பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/814

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784 ஆக்சின்கள்‌

784 ஆக்சின்கள் சில முறைகளில்தான் ஏற்படும். அதாவது இவை நுனியிலிருந்து கீழ்நோக்கியும் ஒருமணி நேரத்தில் 1 செ.மீ. தூரமும் செல்லும் இயல்புடையது. ஆனால் பல செயற்கை ஆக்சின்கள் இவ்வாறு துருவங்கள் நோக்கி கடப்பதில்லை. எதிர்ப்புறங்களுக்கு ஹார் மோன்கள் கடப்பது, துகள் பரவுதல் (diffusion) அல்லது சைலம் (xylem) திசுவின் மூலம் ஏற்படு கின்றது. உயிரியல் வல்லுநர்களின் கூற்றுப்படி கீழ்க் காணும் வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள் இருக்கின்றன. 1. ஆக்சின்கள் செல்களில் நீள்போக்கு வளர்ச் சியை (elongation) ஏற்படுத்துகின்றன. 2. சைட் டோக்கைனின்கள் (cytokinins) செல் பிரிதல்களை (cell divisions) உண்டாக்குகின்றன. 3. எத்திலீன், (ethylene) தண்டுகள், வேர்கள், ஆகியவற்றில் ஒத்த வளர்ச்சியையும், பெருக்தத்தையும் ஏற்படுத்து கின்றது. 4.தடுப்பான்கள் (inhibitors) வளர்ச்சியைத் தடைப்படுத்துகின்றன. 5. கிப்பரில்லின்கள் (giffore- lins) நாற்றுத் தண்டுகளின் நீள்போக்கு வளர்ச்சியை யும், குறிப்பாகக் குட்டையாக இருக்கின்ற செடிகளை உயரமாக வளரச் செய்வதற்கும் பயன்படுகின்றன. 6. ஃபுளோரிஜன்கள் (florigens) பூக்களைத் தோற்று விக்கக் கூடியவை. இவற்றின் வேதியியல் தன்மை இத்தகையது என்று கூறுவதற்கில்லை. இருந்தபோதி லும் இவையெல்லாம் வளர்ச்சி தொடர்புற்ற மாறு தல்களில் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு வகை யான மாற்றங்களை மேற்கூறப்பட்ட செயல்களுக்கு மாறாக ஏற்படுத்துவதுண்டு. ஆக்சின்கள் இண்டோல் அசெட்டிக் அமிலத்தை indole acetic acid) ஒத்திருக்கின்றன. கிப்பரில்லின் கள், கிப்பரில்லிக் அமிலம் (gifferelic acid) போன்ற இரு டெர்ப்பினாய்ட்கள் (diterpenoids) வகையைச் சார்ந்தது. சைட்டோக்கைனின்கள், ஸியாட்டினை (zeatin) ஒத்த அடினின்கள் போன்றவை. இண்டோல்-3-அசெட்டிக் அமிலம் (TAA)பெரும் பாலும் எல்லா உயர்வகைத் தாவரங்களிலும் இயற் கையாகக் காணப்படுகின்ற ஒருவகை ஆக்சினாகும் என்ற உண்மை 1946 ஆம் ஆண்டு வரை மெய்ப் பிக்கப்படவில்லை. பார்லி (avena sativa L.) நாற்று களில் இண்டோல் அசெட்டிக் அமிலம், இண்டோல்- 3-அசெட்டாமைட் (indole -3 - acetamide), இண் டோல்-3-பைரூவிக் அமிலம் (indole-3-pyruvic acid), எதில் இண்டோல் - 3 - அசெட்டேட்டு (ethyl-3-indoleace- tate), இண்டோலே - 3 - அசெட்டில் அஸ்ப்பார்ட்டிக் அமிலம்(indole-3-acetyl aspartic acid), இண்டோல்-3- அசெட்டோ நைட்ரில் (indole-3-aceto nitrile) எனப் பல சேர்மங்களிருப்பதாகத் தற்காலத்தில் அறியப் பட்டுள்ளது. இந்த இண்டோலிக் வகைச் சேர்மங் கள் மட்டுமல்லாமல் இண்டோலிக் அமிலப் பிரிவைச் சேராத வேறுபல இயற்கை ஆக்சின்களும் இருக்கக் கூடும் என்று ஆராய்ச்சிகளின் வாயிலாகத் தெரிய வருகின்றது. இந்த வகையில் இண்டோல் அசெட்டிக் அமிலம் என்பது தாவரங்களிலிருந்து பிரித்து நன்கு அறியப்பட்டதாகும். இது நுனிவேர்ப்பகுதிகள், மொட்டுகள், இலைகள், மகரந்தம், கனிகள், விதை கள் ஆகியவற்றில் காணப்படுகின்றது. பொதுவாக விரிவடைவதற்கு முன்பு, விரிவடைந்து வரும் தாவர உறுப்புகளின் செல்களும் வீரியத்துடன் வளர்ந்து வரும் மொட்டுகளும் ஆக்சின்களின் இருப்பிடமாக இருக்கின்றன. அப்சிசிக் அமிலமும் (abscisic acid ABA) தாவரங்களின் எல்லாப் பாகங்களிலும் பரவி இயற்கையாகக் காணப்படுகின்ற ஒழுங்குக் கட்டுப் படுத்திகளில் ஒன்றாகும். இது உதிர்தல், வளர்ச்சியை தடைப்படுத்துதல், மொட்டுக்களின் உறக்கநிலை (dormancy), விதை முளைத்தலைக் கட்டுப்படுத்து தல், இலைத்துளைகளை (stomata) மூடச்செய்தல் ஆகிய செயல்களைப் புரிகின்றது. இது செல்களி லுள்ள பச்சையத்தில் (chloroplasts) உண்டாகின்றது. அப்சிசிக் அமிலத்தின் அதிகரிப்பினால் காய்கள் உண்டாவது தடைப்படுகின்றது தாவரங்களும் அவற்றின் பல்வேறு உறுப்புகளும் முதுமையடை கின்றன; பச்சையம் சீரழிகின்றது. செயற்கை ஆக்சின்கள். செயற்கை முறையில் பல ஆக்சின்கள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. (எ.கா. இண்டோல் - 3 பியூட்ரிக் அமிலம் (indole-3-butyric acid IBA); ஆல்ஃபா - நாஃபதலின் அசெட்டிக் அமிலம் (a-naphtholene acetic acid: NAA); 2-4 இருகுளோரோஃபீனாச்சி அசெட்டிக் அமிலம் (2-4-dichlorophenoxy acetic acid-2-4-D); பீட்டா- நாஃப்தாக்சி அசெட்டிக் அமிலம் (P naphtoxyacetic acid NOA). இயற்கை ஆக்சின்களின் செயலைச் செயற்கை ஆக்சின்களின் செயலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இயற்கை ஆக்சின்கள் துருவக் கடத்தல் மூலம் மற்றதைவிட அதிக அளவில் எடுத் துச் செல்லப்படுகின்றன. மேலும் செயற்கை ஆக்சின் களின் செயல் இயற்கை ஆக்சின்களின் செயலை வெவ்வேறு அளவிற்கு ஒத்திருக்கின்றது. ஆக்சின் செயல். இதன் செயலைக் குறித்துப் பல கோட்பாடுகள் (theories) கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு கோட்பாடும் ஆக்சினால் உண் டாக்கப்படுகின்ற பிளவுகளைப் பொறுத்து உண்மை யுடன் ஒத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆக்சின்கள் இயற்பியல் (physical), வேதியியல் (chemical) வினை களைச் செல்களிலும், இவற்றிற்கு அப்பாற்பட்ட அமைப்புகளிலும் (subcellular) ஏற்படுத்துகின்றன. இவற்றின் விளைவாக, செல்களைப் பொறுத்த