருக்குதல் (vacuum fusion) மூலம் பெறப்படுகிறது. சுக்ரோஸ் (sucrose) அல்லது ஸ்டார்ச்சை நைட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தி ஆக்சிஜனேற்றம் (oxidation) செய்வதால் ஆக்சாலிக் அமிலத்தை நேரிடையாகப் பெறலாம். நீர்த்த கந்தக அமிலம் ஆக்சாலிக் அமில உப்பு களுடன் வினைபுரியும்போது ஆக்சாலிக் அமிலம் வெளிப்படுத்தப்படுகிறது. ஆக்சாலிக் அமிலம் நெசவுத் தொழிலிலும் தோல் தொழிலிலும் நிறம் நீக்கும் பொருளாகப் பயன்படுகிறது. அல்லைல் ஆல்கஹால், ஃபார்மிக் அமிலம் ஆகிய தயாரிப்பில் ஒற்றை கிளிச ரைல் ஆக்சலேட் பயன்படுகிறது. இந்த அமிலம் அடர் கந்தக அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது சமஅளவு கார்பன் மோனாக்சைடும் (CO) கார்பன் ஆக்சின்கள் 783 டைஆக்சைடும் (CO) கிடைக்கின்றன. இந்த அமிலம் எளிதில் ஆக்சிஜனேற்றம் அடையும் தன்மையுடைய தாகையால் இதன் அளவைப் பொட்டாசியம் பெர் மாங்கனேட்டைப் பயன்படுத்தி முறித்தல் சோத னையின் (titration) மூலம் கண்டறியலாம். நூலோதி McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983, ஆக்சின்கள் தனிப்பட்ட ஓர் உயிரினங்களிலிருந்து எண்ணற்ற செல்களினாலான உயர்வகைத் தாவரங்கள் வரை உள்ள எல்லா உயிரினங்களின் வளர்ச்சிக்கும், வளர்ச்சி மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணம் அவற்றில் நுண் அளவில் காணப்படுகின்ற ஒரு வகை வேதிப்பொருளாகும். இது செடியின் ஒரு பாகத்திலுண்டாகி மற்றப் பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பொழுது, அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அல்லது தடைப்படுத்தவும் செய் கின்றது. உயிரினங்களிலெல்லாம் இயற்கையாக (natural)காணப்படுகின்ற இல்வகை வேதிப்பொருள் களுக்கு ஹார்மோன்கள் (hormones) என்று பெயர். இதுபோன்ற செயல்புரிகின்ற செயற்கை கரிமச்சேர் மங்களுமுண்டு (organic compounds). இவை ஆக்சின் கள் (auxins), அல்லது வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள் (growth regulators) அல்லது சீராக்கிகள் என பொதுப் படையாகக் கூறப்படுகின்றன. று வரலாறு.ஹார்மோன்கள் தாவரங்களிலிருக்கின் றன என்ற உண்மை புல் கருத் தண்டுஉறை (coleop- tile) ஒருபக்கமாக ஒளியைநாடி வளைந்து வளர்வதி லிருந்து டார்வினால் (Darwin) 1881 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கருத்தண்டுஉறை நுனியிலுண் டான ஹார்மோன் ஒருபக்க ஒளியினால் எதிர்பக்கத் திற்குக்(அதாவது நிழல் பகுதிக்கு) கடந்து சென்று அங்கு அதிக அளவில் செல்களைத் தோற்றுவிப்பத னால் இந்த வளைவு வளர்ச்சி (growth curvature) ஏற் படுகின்றது என்ற இப்பரிசோதனையின் வாயிலாக நன்கு அறியப்பட்டது. மேலும் கருத்தண்டு உறை யின் நுனியை அகற்றிய பிறகு வளைவு வளர்ச்சிஏற் படுவதில்லை.எப்படி இருந்தபோதிலும், ஹார்மோன் செயல்படுவதற்கு அவை உண்டான பகுதிகளிலிருந்து வேற்றிடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். ஹார்மோன்களின் கடத்தல் (transport) குறிப்பிட்ட